இந்தியாவில் நம்பர் 1.. Jio 5G ரீசார்ஜ் பிளான் அறிவிப்பு! விலை இதுதான்! 5ஜி போன் வாங்கும் முன்னாடி இதை பாருங்க.

|

Jio 5G டேட்டா திட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் இந்த 5ஜி ரீசார்ஜ் திட்டமானது ஜியோ ட்ரூ 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களில் மட்டுமே அணுக கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. அதேசமயத்தில் ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் வேகமாக விரிவடைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

Jio 5G ரீசார்ஜ் திட்டம்

Jio 5G ரீசார்ஜ் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவைக்கு என ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இதுவரை ரூ.239க்கு மேல் உள்ள எந்தவொரு திட்டத்தை ரீசார்ஜ் செய்தாலும் 5ஜி சேவையை அனுபவிக்கலாம் என்ற நிலை இருந்தது. அதாவது ரூ.239க்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தாலே 5ஜி இணையம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இதேபோல் தான் ஏர்டெல் நிறுவனமும் இலவசமாக 5ஜி சேவையை வழங்கி வந்தது. இந்தநிலையில் ரிலையன்ஸ் ஜியோ முதன்முறையாக 5ஜி இணையத்துக்கான திட்டத்தை அறிவித்துள்ளது.

My Jio பயன்பாடு

My Jio பயன்பாடு

ரிலையன்ஸ் ஜியோ தற்போது அறிமுகம் செய்துள்ள ப்ரீபெய்ட் திட்டமானது ஆட்-ஆன் திட்டமாகும். நீங்கள் ரீசார்ஜ் செய்துள்ள திட்டத்துடன் கூடுதலாக ஆட் ஆன் பேக் ஆக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டத்தில் 5ஜி சேவைகளை அனுபவிக்க ரூ.61 டேட்டா திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். ரிலையன்ஸ் ஜியோ ரூ.61 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் 6 ஜிபி 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

தொலைத் தொடர்பு நிறுவனம் அதன் My Jio பயன்பாட்டில் புதிய "5G மேம்படுத்தல்" பிரிவை சேர்த்திருக்கிறது. இதில் ரூ.61 டேட்டா வவுச்சர் திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.

ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்

சரி, இப்போது ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 5ஜி சேவை கிடைக்குமா என்ற கேள்வி வரும். ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் அல்லது அதற்கு மேல் உள்ள பிளான் இல் ரீசார்ஜ் செய்தால் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். இதற்கு இந்த கூடுதல் பேக் தேவையில்லை. குறைந்த விலை திட்டத்தை கொண்டவர்கள் மட்டும் தான் இந்த 5ஜி சேவையை அனுபவிக்க முடியும்.

6ஜிபி 5ஜி டேட்டா

6ஜிபி 5ஜி டேட்டா

ரிலையன்ஸ் ஜியோ ரூ.61 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் 6 ஜிபி 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 5ஜி சேவைகளை அணுகவதற்கு சில விஷயங்கள் உங்களுக்கு தேவை, இதில் குறிப்பிடத்தக்க விஷயம் உங்கள் ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவு ஸ்மார்ட்போனாக இருக்க வேண்டும்.

அதேபோல் உங்கள் ஸ்மார்ட்போன் நிறுவனத்திடம் இருந்து 5ஜி ஆதரவு புதுப்பிப்பை பெற வேண்டும். உங்கள் மொபைல் செட்டிங்க்ஸ் பயன்பாட்டுக்கு சென்று 5ஜி அமைப்பை இயக்க வேண்டும். MyJio செயலியில் 5G ஆதரவு விருப்பத்தை நீங்கள் சரி பார்க்க வேண்டும்.

78 இந்திய நகரங்களில் Jio 5G

78 இந்திய நகரங்களில் Jio 5G

ஜியோ மற்றும் ஏர்டெல் கடந்த ஆண்டு தங்கள் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியது. அறிமுகமான நாளில் இருந்து 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் வேகமாக விரிவடைந்து வருகிறது. அதன்படி 78 இந்திய நகரங்களில் Jio 5G சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 5ஜி சேவை

இந்தியா முழுவதும் 5ஜி சேவை

2023 ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை கிடைக்கும் என ஜியோ மற்றும் ஏர்டெல் உறுதி அளித்துள்ளது. இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் தங்கள் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளை வேகமாக விரிவுப்படுத்தி வருகிறது. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் இதுவரை 78 இந்திய நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஜியோ ட்ரூ 5ஜி சேவை

ஜியோ ட்ரூ 5ஜி சேவை

5ஜி ஸ்மார்ட்போன்களில் மட்டுமே 5ஜி சேவையை பயன்படுத்த முடியும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. பெரும்பாலான 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஜியோ 5ஜி சேவைக்கான அப்டேட் வழங்கத் தொடங்கப்பட்டுள்ளது. ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் உள்ளவர்கள் மட்டும் தான் ஜியோ ட்ரூ 5ஜி சேவையை அனுபவிக்க முடியும்.

தயாராக இருப்பது நல்லது

தயாராக இருப்பது நல்லது

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்களின் 5ஜி இணைப்பை இந்தியா முழுவதும் வேகமாக பரப்பி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டதில் இருந்து இரண்டு நிறுவனங்களும் முணைப்போடு செயல்பட்டு வேகமாக 5ஜி சேவையை விரிவுப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளை நிறுவனங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே 5ஜி இணைய வேகத்தை அனுபவிக்க விரும்புபர்கள் தற்போதே தயாராக இருப்பது நல்லது.

Best Mobiles in India

English summary
Jio Launched Jio 5G Data Plan in India: Here the Price and 5G Data Details!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X