ஜியோ பயனர்களுக்கு ஜாக்பாட்! ஒரே திட்டம் 365 நாளுக்கு அன்லிமிடெட் நன்மை.. பிரைம் சந்தா.. இன்னும் ஏராளம்..
உண்மையிலேயே ஜியோ பயனர்கள் எதோ புண்ணியம் செய்திருக்கிறார்கள். மற்ற எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காத நன்மைகள் எல்லாம் ஜியோ பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஜியோ நிறுவனம் அதன் பயனர்களுக்கு நன்மையை வாரி வழங்கும் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
அந்த வரிசியில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று புதிதாக ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அதன் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம், அதன் பயனர்களுக்கு 365 நாள் செல்லுபடியை வழங்குகிறது. 1 வருடத்திற்கு எந்தவித தடையும் இல்லாத அன்லிமிடெட் சேவையை வழங்குவதோடு, இது இப்போது அமேசான் பிரைம் வீடியோஸ் சந்தாவையும் வழங்குகிறது.

ஜியோ நிறுவனம் சமீபத்தில் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல OTT நன்மைகளுடன் கிடைக்க கூடிய பல ரீசார்ஜ் திட்டங்களை மலிவு விலை முதல் அதிக விலை புள்ளி வரை ரகம் ரகமாக அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் பயனர்களுக்கான அணைத்து வகை OTT உள்ளடக்கத்தை பார்க்க அனுமதிக்க முயற்சித்து வருகிறது. விதவிதமான OTT சேனல்களின் நன்மைகளை அதன் பயனர்கள் பார்க்கவும், அதன் நெட்வொர்க் மூலம் மகிழ்ந்திருக்கவும் ஜியோ முயன்று வருகிறது.
அந்த ஐடியாவுடன் ஜியோ நிறுவனம் இப்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தான், 1 ஆண்டு காலம் செல்லுபடியாகும் புது இயர்லி பேக் திட்டமாகும். இது அணைத்து வகையான நன்மைகளுடன் OTT திட்டத்தைப் பாருங்கள். ரிலையன்ஸ் ஜியோ அதன் பயனர்களுக்காக இன்னும் புதிய OTT திட்டங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ளது.
OTT நன்மைகளுடன் கூடிய புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நெட்ஃபிக்ஸ் (Netflix), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலைவ் (SonyLIV) திட்டங்கள், ஜீ5 (ZEE5) பிளான்ஸ் மற்றும் ZEE5-SonyLIV காம்போ திட்டங்களுடன் பல்வேறு திட்டங்களை வழங்கும் OTT தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ இப்போது, அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்புடன் கூடிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி அமேசான் பிரைம் சந்தா வேண்டும் என்பவர்களுக்கான திட்டமும் ஜியோவிடம் இருந்து வாங்க கிடைக்கும். ஜியோவின் புதிய திட்டம், ரூ.3,227 விலையில், தினசரி 2ஜிபி டேட்டா நன்மையுடன் வருகிறது. இந்த தினசரி டேட்டா வரம்பை மீறியவுடன், இணைய வேகம் வெறும் 64 Kbps ஆக குறைக்கப்படும். ஆனால், இது வரம்பற்ற பயன்பாட்டுடன் கிடைக்கும்.
இந்த திட்டத்தில், பயனர்கள் ஒரு ஆண்டு காலத்திற்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மை போன்றவற்றை பெறுவார்கள். இது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் நீண்ட கால திட்டமாகும். ஜியோவின் ரூ.3,227 திட்டம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சந்தாவுடன் வருகிறது. இத்துடன் ஜியோ டிவி (JioTv), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற தொகுக்கப்பட்ட சேவைகளின் நன்மையையும் கிடைக்கிறது.
கூடுதலாக, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் ட்ரூலி 5ஜி டேட்டா நன்மையையும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது எந்த வரையரையும் இல்லாமல், அதன் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி நெட்வொர்க்கை இலவசமாக வழங்குகிறது. இந்த நன்மை 5ஜி வட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும், எந்தவித இடையூறும் இல்லாமல் அன்லிமிடெட் ஆக நன்மைகளை அனுபவிக்கலாம்.


Click it and Unblock the Notifications








