Jio அறிமுகம் செய்த ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம்.. எக்கச்சக்க OTT சந்தா.. தினசரி டேட்டா.. எத்தனை நாள் வேலிடிட்டி?
ஜியோ நிறுவனம் ஹேப்பி நியூ இயர் 2026 (Jio Happy New Year 2026) எனும் பெயரில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. அதாவது ரூ.500 ப்ரீபெய்ட திட்டத்தைப் புத்தாண்டை முன்னிட்டு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் அதிக ஓடிடி சந்தா நன்மைகள் கிடைக்கின்றன. இப்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் சலுகைகளைப் பார்க்கலாம்.
ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 500 Prepaid Plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
குறிப்பாக யூடியூப் பிரீமியம், ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிவிஎம், (Amazon PVME), சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி +, சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி (Planet Marathi), ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கோட் (Fancode), சாவ்பால் (Chaupal), போன்ற ஓடிடி சந்தா ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.
கிட்டத்தட்ட அனைத்து OTT சந்தா நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம். எனவே தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் மற்றும் அதிக ஓடிடி சந்தா நன்மையை எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது. அதேபோல் ஜியோ நிறுவனம் ஏற்கனவே ரூ.445 ப்ரீபெய்ட் திட்டங்களிலும் சில ஓடிடி சந்தா நன்மையை வழங்கி உள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகளையும் இப்போது பார்க்கலாம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ 445 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 445 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆகவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும்.

குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் ஜியோ ரூ 445 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்த கஸ்டமர்களுக்கு சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) ஆகிய முன்னணி ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும்.
இதுதவிர சன்நெக்ஸ்ட் (SunNXT), ஹோய்சோய் (Hoichoi), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), பிளானட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode), கான்ச்சா லங்கா (Kanchha Lannka) மற்றும் டிஸ்கவரி பிளஸ் (Discovery+) ஆப்களையும் ஜியோ ரூ 445 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். கூடுதலாக ஜியோகிளவுட் (JioCloud) சந்தாவை இந்த திட்டத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








