Home
News

Jio அறிமுகம் செய்த ரூ.459 ப்ரீபெய்ட் திட்டம்.. என்னென்ன நன்மைகள்? எத்தனை நாட்கள் வேலிடிட்டி?

வோடபோன் ஐடியா, ஏர்டெல், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஜியோ (Jio) நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் ஜியோ நிறுவனம் ரூ.459 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரூ.459 யூத் அண்ட் கேமிங் பிளான் (Jio Rs 459 Youth and Gaming plan) என்று அழைக்கப்படும் இந்த திட்டம் அதிவேக டேட்டா பலன்களை பிரீமியம் சமூக ஊடகம் (premium social media) மற்றும் கேமிங் சந்தாக்களுடன் வழங்குகிறது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Jio அறிமுகம் செய்த ரூ.459 ப்ரீபெய்ட் திட்டம்.. என்னென்ன நன்மைகள்?

ஜியோ ரூ.459 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 459 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் கூடுதலாக 5ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே இந்த ஜியோ திட்டம் மொத்தமாக 61ஜிபி டேட்டா வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.459 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்திலும் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்படுகிறது.

அதேபோல் ஜியோ ரூ.459 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஸ்னாப்சாட்+ சந்தா (Snapchat+ subscription), ஜியோகேம்ஸ் மொபைல் (JioGames Mobile), ஃபேன்கோட் (FanCode) போன்றவற்றின் அணுகலும் கிடைக்கும். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud)போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.

ரூ.35100 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா ஜியோ ரூ.459 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இதனுடன் Nano Banana அம்சத்தையும் பயன்படுத்த முடியும். மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பல நன்மைகள் இந்த புதிய திட்டத்தில் உள்ளன. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரூ.149 திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

Jio அறிமுகம் செய்த ரூ.459 ப்ரீபெய்ட் திட்டம்.. என்னென்ன நன்மைகள்?

ஜியோவின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 149 prepaid plan) ஒரு டேட்டா பேக்கப் ஆகும். குறிப்பாக இதில் ரீசார்ஜ் செய்தால் 10ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் 30 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது ஜியோ திட்டம். அதேபோல் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். நேரலைப் போட்டிகளை ஸ்ட்ரீம் செய்யவும், கூடுதல் டேட்டா பெறவும் இந்த ஜியோ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ரூ.149 திட்டம் ஆனது டேட்டா பேக் என்பதால், இதைப் பயன்படுத்த உங்களிடம் பின்னணியில் மற்றொரு செயலில் உள்ள ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும். குறிப்பாக 90 நாட்களுக்கு ஓடிடி மற்றும் 10ஜிபி டேட்டா இந்த திட்டம் கொடுப்பதால் இந்த திட்டத்தில் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Jio launches Rs 459 Youth and Gaming plan: check validity and benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X