JioPOS மூலம் மற்றவர்களுக்கு ரீசார்ஜ் செய்தால் கமிஷன் கிடைக்கும் - ஜியோ அதிரடி அறிவிப்பு!

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் JioPOS லைட் என்ற புதிய பயன்பாட்டுச் செயலியை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பயன்பாட்டை மக்கள் பயன்படுத்தி ஒரு பயனர் மற்ற பயனர்களின் ப்ரீபெய்ட் இணைப்புகளை ரீசார்ஜ் செய்து கொடுத்து, அதற்கு பதிலாக செய்து கொடுத்த ரீசார்ஜ் உதவிக்குச் சன்மானமாக கமிஷனை தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று ஜியோ அறிவித்துள்ளது. இந்த பயன்பாட்டை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

JioPOS லைட் ஆப்

JioPOS லைட் ஆப்

சமூக ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கும் புதிய JioPOS லைட் என்ற பயன்பாட்டை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய JioPOS லைட் ஆப் தற்பொழுது கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. இந்த புதிய பயன்பாட்டின்படி, எந்தவொரு நபரும் ஜியோவின் கூட்டாளராக மாறலாம், அதேபோல், பிற ஜியோ பயனர்களின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்யவும், அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கும் இந்த பயன்பாடு அனுமதிக்கிறது.

ரீசார்ஜ் செய்ய முடியாமல் தவிக்கும் மக்களுக்கு உதவி

ரீசார்ஜ் செய்ய முடியாமல் தவிக்கும் மக்களுக்கு உதவி

கொரோனா வைரஸ் ஊரடங்கை முன்னிட்டு இந்த புதிய அறிவிப்பை ஜியோ வெளியிட்டுள்ளது. கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருப்பதால் ரீசார்ஜ் செய்ய முடியாமல் தவிக்கும் மக்களுக்கு உதவும் ஜியோ பயனர்களுக்கு இந்த கமிஷன் தொகை பாராட்டு பரிசாக வழங்கப்படுகிறது. இதில் தங்களைப் பதிவு செய்ய விரும்பும் பயனர்களுக்காக ஜியோ பதிவு செயல்முறையை எளிமைப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!

புதிய பயனராக பதிவு செய்வது மிகவும் எளிது

புதிய பயனராக பதிவு செய்வது மிகவும் எளிது

JioPOS லைட் ஆப்பில் புதிய பயனராக பதிவிட நினைக்கும் ​​பயனர்கள், தங்கள் ஆவணங்களின் எந்தவொரு ஹார்டு காப்பி நகலையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றும், அதேபோல், எந்தவிதமான பிஸிக்கல் வெரிஃபிகேஷன் செயல்முறையும் நடத்தப்பட மாட்டாது என்றும் பிளே ஸ்டோரில் உள்ள JioPOS லைட் பயன்பாட்டுப் பக்கத்தில் பயன்ப்பாட்டின் விளக்கத்தின் கீழ் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் செய்து பதிலுக்கு கமிஷனைப் பெறலாம்

ரீசார்ஜ் செய்து பதிலுக்கு கமிஷனைப் பெறலாம்

JioPOS மூலம் Jio உடன் கூட்டுச்சேர்ந்த பிறகு, ஒரு பயனர் மற்ற பயனர்களின் ப்ரீபெய்ட் இணைப்புகளை ரீசார்ஜ் செய்து பதிலுக்கு ஒரு கமிஷனைப் பெறலாம். பிற இணைப்புகளை ரீசார்ஜ் செய்வதற்கான வசதி மைஜியோ பயன்பாட்டில் கிடைத்தாலும், அது ஒருவரின் ரீசார்ஜ் முயற்சிக்கும் கமிஷன் கொடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது. JioPOS பயன்பாடு, Jio இன் ரீசார்ஜ் கூட்டாளர்களுக்கு 4.16% கமிஷனை வழங்குகிறது.

தினசரி 3 ஜிபினு மொத்தம் 84 ஜிபி வேண்டுமா., அப்போ இதான் ஒரே வழி!தினசரி 3 ஜிபினு மொத்தம் 84 ஜிபி வேண்டுமா., அப்போ இதான் ஒரே வழி!

ஜியோ இணைப்பு கட்டாயமா?

ஜியோ இணைப்பு கட்டாயமா?

அதேபோல், கடந்த 20 நாட்களில் பயனரின் வருவாய் மற்றும் பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கவும் JioPOS பயன்பாடு அனுமதிக்கிறது. JioPOS பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து, பின் ஜியோ கூட்டாளராக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் பயனருக்கு ஜியோ இணைப்பு இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

JioPOS  மனி வேலட்

JioPOS மனி வேலட்

பதிவு செய்து உங்களுக்கான JioPOS அக்கௌன்ட்டை உருவாக்கியதும், உங்கள் கணக்கில் இருக்கும் மனி வேலட்டில் ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.2,000 என ஏதேனும் தொகை மாற்றம் செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் ரீசார்ஜ் தொகைகள் நேரடியாக உங்கள்JioPOS அக்கௌன்ட்டைமனி வேலட்டிலிருந்து மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.

பணியாளர்கள் கணினிகளில் இருந்து ஜூம் மென்பொருளை தடைசெய்கிறது கூகுள்.!பணியாளர்கள் கணினிகளில் இருந்து ஜூம் மென்பொருளை தடைசெய்கிறது கூகுள்.!

எவ்வளவு கமிஷன் கிடைக்கிறது?

எவ்வளவு கமிஷன் கிடைக்கிறது?

உங்களுடைய JioPOS மனி வேலட்டில் பணத்தை மாற்றம் செய்தபின் ஜியோ கூட்டாளராக மாறி, ரீசார்ஜ் உதவி தேவைப்படும் நபர்களுக்கான ரீசார்ஜ் உதவியை மேற்கொண்டு, அதற்கான கமிஷன் தொகையை ஜியோ நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள். பயன்பாட்டின் மூலம் பயனர் செலவிடும் ஒவ்வொரு ரூ.100 தொகைக்குப் பிறகு, அந்த பயனருக்கு ரூ.4.166 பைசா கமிஷன் தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தெரிந்த நண்பர்களுக்கும் பகிர்ந்து மற்றவர்களுக்கும் உதவுங்கள்

தெரிந்த நண்பர்களுக்கும் பகிர்ந்து மற்றவர்களுக்கும் உதவுங்கள்

இந்த JioPOS லைட் ஆப் தற்பொழுது கூகிள் பிளே ஸ்டோரில் லைட் பதிப்பில் கிடைக்கிறது. ஜியோவின் இந்த JioPOS லைட் ஆப் தற்காலிகமாக iOS பதிப்பில் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது iOS பயனர்களுக்கு வழக்கம்போல் சோகம் தான். கொரோன ஊரடங்கை முன்னிட்டு ஜியோ எடுத்துள்ள இந்த முயற்சி உண்மையில் பாராட்டத்தக்கது. இந்த செய்தியை உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் பகிர்ந்து மற்றவர்களுக்கும் உதவுங்கள்.

Best Mobiles in India

English summary
Jio Launches JioPOS App For Users To Earn Commission By Recharging Others Numbers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X