ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்: வருடம் முழுவதும் தினசரி 2.5 ஜிபி டேட்டா, இலவச குரல் அழைப்பு- விலை இதோ!

|

ஜியோ வருடாந்திர செல்லுபடியாகும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோவின் ரூ.2999 திட்டமானது மைஜியோ ஆப் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளில் கிடைக்கிறது. ஜியோவின இந்த திட்ட பலன்களில் வரம்பற்ற குரலழைப்புகள், தினசரி 2.5 ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் அம்சங்களை முழுமையாக பார்க்கலாம். ஜியோவின் இந்த ரூ.2999 புதிய திட்டத்தை தேர்வு செய்யும் போது ஜியோ மார்ட்டிற்கு புதிய தள்ளுபடியை வழங்குகிறது.

புதிய ரீசார்ஜ் திட்டம்

புதிய ரீசார்ஜ் திட்டம்

ஜியோ இந்தியாவின் இந்த புதிய ரீசார்ஜ் திட்டமானது 365 நாட்கள் செல்லுபடியை வழங்குகிறது. அதேபோல் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் ஆனது ரூ.2595 விலையில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. புதிய ஜியோ ரீசார்ஜ் திட்டமானது ரூ.2999 விலையில் கிடைக்கிறது. இந்த புதிய திட்டமானது ரூ.2879 மற்றும் ரூ.4199 என்ற விலைப் பிரிவுக்கு நடுவே கிடைக்கிறது. ஜியோவின் ரூ.2879 திட்டமானது 365 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் ஜியோவின் ரூ.4199 திட்டமானது 365 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. புதிய ரீசாரஜ் திட்டமான ரூ.2999-ல் கிடைக்கும் பலன்கள் மற்றும் நன்மைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ஜியோ ரூ.2999 ரீசார்ஜ் திட்ட பலன்கள்

ஜியோ ரூ.2999 ரீசார்ஜ் திட்ட பலன்கள்

ஜியோ ரூ.2999 திட்டமானது நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டமாகும். இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா என மொத்தம் 912.5 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. அதோடு இந்த திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் உள்ளிட்ட பல இலவச அணுகலை வழங்குகிறது.

20 சதவீத ஜியோமார்ட் மஹா கேஷ்பேக்

20 சதவீத ஜியோமார்ட் மஹா கேஷ்பேக்

ரூ.2999 ஜியோ ரீசார்ஜ் திட்டமானது மைஜியோ ஆப்ஸ், அதிகாரப்பூர்வ இணையதளம், கூகுள் பே, போன்பே, பேடிஎம், மொபிக்விக் போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம் வாங்கலாம். இந்த திட்டம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் "20 சதவீத ஜியோமார்ட் மஹா கேஷ்பேக்" சலுகைகளுடன் வாங்கலாம். கேஷ்பேக் ஜியோமார்ட் வாலட்டில் கிரெடிட் செய்யப்படும். இதை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

குறைந்த விலையில் தினசரி 3 ஜிபி டேட்டா வசதி

குறைந்த விலையில் தினசரி 3 ஜிபி டேட்டா வசதி

குறைந்த விலையில் தினசரி 3 ஜிபி டேட்டா வசதியைப் பெற ஜியோ வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 419 ரீசார்ஜ் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த வகையில், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தம் 84 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். தினசரி டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பிறகு இணைய வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு வசதி மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இலவசமாகக் கிடைக்கிறது.

ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதுதவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் நன்மை, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச சந்தா உள்ளிட்ட பல்வேறுநன்மைகளை வழங்குகிறது.

ரூ.601-ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.601-ப்ரீபெய்ட் திட்டம்

முன்பு ரூ.499-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.601-க்கு ரீசார்ஜ்செய்ய கிடைக்கும்.அதன்படிரூ.601 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா, ஒருவருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 6ஜிபி கூடுதல் டேட்டா உள்ளிட்ட பல்வேறுநன்மைகள்இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்

முன்பு ரூ.666-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

கூடுதல் டேட்டா சலுகை

கூடுதல் டேட்டா சலுகை

முன்பு ரூ.888-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.1066-க்கு ரீசார்ஜ் செய்யகிடைக்கும். அதன்படி ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 5ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். முன்பு ரூ.2599-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.3119-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 10ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும்இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio Launched Rs.2999 Prepaid Plan With 365 Days Validity, 2.5GB Data Per Day and More.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X