Home
News

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்: என்னென்ன நன்மைகள்? வேலிடிட்டி?

ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.

ந்நிறுவனம் ஜியோபோன்

சமீபத்தில் தான் இந்நிறுவனம் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.75 திட்டத்தை அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து தற்போது ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இப்போது ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட்

ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட்

ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தின்வேலிடிட்டி 366 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு 28 நாட்கள் என்கிற சுழற்சிக்கு 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவுடன் மொத்தம் 12 சுழற்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த திட்டத்தில் மாதம் 2ஜிபி அளவிலான டேட்டா நன்மை உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக 24ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில்

அதேபோல் ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் குறிப்பிட்ட டேட்டா நன்மை தீர்ந்த பிறகு இணைய வேகம் 64Kbps ஆகக்குறையும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 50 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர JioTV, JioCinema, JioNews Jiosecurity மற்றும் JioCloud போன்றஆப்களுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த அசத்தலான ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்.

 ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் Jio.com

ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு தற்போது இந்த புதிய ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் Jio.com மூலம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் இந்த திட்டம் அணுக கிடைக்கலாம். அதேபோல் இந்த புதிய திட்டம் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

ஜியோபோன் ரூ.75 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோபோன் ரூ.75 ப்ரீபெய்ட் திட்டம்

சமீபத்தில் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.75 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த ரூ.75 ரீசார்ஜ் திட்டம் தான் அந்நிறுவனம் வழங்கும் மலிவான திட்டம் ஆகும். அதாவது ஜியோபோன்களுக்கான ரூ.39 மற்றும் ரூ.69 திட்டங்களை நிறுத்திய பின்பு தான் இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் ரூ.39 மற்றும் ரூ.69 திட்டங்கள் நிறுத்தப்பட்டது. பின்பு இந்த இரண்டு திட்டங்களும் நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் ஆப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஜியோவின் ரூ.75 ரீசார்ஜ்திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.

ஜியோ நிறுவனத்தின் ரு.75 ரீசார்ஜ் திட்ட

ஜியோ நிறுவனத்தின் ரு.75 ரீசார்ஜ் திட்டம் ஆனது தினசரி 50 எஸ்எம்எஸ் நன்மைகள், வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் 200MB பூஸ்டருடன் மாதத்திற்கு 3GB அளவிலான 4G டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஜியோ கிளவுட், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோநியூஸ், ஜியோ செக்யூரிட்டி போன்ற ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச அணுகல்உள்ளது. கண்டிப்பாக இந்த திட்டம் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.அதேபோல் இந்த ரூ.75 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.விரைவில் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
jio launches Rs 749 prepaid plan: What are the benefits?: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X