Home
News

தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ.!

ஜியோ நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனம் 5ஜி சோதனையை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது, விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ம் ரூ.3499 ப்ரீபெய்ட்

தற்போது ஜியோ நிறுவனம் ரூ.3499 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த திட்டம் ஒரு வருடத்திற்கான வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. அதேபோல் இது ரிலையன்ஸ் ஜியோவின் விலை உயர்ந்த ப்ரீபெய்ட் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.3499 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.3499 ப்ரீபெய்ட் திட்டம்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ரூ.3499 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. மேலும் இந்த
புதிய ப்ரீபெய்ட் திட்டம் அந்நிறுவனம் வலைத்தளம் மற்றும் மைஜியோ செயலியில் அப்டேட் செய்ப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரூ.3499 திட்டத்தில் தின

இந்த புதிய ரூ.3499 திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளதால் கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருகக்கும். மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக 1095ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ.3499 திட்டத்துடன்

குறிப்பாக ஜியோ ரூ.3499 திட்டத்துடன் ஜியோசினிமா, ஜியோநியூஸ், ஜியோடிவி, ஜியோசெக்யூரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது. ஆனாலும் நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5 போன்ற ஒடிடி தளங்களுக்கான சந்தா
எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோபோன் நெக்ஸ்ட்

ஜியோபோன் நெக்ஸ்ட்

அண்மையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழி பெயர்ப்பு, சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது இந்த அட்டகாசமான ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம். மேலும் இந்த சாதனத்தில் ஹை-பில்டர் ஸ்மார்ட் கேமரா வசதியும் உள்ளது எனத் தெரிவித்தார் முகேஷ் அம்பானி.மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ள, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு சிறப்பு பதிப்பான கோ

அதாவது ஆண்ட்ராய்டு சிறப்பு பதிப்பான கோ எடிஷனில் தான் ஜியோபோன் நெக்ஸ்ட் இயங்குகிறது எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஏற்கனவே சந்தையில் விற்பனை செய்யப்படும் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் சாதனம் போல் தான் இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி சாதனமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தில் 1ஜி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரிகார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

 ஜியோபோன் நெக்ஸ்ட்

வெளிவந்த தகவலின்படி, ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் பின்புறம் 12எம்பி கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே செல்பீ கேமரா ஒன்றும் இதில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் பின்புற கேமரா ஆனது 1080 பிக்சல் வீடியோ பதிவு ஆதரவு, portrait mode உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஜியோபோன் நெக்ஸ்டின் அதிகாரப்பூர்வ படங்களின்படி, ஸ்மார்ட்போனில் எளிதில் திறக்கக்கூடிய பேக் கேஸ் இருக்கும்,எனவே இந்த சாதனம் மாற்றக்கூடிய பேட்டரியைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. JioPhone மற்றும் JioPhone 2 ஐப் போலன்றி, JioPhone Next பல வண்ண விருப்பங்களிலும் கிடைக்கும்

யோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின்

இது தவிர, ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் இரண்டு ஸ்லாட்டுகளிலும் 4 ஜி ஆதரவுடன் இரட்டை சிம் கார்டு ஸ்லாட்டுகளை வழங்க வாய்ப்புள்ளது. குறிப்பாக ஜியோ சிம் கார்டு மற்றும் ஜியோ நெட்வொர்க்குடன் மட்டுமே செயல்படும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த சாதனம் ரூ.5000 அல்லது ரூ.6000 விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
jio launches Rs 3,499 prepaid plan that offers 3GB of data per day: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X