Home
News

ஜியோ அறிமுகம் செய்த ரூ.550 மற்றும் ரூ.2000 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. என்னென்ன நன்மைகள்? வேலிடிட்டி?

ஜியோ (Jio) நிறுவனம் ரூ.2000 மற்றும் ரூ.550 ப்ரீபெய்ட் திட்டங்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த திட்டங்கள் OTT பாஸ்களின் (New OTT Pass) பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சந்தா நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த இரண்டு திட்டங்களின் வேலிடிட்டி நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.550 திட்டம் (Jio Rs 500 Plan) ஆனது 1000+ லைவ் டிவி சேனல்களை தருகிறது. அதாவது இதில் பிரீமியம் சேனல்கள் உடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ் (Warner Bros), டிஸ்கவரி ( Discovery), ஈடிவி (ETV) போன்ற பல சேனல்கள் கிடைக்கின்றன.

ஜியோ அறிமுகம் செய்த ரூ.550 மற்றும் ரூ.2000 ப்ரீபெய்ட் திட்டங்கள்..

அதேபோல் இந்த சேனல்களை ஜியோஸ்டார் (JioStar) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆகிய ஆப்களில் பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்த லைவ் சேனல்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ லைட், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi) போன்ற 15 ஓடிடி சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.550 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோவின் ரூ.550 திட்டம் மொத்தமாக 90ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கப்படவில்லை. எனவே ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம்.

ஜியோவின் ரூ.2000 திட்டம் (Jio Rs 2000 Plan) ஆனது 1000+ லைவ் டிவி சேனல்களை தருகிறது. அதாவது இதில் பிரீமியம் சேனல்கள் உடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ் (Warner Bros), டிஸ்கவரி ( Discovery), ஈடிவி (ETV) போன்ற பல சேனல்கள் கிடைக்கின்றன.

அதேபோல் இந்த சேனல்களை ஜியோஸ்டார் (JioStar) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆகிய ஆப்களில் பார்த்துக் கொள்ளலாம். இப்போது இந்தcதிட்டத்தில் கிடைக்கும் ஓடிடி நன்கைளைப் பார்க்கலாம்.

ஜியோ அறிமுகம் செய்த ரூ.550 மற்றும் ரூ.2000 ப்ரீபெய்ட் திட்டங்கள்..

யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ லைட், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi) போன்ற 15 ஓடிடி சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.2000 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோவின் ரூ.2000 திட்டம் மொத்தமாக 365ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கப்படவில்லை. எனவே ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் 1 வருட ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Jio Launches New Rs 550 and Rs 2000 OTT Passes: Check Plans, Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X