Home
News

ஜியோ அறிமுகம் செய்த ரூ.450 ப்ரீபெய்ட் திட்டம்.. என்னென்ன சலுகைகள்? எத்தனை நாட்கள் வேலிடிட்டி?

ஜியோ (jio) நிறுவனம் பண்டிகையை முன்னிட்டு ரூ.450 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.450 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 450 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 36 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 72ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் பயன்படுத்தலாம்.

ஜியோ அறிமுகம்  செய்த ரூ.450 ப்ரீபெய்ட் திட்டம்.. என்னென்ன சலுகைகள்?

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.450 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்..

அதேபோல் ஜியோ ரூ.450 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா (JioHotstar Subscription) மூன்று மாதங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக மொபைல் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் இந்த ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மூன்று மாதங்களுக்கு சந்தா கிடைப்பதால், இந்த திட்டத்துக்கு கிடைத்துள்ள 36 நாட்கள் வேலிடிட்டி முடிந்தவுடன் அடுத்த 48 மணி நேரத்துக்குள் புதிய ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதை செய்தால் மட்டுமே 36 நாட்களுக்கு பிறகும் வழக்கம் போல ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஜியோ திட்டத்தில் லைவ் டிவி சேனல்கள் மற்றும் பிரீமியம் ஓடிடி சந்தாவை தரும் ஜியோஹோம் (JioHome)சந்தா கிடைக்கிறது. ஆனால் இந்த சந்தா முதல் 2 மாதங்களுக்கு மட்டுமே இலவசமாக கிடைக்கும். இரண்டு மாதம் முடிந்த பிறகு கட்டணம் செலுத்தி திட்டத்தைத் தொடர்ந்து கொள்ளலாம். பின்பு இதில் வைஃபை டேட்டா (Wi-Fi Data) மற்றும் வைஃபை காலிங் (Wi-Fi Calling) சலுகைகளும் கிடைக்கும். மேலும் ஜியோ நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 500 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆகவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ அறிமுகம்  செய்த ரூ.450 ப்ரீபெய்ட் திட்டம்.. என்னென்ன சலுகைகள்?

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதுதவிர யூடியூப் பிரீமியம், ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிவிஎம், (Amazon PVME), சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி +, சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி (Planet Marathi), ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கோட் (Fancode), சாவ்பால் (Chaupal), போன்ற ஓடிடி சந்தா ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio launches Rs.450 prepaid plan for the festival: check validity and benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X