Home
News

3 புதிய திட்டங்களை அறிமுகம் செய்த Jio.. 365 நாட்கள் வேலிடிட்டி.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. என்ன விலை?

ஜியோ நிறுவனம் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்திற்குப் போட்டியாக பட்ஜெட் விலையில் ஓடிடி, அதிக டேட்டா நன்மைகள் மற்றும் பல சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஜியோ நிறுவனம்.

தற்போது மூன்று அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம். அதாவது ரூ.3662, ரூ.3226, ரூ3225 விலைகளில் தான் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம். ஜியோ அறிமுகம் செய்த இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை நன்மைகளை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

3 புதிய திட்டங்களை அறிமுகம் செய்த Jio.. 365 நாட்கள் வேலிடிட்டி..

ஜியோ ரூ.3662 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3662 plan) ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 2.5ஜிபி டேட்டா உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர சோனி லிவ் மற்றும் ஜீ5-க்கு ((SonyLiv,Zee5) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் கூட உள்ளது.

ஜியோ ரூ.3226 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3226 plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 2ஜிபி டேட்டா உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர சோனி லிவ்-க்கு ((SonyLiv) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் கூட உள்ளது.

ஜியோ ரூ.3225 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3225 plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 2ஜிபி டேட்டா உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜீ5 (Zee5)-க்கு சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் கூட உள்ளது.

குறிப்பாக ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் சில ஓடிடி நன்மைகளுடன் அதிக டேட்டா மற்றும் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களிலும் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல் சமீபத்தில் கூட நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது ஜியோ. இப்போது அந்த திட்டங்களைப் பார்ப்போம்.

3 புதிய திட்டங்களை அறிமுகம் செய்த Jio.. 365 நாட்கள் வேலிடிட்டி..

ஜியோ ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது நெட்ஃபிளிக்ஸ் (மொபைல்) சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரும் வழங்கப்படுகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும். இதுதவிர ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் கூட உள்ளது.

ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது நெட்ஃபிளிக்ஸ் (மொபைல்) சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரும் வழங்கப்படுகிறது. வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும். இதுதவிர ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் கூட உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio launched three prepaid plans offering SonyLiv and Zee5 subscriptions: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X