ஜியோ நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்: என்னென்ன சலுகைகள்? எத்தனை நாள் வேலிடிட்டி?
ஜியோ நிறுவனம் சமீபத்தில் நீக்கிய ப்ரீபெய்ட் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் சமீபத்தில் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. அதன்பின்பு இந்த மூன்று நிறுவனங்களும் அவ்வப்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் சில சலுகைகளை மற்றும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் ஜியோ நிறுவனம் தற்போது ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஜியோ நிறுவனம் சமீபத்தில் நிறுத்திய
ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தை மீண்டும் அறிவித்துள்ளது. தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கில் இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளதுஜியோ நிறுவனம்.

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.499 ப்ரீபெய்ட திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளையும் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர ரூ.499 ப்ரீபெய்ட் திட்டமானது Disney+ Hotstar அணுகலுடன் வருகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் ஜியோ நிறுவனத்தின் சில ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதுதவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் நன்மை, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச சந்தா உள்ளிட்ட பல்வேறுநன்மைகளை
வழங்குகிறது.

ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்
முன்பு ரூ.666-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.அதன்படி ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில்கிடைக்கிறது.மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

கூடுதல் டேட்டா சலுகை
முன்பு ரூ.888-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.1066-க்கு ரீசார்ஜ் செய்யகிடைக்கும். அதன்படி ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 5ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். முன்பு ரூ.2599-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.3119-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 10ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும்இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








