தினசரி 2ஜிபி டேட்டா.. 84 நாட்கள் வேலிடிட்டி.. புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்த Jio.. என்ன விலை?
ஜியோ நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய ஜியோ நிறுவனம் அதிக ஆர்வம் காட்டுகிறது.
இந்நிலையில் ஜியோ நிறுவனம் புதிய ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஜியோ நிறுவனம் இன்று ரூ.866 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தான் அறிமுகம் செய்துள்ளது. இப்போது ஜியோ அறிமுகம் செய்த இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.866 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் (Jio 866 Prepaid Plan): அதாவது இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் தினசரி டேட்டா வரம்பை மீறிய பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் பயன்படுத்த முடியும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
அதேபோல் ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்ட ஆப்ஸ்களின் அணுகலும் வழங்குகிறது ஜியோ ஜியோ ரூ.866 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர 3 மாத ஸ்விக்கி ஒன் லைட் சந்தாவை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். குறிப்பாக ஜியோ ரூ.866 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
தெரியாதவர்களுக்கு, ரூ.600 மதிப்புள்ள ஸ்விக்கி ஒன் லைட் சந்தாவில் (Swiggy One Lite Subscription) ரூ.149க்கு அதிகமான உணவு ஆர்டர்களுக்கு 10 இலவச ஹோம் டெலிவரிகள், ரூ.199க்கு மேல் உள்ள இன்ஸ்டாமார்ட் ஆர்டர்களில் 10 இலவச ஹோம் டெலிவரிகள் இதில் அடக்கும். இதுதவிர கேஷ்பேக் சலுகைகள், உணவு டெலிவரிகளில் கூடுதல் சலுகைகளை இந்த ஸ்விக்கி ஒன் லைட் சந்தா மூலம் பெறமுடியும்.
குறிப்பாக ஜியோவின் புதிய ரூ.866 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது எக்கச்சக்க சலுகைகளை வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் ஜியோ நிறுவனம் ஒரு வருடம் வேலிடிட்டி தரும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஜியோ ரூ.3662 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர சோனி லிவ் மற்றும் ஜீ5-க்கு (SonyLiv,Zee5) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் கூட உள்ளது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

ஜியோ ரூ.3226 ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். மேலும் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர சோனி லிவ்-க்கு (SonyLiv)சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது.
ஜியோ ரூ.3225 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜீ5 (Zee5)-க்கு சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








