Home
News

யாரு சாமி நீ.. Jio ரூ.234 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்.. 56 நாட்கள் வேலிடிட்டி.. எக்கச்சக்க நன்மைகள்..

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம். அதேபோல் ஜியோ (jio) நிறுவனம் அவ்வப்போது தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் ஜியோ நிறுவனம் புதிய ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்நிறுவனம் ஜியோபாரத் போன் பயனர்களுக்குத் தான் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ரூ.234 விலையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

Jio ரூ.234 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்.. 56 நாட்கள் வேலிடிட்டி..

ஜியோபாரத் போன் ரூ.234 திட்டம் (JioBharat Phone Rs 234 Plan) ஆனது 56 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 0.5ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ரூ.234 ஜியோபாரத் போன் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது ரூ.234 ஜியோபாரத் போன் திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் 300 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் ஜியோசாவ்ன் (JioSaavn) மற்றும் ஜியோசினிமா(JioCinema)-க்கு இலவச சந்தா வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ ரூ.234 ஜியோபாரத் போன் திட்டம்.

Jio ரூ.234 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்.. 56 நாட்கள் வேலிடிட்டி..

குறிப்பாக ஜியோ ரூ.234 திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டா தீர்ந்துவிட்டால் இணைய வேகம் 64 Kbps-ஆகக் குறைக்கப்படும். அதேபோல் ஜியோசாவ்ன்இ ஜியோசினிமா வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் பல நன்மைகளை இந்த ரூ.234 திட்டம் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே வழங்கிய ஜியோபாரத் போன் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோபாரத் போன் ரூ.123 திட்டம் (JioBharat Phone Rs 123 Plan) 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் தினசரி 0.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 14ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது..

அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது ரூ.123 ஜியோபாரத் போன் திட்டம். மேலும் ஜியோசாவ்ன் (JioSaavn) மற்றும் ஜியோசினிமா (JioCinema)-க்கு இலவச சந்தா வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்துவிட்டால் இணைய வேகம் 64 Kbps-ஆகக் குறைக்கப்படும்.

Jio ரூ.234 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்.. 56 நாட்கள் வேலிடிட்டி..

ஜியோபாரத் போன் ரூ.1234 திட்டம் (JioBharat Phone Rs 1234 Plan) 336 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் தினசரி 0.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் வழங்குகிறது ரூ.1234 ஜியோபாரத் போன் திட்டம். மேலும் ஜியோசாவ்ன் (JioSaavn)மற்றும் ஜியோசினிமா (JioCinema)-க்கு இலவச சந்தா வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்துவிட்டால் இணைய வேகம் 64 Kbps-ஆகக் குறைக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio launched new Rs 234 JioBharat Phone Plan: Check benefits, validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X