அடி தூள்.! Disney+ Hotstar சந்தாவுடன் இனி கம்மி விலையில் 4 புதிய Jio திட்டம்.. இதை யாருமே எதிர்பார்கலையே..
ரிலையன்ஸ் ஜியோ தன் வசம் இந்தியப் பயனர்களை அதிகம் இழுக்கும் நோக்கத்தில் தொடர்ந்து பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் நிறுவனம் இப்போது மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வரும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், ஜியோ வழங்கும் Disney+ Hotstar நன்மை உடன் கிடைக்கும் திட்டங்களின் விலை சற்று அதிகமாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, நிறுவனம் இப்போது 3 மாதம் செல்லுபடியாகும் Disney+ Hotstar சந்தாவை அதன் கம்மி விலை திட்டங்களுடன் சேர்த்துள்ளது.

ஜியோ வழங்கும் Disney+ Hotstar சந்தா எப்படியானது?
இப்போது வரை, Disney+ Hotstar மொபைல் நன்மையை வழங்கும் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களும் ஒரு வருடச் சந்தாவுடன் வருகின்றன. மேலும், பயனர்கள் விரும்புவதை விட இது சற்று விலை அதிகமாக இருக்கிறது. ஆனால், இப்போது நிறுவனம் அறிமுகம் செய்துள்ள நான்கு புதிய திட்டங்கள், மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்திய நான்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ.151, ரூ.333, ரூ.583 மற்றும் ரூ.783 திட்டங்கள் ஆகும். அவை நுகர்வோருக்கு என்ன வழங்குகின்றன என்பதைப் பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ 151 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ. 151 திட்டமானது, பயனர்களுக்கு 8ஜிபி டேட்டாவை வழங்கும் டேட்டா-ஒன்லி திட்டமாகும். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, பயனர்களுக்குச் செயலில் உள்ள அடிப்படைத் திட்டமும் தேவை என்பது கவனிக்கத்தக்கது. இந்தத் திட்டம் பயனர்களுக்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவின் மூன்று மாத சந்தாவைத் தொகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்துடன் உங்களுக்கு அழைப்பு நன்மை மற்றும் SMS நன்மை போன்ற நன்மைகள் கிடைக்காது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ 333 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் வழங்கும் ரூ.333 ப்ரீபெய்ட் திட்டத்தில், பயனர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை போன்ற நன்மைகள் 28 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது. இத்துடன், இந்த திட்டத்தின் பயனர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான மூன்று மாத சந்தாவுடன் ஜியோ பயன்பாடுகளின் சந்தாவும் தொகுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் புதிய வாடிக்கையாளர்களுக்கு பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.583 மற்றும் ரூ.783 திட்டங்கள்
ஜியோ வழங்கும் மூன்றாவது மற்றும் இறுதி புதிய திட்டம் முறையே ரூ.583 விலை மற்றும் ரூ.783 விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களாக வருகிறது. இந்த திட்டத்தின் பலன்கள் பற்றி பார்க்கையில், அவற்றின் செல்லுபடியாகும் தன்மை தவிர, நாம் மேல பார்த்த ரூ.333 திட்டத்திற்கு நேர் சமமானதாகும். ஜியோவின் ரூ.583 திட்டத்தில், பயனர்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டியும், ரூ.783 திட்டத்தில் பயனர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டியும் கிடைக்கிறது. ஆனால், இந்த இரண்டு திட்டங்களுடனும் பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

பிரைம் மெம்பர்ஷிப்பிற்கு தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டுமா?
மேலும் புதிய பயனர்களுக்கு பிரைம் மெம்பர்ஷிப்பிற்கு ரூ.100 வசூலிக்கப்படும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். தொழில்துறையில் உள்ள பிற ப்ரீபெய்ட் திட்டங்கள் எதுவும் தற்போது பயனர்களுக்கு மூன்று மாதங்களுக்கு Disney+ Hotstar மொபைல் திட்டத்தை வழங்கவில்லை. இந்தியாவில் உள்ள மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதுவும் வழங்காத ஒரு சலுகையை இப்போது ஜியோ வழங்கத் துவங்கியுள்ளது. இதன் மூலம் ஜியோவின் பயனர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டும் என்று நம்பப்படுகிறது. இந்த திட்டம் உண்மையிலேயே உங்களுக்குப் பயனளிக்குமா என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications