அடஅட இவ்வளவு இருக்கா.. தினமும் 2GB டேட்டா.. 98 நாட்கள் வேலிடிட்டி.. புது திட்டத்தை கொண்டுவந்த Jio.. என்ன விலை?
சமீபத்தில் ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியோ (vi) நிறுவனங்கள் தங்களின் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தின. அதுவும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் திட்டங்களை விலையை உயர்த்தியதால் மக்கள் கடுமையாக விமர்சனங்களைத் தெரிவித்தும், ட்ரோல் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் ஜியோ நிறுவனம் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஜியோ நிறுவனம் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தை (Jio Rs 999 Plan Details) தான் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் இப்போது நீங்கள் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 98 நாட்கள் ஆகும். எனவே இந்த ஜியோ நிறுவனம் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தம் 196ஜிபி டேட்டா வழங்கும்.

அதேபோல் ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. பின்பு ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். குறிப்பாக நீண்ட நாள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா எதிர்பார்க்கும் பயனர்கள் இதில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
ஜியோ நிறுவனம் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தையும் (Jio Rs 749 Plan Details) கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது. எனவே ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 164ஜிபி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இதில் உள்ளன.

அதாவது ஜியோ நிறுவனத்தின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud ஆகிய நன்மைகளை வழங்குகிறது இந்த புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டம். சரி இப்போது ஜியோ நிறுவனம் நெட்பிளிக்ஸ் சந்தா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.
ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டமானது (Jio Rs 1299 Plan Details) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதாவது இந்த ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவச நெட்பிளிக்ஸ் (Netflix Mobile) சந்தா வழங்கப்படுகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) போன்ற சேவைகளையும் இதில் பயன்படுத்த முடியும்.

ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டமானது (Jio Rs 1799 Plan Details) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டமும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதன்படி இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவச நெட்பிளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) போன்ற சேவைகளையும் இதில் பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications








