Home
News

84 நாட்கள் வேலிடிட்டி உடன் 2 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த Jio.! முழு விவரம்.!

ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது ஜியோ. குறிப்பாக ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளன என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் ஜியோ நிறுவனம் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரூ.739 மற்றும் ரூ.789 ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி பற்றி விவரங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

84 நாட்கள் வேலிடிட்டி உடன் 2 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த Jio!

ஜியோ ரூ.739 திட்டம்: ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.739 ப்ரிபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 126ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளன. மேலும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி, JioSaavn Pro மற்றும் ஜியோ கிளவுட் போன்ற ஆப்ஸ்களுக்கான அணுகலும் கிடைக்கும்.

ஜியோ ரூ.789 திட்டம்: ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.789 ப்ரிபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளன. மேலும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி, JioSaavn Pro மற்றும் ஜியோ கிளவுட் போன்ற ஆப்ஸ்களுக்கான அணுகலும் கிடைக்கும்.

84 நாட்கள் வேலிடிட்டி உடன் 2 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த Jio!

குறிப்பாக ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.739 மற்றும் ரூ.789 ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிக நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக நன்மைகளை வழங்குகிறது என்றே கூறலாம். குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களும் ஜியோ பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். மேலும் இந்நிறுவனத்தின் சில அசத்தலான திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஜியோ ரூ.749 திட்டம் ஆனது 90 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா என மொத்தம் 180 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ அன்லிமிடெட் டேட்டாவை இந்த திட்டத்தில் வழங்குகிறது. தினசரி வழங்கப்படும் 2 ஜிபி டேட்டா வரம்பு முடிந்த உடன் இதன் வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும்.

இந்த ஜியோ ரூ.749 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் ஆகியவை அடங்கும். ஜியோ பயன்பாடுகளின் நன்மைகள் குறித்து பார்க்கையில், அது JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்டவைகள் ஆகும்.

84 நாட்கள் வேலிடிட்டி உடன் 2 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த Jio!

ஜியோ ரூ.899 திட்டம் ஆனது 90 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா என மொத்தம் 225 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ அன்லிமிடெட் டேட்டாவை இந்த திட்டத்தில் வழங்குகிறது. தினசரி வழங்கப்படும் 2.5ஜிபி டேட்டா வரம்பு முடிந்த உடன் இதன் வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும்.

இந்த ஜியோ ரூ.899 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் ஆகியவை அடங்கும். ஜியோ பயன்பாடுகளின் நன்மைகள் குறித்து பார்க்கையில், அது JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்டவைகள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Jio launches Rs 739 and Rs 789 prepaid plans with 84 days validity: Full Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X