தம்பி Airtel.. நீ ரூ.99-க்கு கொடுத்தா அண்ணன் Jio நான் ரூ.86-க்கு கொடுப்பேன்.. போட்டிபோடும் அம்பானி பிளான்..
ஏர்டெல் (Airtel) நிறுவனம் சமீபத்தில் 100 ரூபாய்க்குள் மக்களை மகிழ்விக்கும் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்தது. இந்த திட்டங்கள் இப்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த செயலால் ஜியோ (Jio) நிறுவனம் சற்று அடிவாங்க துவங்கியுள்ளது. ஏற்கனவே அதிகரித்த விலை காரணமாக பல லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ இழந்துள்ளது. இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் பெற, ஜியோ நிறுவனமும் தற்போது 100 ரூபாய்க்குள் நன்மை கிடைக்கும் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூ.99 திட்டம் மற்றும் ரூ. 77 திட்டம் ஆகிய இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களின் நன்மைகள் வெவ்வேறு விதமாக வேறுபடுகின்றன. இருப்பினும், ஏர்டெல் திட்டங்களில் ரூ.99 திட்டம் அன்லிமிடெட் டேட்டா நன்மையை 2 நாள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. அன்லிமிடெட் டேட்டா என்று கூறப்பட்டாலும், இந்த திட்டம் தினசரி 20GB டேட்டாவை வழங்குகிறது. இதன் மூலம் 99 ரூபாயில் 40GB டேட்டா கிடைக்கிறது.

தம்பி Airtel.. நீ ரூ.99-க்கு கொடுத்தா அண்ணன் Jio ரூ.86-க்கு கொடுப்பேன்:
ஏர்டெல்லின் மற்றொரு திட்டமான ரூ.77 திட்டம் 5GB டேட்டா நன்மையை 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இந்த திட்டங்கள் இப்போது இந்தியாவிற்குள் வெறும் 100 ரூபாய்க்குள் கிடைக்கும் சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது. இது ஜியோவின் வியாபாரத்தில் சில தடைகளை ஏற்படுத்துகிறது. காரணம், 100 ரூபாய்க்குள் ஜியோவிடம் இத்தகைய நன்மையுடன் திட்டங்கள் இதுவரை இல்லாமல் இருந்தது.
வியாபாரத்தில் போட்டி என்று வந்துவிட்டால் அம்பானி அடிமட்டம் வரை இறங்கி வேலை செய்வார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே, அந்த வகையில், ஜியோ நிறுவனம் தற்போது 100 ரூபாய்க்குள் புதிய திட்டத்தை வழங்கியுள்ளது. இந்த திட்டம் ஜியோ ரூ. 86 பிளான் (Jio Rs 86 Plan) என்ற பெயருடன் வருகிறது. இந்த திட்டம் ஏர்டெல் வழங்கிய ரூ.99 திட்டத்தை விட கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.
ஜியோ 86 திட்டம் (Jio 86 Plan):
ஜியோ அறிமுகம் செய்துள்ள புதிய ஜியோ 86 திட்டம் (Jio 86 Plan) தினசரி 20GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த நன்மையை நீங்கள் 2 நாட்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஏர்டெல் திட்டத்துடன் ஒப்பிடுகையில், இதன் விலை மிகவும் மலிவானதாக இருக்கிறது. அதேபோல், ஐர்தேல் நிறுவனம் வெறும் 77 ரூபாய்க்கு 5GB டேட்டாவை வழங்கியது. இதற்கு போட்டியாக ஜியோ 69 ரூபாய் திட்டத்தை வழங்குகிறது.
ஜியோ 69 பிளான் (Jio 69 Plan) உங்களுக்கு 6GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இதுவும் உங்கள் அடிப்படை பிளானில் மேல் சிறப்பாக இயங்கும் வகையில் செயல்படுகிறது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் 6GB டேட்டா நன்மை முடிந்த பிறகு, 64Kbps வேகத்தில் நீங்கள் அன்லிமிடெட் டேட்டா நன்மையை பெற முடியும் என்று நிறுவனத்தின் வலைப்பக்க தகவல் தெரிவிக்கிறது. 100 ரூபாய்க்குள் திட்டங்களை தேடும் பயனர்களுக்காக இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக ஜியோ மற்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








