Jio பயனர்களே அடிச்சாச்சு லக்.! இந்த இரண்டுல 1 வாங்கினாலும் 5G இலவசம்.! புது ரீசார்ஜ் 4ஜி பிளான்.!

|

இந்தியாவில் இப்போது 5ஜி (5G) ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. இந்தியாவின் பல இடங்களில் இப்போது 5ஜி சேவை பயன்படுத்தக் கிடைக்கிறது. ஏர்டெல் (Airtel) நிறுவனமும், ஜியோ (Jio) நிறுவனமும் ஒன்றுடன் ஒன்று முந்திக்கொண்டு, அதன் 5ஜி சேவையை நாட்டில் பரவலாக விரிவுபடுத்தி வருகிறது.

சைலெண்டாக Jio அறிமுகம் செய்த 2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்

சைலெண்டாக Jio அறிமுகம் செய்த 2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்

நாடு முழுவதும் 5G வெளியீட்டை விரிவுபடுத்தும் வேலைக்கு மத்தியில், ஜியோ நிறுவனம் இந்தியாவில் இப்போது சைலெண்டாக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ செக்யூரிட்டி (JioSecurity) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான பல்வேறு நன்மைகள் மற்றும் அணுகலைக் கொண்ட ரூ.899 மற்றும் ரூ.349 திட்டங்களை நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ளது.

இது 4ஜி திட்டம் தான்.. ஆனால், 5ஜி இலவசமா கிடைக்கும்.!

இது 4ஜி திட்டம் தான்.. ஆனால், 5ஜி இலவசமா கிடைக்கும்.!

இந்தத் திட்டங்கள் இரண்டுமே 4ஜி (4G) திட்டம் தான் என்றாலும் கூட, இது உங்களுக்கு இலவச 5ஜி அனுபவத்தை அனுபவிக்கக் கூடிய நன்மைகளை வழங்குகிறது.

எப்படி இலவசமாக 5ஜி டேட்டாவை ஜியோ பயனர்கள் பெறலாம் என்பதை இறுதியில் பார்க்கலாம்.

அதற்கு முன்பாக, இந்த 2 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் உங்களுக்கு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

நாளை எந்த படத்திற்கு போனாலும் டிக்கெட் விலை ரூ.99 மட்டுமே.! உடனே 'இப்படி' புக் செய்யுங்க.!நாளை எந்த படத்திற்கு போனாலும் டிக்கெட் விலை ரூ.99 மட்டுமே.! உடனே 'இப்படி' புக் செய்யுங்க.!

முழுசா 30 நாள் மற்றும் 90 நாள் வேலிடிட்டியா?

முழுசா 30 நாள் மற்றும் 90 நாள் வேலிடிட்டியா?

இந்த திட்டங்கள் முழு 1 மாத வேலிடிட்டி மற்றும் முழு 3 மாத வேலிடிட்டி உடன் வருகிறது.

அதாவது, இந்த திட்டம் முறையே 30 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டுள்ளது.

இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினமும் 2.5 ஜிபி டேட்டா போன்ற பல நன்மைகளை இத்திட்டம் வழங்குகிறது.

இதற்கிடையில், ஜியோ 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் 5G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.

பட்ஜெட் பிரியர்களுக்கு ஏன் இது பெஸ்ட் ரீசார்ஜ் பிளான் தெரியுமா?

பட்ஜெட் பிரியர்களுக்கு ஏன் இது பெஸ்ட் ரீசார்ஜ் பிளான் தெரியுமா?

சரி, வாருங்கள் இப்போது நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ. 349 மற்றும் ரூ. 899 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

முதலில் ஜியோ புதிதாக அறிமுகம் செய்துள்ள ரூ. 349 திட்டத்தின் நன்மைகளை பார்த்துவிடலாம்.

அதற்கு பின், ஜியோ புதிதாக அறிமுகம் செய்துள்ள ரூ.899 ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

பட்ஜெட் பிரியர்களுக்கு இந்த ரூ.349 திட்டம் சிறப்பானது. கரணம் இது 1 முழு மாதத்திற்கு (30 நாள்) செல்லுபடியாகிறது.

பூமியின் மிக பழமையான தாவரம்.! 32,000 வருடத்திற்கு பிறகு பூ பூத்தது.! இயற்கையின் அதிசயம்.!பூமியின் மிக பழமையான தாவரம்.! 32,000 வருடத்திற்கு பிறகு பூ பூத்தது.! இயற்கையின் அதிசயம்.!

ஜியோ ரூ. 349 திட்டம்

ஜியோ ரூ. 349 திட்டம்

ஜியோ ரூ 349 ரீசார்ஜ் திட்டம் ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் மொத்த டேட்டா பலன் 75 ஜிபி ஆகும்.

இந்தத் திட்டம் அணைத்து நெட்வொர்க்கிற்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மைகளையும், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது.

இது 30 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது.

இத்துடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலும் கிடைக்கிறது. இது இலவச 5ஜி அணுகலுடன் வருகிறது.

ஜியோ ரூ.899 திட்டம்

ஜியோ ரூ.899 திட்டம்

ஜியோவின் புதிய ரூ.349 திட்டத்தைப் போலவே, புதிய ரூ.899 ஜியோ ரீசார்ஜ் திட்டமும் அணைத்து நெட்வொர்க்கிற்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது.

இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கிறது. இத்திட்டம் தினமும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

இந்த திட்டம் 90 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. மொத்தமாக இந்த திட்டம் 225 ஜிபி டேட்டாவை தருகிறது.

சூரியனில் விழுந்த ஓட்டை.! வெறும் கண்ணுக்கே தெரிகிறதா? ஆபத்தில் பூமி.! பீதியில் விஞ்ஞானிகள்.!சூரியனில் விழுந்த ஓட்டை.! வெறும் கண்ணுக்கே தெரிகிறதா? ஆபத்தில் பூமி.! பீதியில் விஞ்ஞானிகள்.!

5ஜி சேவையை இலவசமாக பயன்படுத்தலாமா? எப்படி?

5ஜி சேவையை இலவசமாக பயன்படுத்தலாமா? எப்படி?

இந்த திட்டமும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான அணுகலை வழங்குகிறது. தினசரி டேட்டா தீர்ந்துவிட்டால், இணைய வேகம் 64Kbps ஆகக் குறையும்.

ரூ.349 திட்டத்தைப் போலவே, தகுதியான பயனர்கள் 5G வெல்கம் ஆஃப்பர் சலுகைக்கு மேம்படுத்தப்படுவார்கள்.

வெல்கம் ஆஃப்பர் கிடைக்கும் பயனர்கள் தாராளமாக 5ஜி சேவையை இலவசமாக பயன்படுத்தலாம். இதுவும் அன்லிமிடெட் என்பது குறிப்பிடத்தக்கது.

இலவசமா 5ஜி.! அதுவும் அன்லிமிடெட் யூசேஜ் மக்களே.!

இலவசமா 5ஜி.! அதுவும் அன்லிமிடெட் யூசேஜ் மக்களே.!

இலவச 5ஜி டேட்டாவை பெற நீங்கள் ஒரு வெல்கம் ஆஃப்பர் தகுதி பயனராக இருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் பகுதியில் 5ஜி சேவை இப்போது இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் இப்போது 5ஜி சேவை பயன்படுத்தக் கிடைப்பதனால், இந்த இலவச சலுகையை மிஸ் செய்யாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ரோபோட்டுக்கு உணர்ச்சி இல்லைனு யார் சனா சொன்னது? 'எல்லாமே' இருக்குனு நிரூபிச்சுட்டாங்க.!ரோபோட்டுக்கு உணர்ச்சி இல்லைனு யார் சனா சொன்னது? 'எல்லாமே' இருக்குனு நிரூபிச்சுட்டாங்க.!

இந்த 2 புதிய ரீசார்ஜ் திட்டங்கள், MyJio ஆப்ஸ் மற்றும் ஜியோ இணையதளம் மற்றும் பிற குறிப்பிடத்தக்கத் தளங்கள் வழியாக ரீசார்ஜ் செய்யக் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Jio launched Rs 349 and Rs 899 prepaid recharge plans with full 1 and 3 month validity

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X