Home
News

ஜியோ அறிமுகம் செய்த ரூ.1,799 திட்டம், ஆனால் அசல் விலை ரூ.444 மட்டுமே! சிறப்பு என்னவென்று தெரியுமா?

ஜியோ டிசம்பர் 6ம் தேதிக்கு முன்னதாக, விலைகள் உயருமுன், எதிர்காலத்திற்கான ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்துகொள்ளுமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஜியோ, ஏர்டெல் & வோடபோன் ஐடியாவின் திருத்தப்பட்ட விலை என்ன?

ஜியோ, ஏர்டெல் & வோடபோன் ஐடியாவின் திருத்தப்பட்ட விலை என்ன?

இந்தியாவில் மூன்று முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான - ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்கள் திட்டங்களின் விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளன. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஏற்கனவே திருத்தப்பட்ட விலைகளை வெளியிட்டுள்ள நிலையில், ஜியோ நிறுவனம் எப்பொழுது அதன் திருத்தப்பட்ட விலை விபரத்தை வெளியிடும் என்ற கேள்வி எழுந்திருந்தது?

ஜியோ பயனர்களின் கேள்விக்கான பதில்

ஜியோ பயனர்களின் கேள்விக்கான பதில்

ஜியோ பயனர்களின் கேள்விக்கான பதில் ஒருவழியாக தற்பொழுது கிடைத்துள்ளது. ஜியோ நிறுவனம் டிசம்பர் 6ம் தேதி முதல் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான திருத்தப்பட்ட விலையை அறிவிக்கும் என்று அறிவித்துள்ளது. அதற்கு முன்னதாக மைஜியோ ஆப் வழியாக, எதிர்காலத்திற்கான ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்துகொள்ளுமாறு ஜியோ அறிவித்துள்ளது.

முடிந்த வரை சேமித்துக்கொள்ளுங்கள்

முடிந்த வரை சேமித்துக்கொள்ளுங்கள்

ஜியோ நிறுவனத்தின் திட்ட விலைகள் நிச்சயம் 40 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் மைஜியோ ஆப் மூலம் பயனர்களுக்குத் தேவைப்படும் எதிர்கால ப்ரீபெய்ட் திட்டங்களைச் சரிபார்த்து, பிடித்த திட்டங்களைத் தேர்வு செய்து முடிந்த வரை சேமித்துக்கொள்ளுங்கள் என்று பயனர்களிடம் ஜியோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய ரூ.1,776 ஆல் இன் ஒன் திட்டம்

புதிய ரூ.1,776 ஆல் இன் ஒன் திட்டம்

இப்போது ஜியோ நிறுவனத்தின் ஆல் இன் ஒன் திட்டங்களின் பட்டியலில் மேலும் ஒரு புதிய திட்டத்தை ஜியோ சேர்த்துள்ளது. இந்த திட்டத்தின் மொத்த விலை ரூ.1,776 ஆகும். அடிப்படையில் நான்கு ரூ.444 ரீசார்ஜ்களின் தொகுப்பு தான் இந்த புதிய ரூ.1,799 திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

4 தொகுப்புகளாக ரூ.444 திட்டத்தில் கிடைக்கும் பலன்கள்

4 தொகுப்புகளாக ரூ.444 திட்டத்தில் கிடைக்கும் பலன்கள்

ரூ.444 திட்டத்தை, முன்னதாக சேமிப்புகளுடன் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு இந்த புதிய திட்டம் ஒரு வருட காலத்திற்குச் செல்லுபடியாகும். இத்திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2ஜிபி டேட்டா, ஜியோ - ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஜியோ - மற்ற நிறுவனங்களுக்கான 4000 வாய்ஸ் கால்ஸ் நிமிடங்கள் வழங்கப்படுகிறது.

சேமிப்புடன் கிடைக்கும் சிறந்த சேவை

சேமிப்புடன் கிடைக்கும் சிறந்த சேவை

அதேபோல் தினமும் 100 எஸ்.எம்.எஸ் மற்றும் இதர ஜியோ சேவைகள் வழங்கப்படுகிறது. 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த ரூ.444 திட்டம் நான்கு தொகுப்புகளாக மொத்தம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் தடை இல்லாமல், சேவையைச் சேமிப்புடன் வழங்குகிறது.

மைஜியோ பயன்பாடு அல்லது ஜியோ.காம்

மைஜியோ பயன்பாடு அல்லது ஜியோ.காம்

கட்டண உயர்வுக்கு முன், பயனர்கள் மைஜியோ பயன்பாடு அல்லது ஜியோ.காம் வலைத்தளம் வழியாக ரீசார்ஜ் செய்யப் பரிந்துரைக்கப்படுகிறார்கள். தற்போதைய திட்டம் காலாவதியானவுடன் மட்டுமே இந்த புதிய ரீசார்ஜின் நன்மைகள் செயல்படுத்தப்படும் என்று ஜியோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio launches new Rs 1776 All-in-One prepaid plan : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X