Home
News

இனி நம்ம ரேஞ்சே வேற.. சைலன்ட் ஆக 13 புதிய Jio திட்டங்கள் அறிமுகம்.. ரூ.898 முதல் International பிளான்கள்!

Jio Country Specific International Roaming Plans: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது "சத்தமின்றி" மொத்தம் 13 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து திட்டங்களுமே ஜியோவின் இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்கள் தொகுப்பின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது இவைகள் அனைத்துமே - கனடா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) உள்ளிட்ட மிகவும் பிரபலமான டூரிஸ்ட் இடங்களுக்கான பிரத்யேக சர்வதேச ரோமிங் பேக்குகள் ஆகும். எந்தெந்த நாடுகளுக்காக ஜியோ இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன? அவைகளின் விலை மற்றும் நன்மைகள் என்ன? இதோ விவரங்கள்:

ஜியோவின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் தொகுப்புகளில் உள்ளதை போலவே.. ஜியோவின் புதிய இன்டர்நேஷனல் ரோமிங் தொகுப்பின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 13 திட்டங்களும் பல்வேறு வகையான விலைகளில்.. பல்வேறு வகையான வேலிடிட்டியை வழங்குகின்றன. இதன்கீழ் 7 நாட்கள் (1 வாரம்) முதல் 30 நாட்கள் (1 மாதம்) வரையிலான வேலிடிட்டியை உங்களால் தேர்வு செய்ய முடியும்.

இனி நம்ம ரேஞ்சே வேற.. சைலன்ட் ஆக 13 புதிய Jio திட்டங்கள் அறிமுகம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கான (UAE) ஜியோ இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்கள்: இதன்கீழ் உங்களுக்கு 3 விருப்பங்கள் கிடைக்கும். அவைகள் ரூ.898, ரூ.1,598 மற்றும் ரூ.2,998 திட்டங்கள் ஆகும். ரூ.898 திட்டமானது 7 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 100 நிமிட லோக்கல் மற்றும் ஹோம் வாய்ஸ் கால்கள், 100 நிமிட இன்கம்மிங் கால்கள், 1 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கும்.

அடுத்ததாக உள்ள ரூ.1,598 திட்டமானது 15 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 150 நிமிட லோக்கல் மற்றும் ஹோம் வாய்ஸ் கால்கள், 150 நிமிட இன்கம்மிங் கால்கள், 3 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கும். கடைசியாக உள்ள ரூ.2,998 திட்டமானது 21 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 250 நிமிட லோக்கல் மற்றும் ஹோம் வாய்ஸ் கால்கள், 250 நிமிட இன்கம்மிங் கால்கள், 7 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கும்.

தாய்லாந்துக்கான (Thailand) ஜியோ இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்கள்: இதன்கீழ் உங்களுக்கு 2 விருப்பங்கள் கிடைக்கும். அவைகள் ரூ.1,551 மற்றும் ரூ.2,851 திட்டங்கள் ஆகும். ரூ.1,551 திட்டமானது 14 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 100 நிமிட லோக்கல் மற்றும் ஹோம் வாய்ஸ் கால்கள், 100 நிமிட இன்கம்மிங் கால்கள், 6 ஜிபி டேட்டா மற்றும் 50 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கும்.

மறுகையில் உள்ள ரூ.2,851 திட்டமானது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 150 நிமிட லோக்கல் மற்றும் ஹோம் வாய்ஸ் கால்கள், 150 நிமிட இன்கம்மிங் கால்கள், 12 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கும்.

கனடாவிற்கான (Canada) ஜியோ இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்கள்: இதன்கீழும் உங்களுக்கு 2 விருப்பங்கள் கிடைக்கும். அவைகள் ரூ.1,691 மற்றும் ரூ.2,881 திட்டங்கள் ஆகும். ரூ.1,691 திட்டமானது 14 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 100 நிமிட லோக்கல் மற்றும் ஹோம் வாய்ஸ் கால்கள், 100 நிமிட இன்கம்மிங் கால்கள், 5 ஜிபி டேட்டா மற்றும் 50 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கும்.

மறுகையில் உள்ள ரூ.2,881 திட்டமானது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 150 நிமிட லோக்கல் மற்றும் ஹோம் வாய்ஸ் கால்கள், 150 நிமிட இன்கம்மிங் கால்கள், 10 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கும்.

சவூதி அரேபியாவிற்கான (Saudi Arabia) ஜியோ இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்கள்: இதன்கீழ் உங்களுக்கு 3 விருப்பங்கள் கிடைக்கும். அவைகள் ரூ.891, ரூ.1,291 மற்றும் ரூ.2,891 திட்டங்கள் ஆகும். ரூ.891 திட்டமானது 7 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 100 நிமிட லோக்கல் மற்றும் ஹோம் வாய்ஸ் கால்கள், 100 நிமிட இன்கம்மிங் கால்கள், 1 ஜிபி டேட்டா மற்றும் 20 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கும்.

அடுத்ததாக உள்ள ரூ.1,291 திட்டமானது 14 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 100 நிமிட லோக்கல் மற்றும் ஹோம் வாய்ஸ் கால்கள், 100 நிமிட இன்கம்மிங் கால்கள், 2 ஜிபி டேட்டா மற்றும் 50 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கும். கடைசியாக உள்ள ரூ.2,891 திட்டமானது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 150 நிமிட லோக்கல் மற்றும் ஹோம் வாய்ஸ் கால்கள், 150 நிமிட இன்கம்மிங் கால்கள், 5 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கும்.

ஐரோப்பாவிற்கான (Europe) ஜியோ இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்கள்: இதன்கீழ் உங்களுக்கு ஒரே ஒரு விருப்பம் மட்டுமே கிடைக்கும். அது ரூ.2,899 திட்டமாகும். இந்த திட்டமானது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 100 நிமிட லோக்கல் மற்றும் ஹோம் வாய்ஸ் கால்கள், 100 நிமிட இன்கம்மிங் கால்கள், 5 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கும்.

கரீபியனுக்கான (Caribbean) ஜியோ இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்கள்: இதன்கீழ் உங்களுக்கு 2 விருப்பங்கள் கிடைக்கும். அவைகள் ரூ.1,671 மற்றும் ரூ.3,851 திட்டங்கள் ஆகும். ரூ.1,671 திட்டமானது 14 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 150 நிமிட லோக்கல் மற்றும் ஹோம் வாய்ஸ் கால்கள், 50 நிமிட இன்கம்மிங் கால்கள், 1 ஜிபி டேட்டா மற்றும் 50 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கும்.

மறுகையில் உள்ள ரூ.3,851 திட்டமானது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 200 நிமிட லோக்கல் மற்றும் ஹோம் வாய்ஸ் கால்கள், 50 நிமிட இன்கம்மிங் கால்கள், 4 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Launched New Country Specific International Roaming Plans For UAE Thailand Canada and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X