Home
News

Jio அறிமுகம் செய்த ரூ.1028 மற்றும் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. என்ன வித்தியாசம்? என்னென்ன நன்மைகள்?

ஜியோ நிறுவனம் அவ்வப்போது புதிய சலுகைகள் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஜியோ அறிமுகம் செய்த ரூ.1028 மற்றும் 1029 ப்ரீபெய்ட் திட்டங்களில் உள்ள வித்தியாசம் என்ன? நன்மைகள் என்னென்ன மற்றும் இந்த திட்டங்களில் எது சிறந்தது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.1028 ப்ரீபெய்ட் திட்டம்(Jio Rs 1028 prepaid recharge plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோவின் ரூ.1028 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு ரூ.50 கேஷ்பேக் மற்றும் 3 மாதங்களுக்கான ஸ்விக்கி ஒன் லைட் சந்தாவும் வழங்குகிறது இந்த திட்டம்.

Jio அறிமுகம் செய்த ரூ.1028 மற்றும் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டங்கள்..

மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அதன்படி ஜியோ ரூ.1028 திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும் கிடைக்கும். ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 1029 prepaid recharge plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ நிறுவனத்தின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

குறிப்பாக 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ லைட் (Amazon Prime Lite) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம். மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

Jio அறிமுகம் செய்த ரூ.1028 மற்றும் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டங்கள்..

ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேடடா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

எது சிறந்தது? ஜியோவின் ரூ.1028 மற்றும் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டங்கள் டேட்டா, அழைப்புகள், எஸ்எம்எஸ் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரே மாதிரியான பலன்களைத் தான் வழங்குகின்றன. ஆனால் ரூ.1028 திட்டம் கேஷ்பேக் சலுகை மற்றும் ஸ்விக்கி ஒன் லைட் சந்தா வழங்குகிறது. பின்பு ஜியோவின் ரூ.1029 திட்டம் அமேசான் பிரைம் சந்தா வழங்குகிறது. எனவே இந்த திட்டங்களும் சிறந்த திட்டங்கள் தான். பிரைம் வீடியோ சந்தா எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.1029 திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது. பின்பு ஸ்விக்கி ஒன் லைட் சந்தா எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.1028 திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Launches Rs 1028 and Rs 1029 Prepaid Plans: Which is Better? check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X