Jio சிம் இருக்கா? லக்கு உங்களுக்கு தான்.. ரூ.300-க்குள் சூப்பரான 3 திட்டம்.. என்ன விலை? என்ன நன்மை?
முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் இந்தியாவில் மீண்டும் மலிவு விலை திட்டங்களை அறிமுகம் செய்ய துவங்கிவிட்டது. சமீபத்தில், ஜியோ (Jio) நிறுவனம் 200 ரூபாய்க்குள் பெஸ்டான திட்டங்களை அறிமுகம் செய்தது. இப்போது ஜியோ நிறுவனம் 300 ரூபாய்க்குள் ரீசார்ஜ் (Jio Rs 300 Prepaid Plan) செய்ய கிடைக்கும் சூப்பர் பெஸ்டான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த விலை பிரிவிற்குள் நிறுவனம் 1 அல்ல 2 அல்ல மொத்தம் 3 திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு துறையில் (Indian telecom industries) நடைபெறும் கடுமையான போட்டியை சமாளிக்க ஜியோ நிறுவனம் தற்போது ரூ. 300 விலைக்குள் மூன்று புதிய திட்டங்களை (3 new Jio plans under Rs 300) அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு திட்டமும் குறைந்த விலை வித்தியாசத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இவற்றின் நன்மையில் பல வித்தியாசங்களை ஜியோ நிறுவனம் வழங்கியுள்ளதை நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது.

Jio சிம் இருக்கா? லக்கு உங்களுக்கு தான்.. ரூ.300 விலைக்குள் சூப்பரான 3 ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்:
ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த மூன்று திட்டங்களும் ஏர்டெல் (Airtel), பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் விஐ என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற டெலிகாம் திட்டங்களை சந்தையில் வீழ்த்துமா என்பதை இப்போது பார்க்கலாம். ஜியோ 300 ரூபாய்க்குள் அறிமுகம் செய்துள்ள 3 திட்டங்களின் விபரங்கள் இதோ.
1. ஜியோ ரூ. 199 திட்டம் (Jio Rs 199 Plan):
இந்த திட்டம் தினசரி 1.5GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மை மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மை ஆகியவற்றை ஜியோ வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி (validity) காலம் வெறும் 18 நாட்கள் மட்டுமே. இந்த திட்டத்தின் மூலம் மொத்தமாக 27GB டேட்டா நன்மை கிடைக்கிறது. இத்துடன் கூடுதல் இலவச டேட்டா நன்மையையும் நிறுவனம் வழங்குகிறது.
2. ஜியோ ரூ. 239 திட்டம் (Jio Rs 239 Plan ):
இந்த திட்டம் தினசரி 1.5GB டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மை மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மை ஆகியவை கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி (validity) காலம் வெறும் 22 நாட்கள் ஆகும். இத்துடன் கூடுதல் ஜியோ ஆப்ஸ் சந்தாக்கள் இலவசமாக கிடைக்கிறது.
3. ஜியோ ரூ. 299 திட்டம் (Jio Rs 299 Plan):
ஜியோ தற்போது அறிமுகம் செய்துள்ள இறுதியான திட்டம் இது தான். இந்த திட்டம் தினசரி 1.5GB டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இந்த திட்டமும் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) போன்ற நன்மைகளை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








