Home
News

Jio அடுச்சா ஆல் பால் சிக்ஸர் தான்! இந்த 3 புது IPL திட்டத்துடன் 40ஜிபி இலவச டேட்டா!

IPL கிரிக்கெட் போட்டிகள் துவங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 3 அட்டகாசமான ரீசார்ஜ் திட்டங்களை 40ஜிபி வரையான இலவச டேட்டா நன்மையுடன் வழங்குகிறது.

ஜியோ நிறுவனம் எந்த திட்டத்துடன் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். ரிலையன்ஸ் ஜியோ, கிரிக்கெட் ரசிகர்களுக்காக மூன்று புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நடக்கவிருக்கும் ஐபிஎல் (IPL) போட்டியை, மக்கள் டேட்டா பற்றிய கவலையே இல்லாமல் பார்க்க உதவும் படி, நிறுவனம் இப்போது 40ஜிபி வரையிலான டேட்டாவை இலவசமாக வழங்குகிறது.

Jio அடுச்சா ஆல் பால் சிக்ஸர் தான்! 3 புது திட்டம்.. 40ஜிபி இலவச டேட்டா

ஐபிஎல் 2023 (IPL 2023) இன் முதல் போட்டி இந்த மாத இறுதியில், அதாவது மார்ச் 31ம் தேதி அன்று தொடங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் பயனர்களுக்காக மூன்று புதிய டேட்டா ஆட்-ஆன் பேக்குகளையும் அறிவித்துள்ளது. இந்த திட்டங்களை நிறுவனம் "ஜியோ கிரிக்கெட் திட்டம்" என்று அழைக்கிறது. இவை மிக உயர்ந்த டேட்டா சலுகையுடன் நிரம்பியுள்ளது.

இந்த திட்டங்களில் உள்ள பிரீமியம் திட்டம் தினசரி 3 ஜிபி டேட்டா நன்மையுடன், கூடுதல் இலவச டேட்டா வவுச்சர்களுடன் பயனருக்குத் தடையற்ற ஸ்ட்ரீமிங் அனுபவத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது என்று டெலிகாம் நிறுவனமான ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ வழங்கும் 3 புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.999, ரூ.399 மற்றும் ரூ.219 விலையில் வருகிறது.

ஜியோவின் புதிய ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா நன்மை மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டத்தை தேர்வு செய்யும் ஜியோ பயனர்களுக்கு ரூ.241 மதிப்புள்ள வவுச்சரையும் நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. இது உங்களுக்கு 40ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.

Jio அடுச்சா ஆல் பால் சிக்ஸர் தான்! 3 புது திட்டம்.. 40ஜிபி இலவச டேட்டா

அடுத்தபடியா இருக்கும் திட்டம், ரூ.399 விலையில் வருகிறது. இத்திட்டம் உங்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் வருகின்றன. ஜியோவின் ரூ.399 திட்டத்தில் ரூ.61 மதிப்புள்ள இலவச வவுச்சர் மற்றும் 6ஜிபி கூடுதல் இலவச டேட்டாவை இத்திட்டம் வழங்குகிறது. இந்த பேக் நீங்கள் வாங்கியவுடன் 28 நாட்களுக்குப் பிறகு காலாவதியாகிவிடும்.

ஜியோ ரூ.219 பேக் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டமும் தினம் 3ஜிபி டேட்டாவை, அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையுடன் வருகிறது. இந்த திட்டம் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி இலவச டேட்டாவை வழங்கும். இத்துடன் டெலிகாம் நிறுவனம் மூன்று புதிய டேட்டா-ஆன் திட்டங்களையும் அறிவித்துள்ளது.

இது ரூ.222 டேட்டா ஆட்-ஆன் பேக் 50ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது உங்களின் தற்போதைய ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியுடன் செல்லுபடியாகும். ரூ.444 ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் 60 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் 100ஜிபி டேட்டா கிடைக்கிறது. இறுதியாக, ரூ.667 ஜியோ டேட்டா ஆட்-ஆன் பேக் 150ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதற்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த புதிய ஜியோ IPL கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டங்கள் அனைவருக்கும் எப்போது கிடைக்கும்? ரிலையன்ஸ் ஜியோ தனது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை மார்ச் 24ம் தேதி முதல் வாங்குவதற்குக் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது, இந்த திட்டங்கள் அனைத்தும் இன்று முதல் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஜியோ ஆப்ஸ் வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Jio Launches 3 New Cricket Prepaid Plans And Data Add-On Plans For IPL 2023 Fans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X