Home
News

புது ஆஃபர்.. 50 நாட்கள் ப்ரீ.. செட்-டாப் பாக்ஸ்.. வை-பை ரூட்டர்.. 800 டிவி சேனல்.. 12 ஓடிடி.. இது உண்மையா?

ஜியோ ஏர்பைஃபர் (Jio AirFiber) மற்றும் ஃபைபர் திட்டங்களுக்கு மாறும் கஸ்டமர்களுக்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது 50 நாட்கள் இலவச ஆஃபரை (50 Days Free Offer) கொடுத்துள்ளது. 50 நாட்களுக்கு பிறகு கேன்ஷல் செய்யலாம். இது உண்மையா?

கேபிள் டிவிக்கு நிகராக லைவ் சேனல்களை கொடுப்பது மட்டுமல்லாமல், ஓடிடி ஆப்களின் சந்தா மற்றும் வை-பை டேட்டா சலுகைகளை ஜியோ நிறுவனம் கொடுக்கிறது. ஆரம்பத்தில் கஸ்டமர்களை தட்டித் தூக்கும்படி இலவச சலுகையை கொடுக்க தொடங்கியது. இதனால் ஜியோ கொடுக்கிறது என்றால் கஸ்டமர்கள் நம்புகிறார்கள். இப்போது, புது கஸ்டமர்களுக்கு 50 நாட்கள் இலவச ஆஃபரை கொடுப்பதாகவும், இதை பயன்படுத்திவிட்டு பிடிக்கவில்லை என்றால், கேன்சல் செய்து கொள்ளலாம் என்றும் செய்திகள் வருகின்றன.

புது ஆஃபர்.. 50 நாட்கள் ப்ரீ.. செட்-டாப் பாக்ஸ்.. வை-பை ரூட்டர்.. இது?

அதாவது, டெலிகாம்டால்க் (TelecomTalk) போன்ற செய்தி தளங்கள் மற்றும் சோஷியல் மீடியாக்களில் இந்த 50 நாட்கள் இலவச சலுகை குறித்த செய்திகள் குறிப்பிட்டப்படுகின்றன. இந்த சலுகை குறித்த போஸ்டரும் ஒன்று வெளியாகி இருக்கிறது. இருப்பினும், ஜியோ நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், ஜியோ நிறுவனம் ஏற்கனவே இதுபோன்ற இலவச சலுகைகளை கொடுத்ததால் அதிகம் கவனம் பெற்று வருகிறது.

அந்த செய்தியில் என்ன இருக்கிறது? இந்த இலவச சலுகை பிப்ரவரி 28ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும். புதிய ஜியோ ஃபைபர் (Jio Fiber) அல்லது ஜியோ ஏர்ஃபைபர் கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், பழைய கஸ்டமர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கிறது. இந்த 50 நாட்களில் லைவ் டிவி சேனல்கள், ஓடிடி ஆப்கள், வை-பை டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் சலுகைகளை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதோடு, டிவைஸ்களும் கொடுக்கப்படுகின்றன.

அதாவது, வை-பை ரூட்டர், ஆண்ட்ராய்டு செட்-டாப் பாக்ஸ் மற்றும் இன்ஸ்டாலேஷன் கிடைக்க இருக்கிறது. இந்த டிவைஸ்கள் கிடைப்பதால், புது கஸ்டமர்கள் ரூ.1,234 செலுத்தி இலவச சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதில் ரூ.979 திருப்பி கொடுக்கப்படும். மீதமுள்ள தொகை அரசு விதிக்கும் வரிக்கு கொடுக்கப்பட்டுவிடும். 50 நாட்கள் முடிந்த பிறகு கஸ்டமர்கள் பிடிக்கவில்லை என்றால் ஃபைபர் திட்டத்தை கேன்சல் செய்யலாம். அதன்பிறகு அந்த தொகை திருப்பிக் கொடுக்கப்படும்.

புது ஆஃபர்.. 50 நாட்கள் ப்ரீ.. செட்-டாப் பாக்ஸ்.. வை-பை ரூட்டர்.. இது?

இதுவே பழைய ஜியோஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் கஸ்டமர்களாக இருந்தால், அவர்கள் இந்த 50 நாட்கள் இலவச ஆஃபரை பெற விரும்பினால், எந்த வித தொகையும் கட்ட வேண்டியது கிடையாது. ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் திட்டங்களுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து 60008 60008 என்ற எண்ணுக்கு "Trial" என்று டைப் செய்து வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பினால் போதும் சலுகை கொடுக்கப்படும்.

என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது? இந்த 50 நாட்கள் இலவச ஆஃபரில் 800+ டிவி சேனல்களை பெற்று கொள்ளலாம். மேலும், 12 ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும். ஆகவே, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஆல்ட்பாலாஜி (ALTBalaji), எபிக்ஆன் (EPICON), ஜியோசினிமா ப்ரீமியம் (JioCinema Premium), ஈராஸ்நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) கிடைக்கிறது.

மேலும், ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரி பிளஸ் (Discovery+) ஷீமாரூமீ (ShemarooMe), டாகுபே (DocuBay) மற்றும் ஈடிவி வின் (ETV Win) போன்ற ஆப்களும் கிடைக்கிறது. இதுபோக வை-பை கால்கள் மற்றும் வை-பை டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இதுபோக வை-பை டேட்டா சலுகையும் கிடைக்கிறது. மேற்கண்ட விவரங்கள் அடங்கிய செய்திகள் இப்போது வெளியாகி வருகின்றன. இருப்பினும், ஜியோ நிறுவனத்தின் வெப்சைட்டை செக் செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Launches 50 Days Free Offer With 800 Live TV Channels 13 OTT For New AirFiber Users Is This True
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X