இரவோடு இரவாக நடந்த வேலை! இந்த 2 நகரங்களில் உள்ள Jio யூசர்கள் கொடுத்து வச்சவங்க! ஏன்னா?

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரவோடு இரவாக ஒரு தரமான வேலையை செய்துள்ளது. அதன் விளைவாக குறிப்பிட்ட 2 நகரங்களில் உள்ள ஜியோ பயனர்கள் அதிர்ஷ்டசாலிகளாக மாறி உள்ளனர்!

அது என்னென்ன நகரங்கள்? ஜியோ நிறுவனம் அங்கே அப்படி என்ன செய்தது? அங்குள்ள Jio பயனர்கள் ஏன் அதிர்ஷ்டசாலிகளாக மாறினர்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இரவோடு இரவாக நடந்த வேலை!

இரவோடு இரவாக நடந்த வேலை!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் - இரவோடு இரவாக - தனது ஜியோ ட்ரூ 5ஜி சேவையை மேலும் இரண்டு நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது.

புதிதாக இரண்டு நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ஜியோ இப்போது மொத்தம் எட்டு நகரங்களில் தன் 5ஜி கவரேஜை கொண்டுள்ளது.

பல பேர் இதை வெளிய சொல்ல மாட்டாங்க! Amazon Pay ஆப்பில் ஒளிந்திருக்கும் சூப்பர் ஆப்ஷன்!பல பேர் இதை வெளிய சொல்ல மாட்டாங்க! Amazon Pay ஆப்பில் ஒளிந்திருக்கும் சூப்பர் ஆப்ஷன்!

அதென்ன நகரங்கள்?

அதென்ன நகரங்கள்?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் 5ஜி சேவைகளை பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு நகரங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.

இருப்பினும் கூட பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஜியோ பயனர்கள், மற்ற நகரங்களில் உள்ள பயனர்களை போலவே, ஜியோவின் 5G சேவைகளை இன்வைட்-ஒன்லி செயல்முறையின் கீழ் மட்டுமே அனுபவிக்க முடியும்.

இருந்தாலும் கூட அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.. ஏன்?

இருந்தாலும் கூட அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.. ஏன்?

பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஜியோ பயனர்கள் இன்வைட்-ஒன்லி வழியாக மட்டுமே ஜியோ 5ஜி நெட்வொர்க்கை பெற முடியும் என்றாலும் கூட, ஒரு வகையில் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்.

ஏனென்றால் ஜியோ நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த இரண்டு நகரங்களிலும் அணுக கிடைக்கும் 5G நெட்வொர்க்கின் வேகமானது 500Mbps மற்றும் 1Gbps-க்கு இடையே இருக்கும்.

அதாவது குறிப்பிட்ட நகரங்களில் உள்ள பயனர்களால் 1Gbps வேகத்திலான 5ஜி டேட்டாவை இலவசமாக அனுபவிக்க முடியும் என்று அர்த்தம்!

இந்த விஷயம் தெரிஞ்ச பிறகு.. அடிக்கடி Phone-க்கு சார்ஜ் போட வேண்டிய வேலையே இருக்காது! என்னது அது?இந்த விஷயம் தெரிஞ்ச பிறகு.. அடிக்கடி Phone-க்கு சார்ஜ் போட வேண்டிய வேலையே இருக்காது! என்னது அது?

ஜியோவின் 5ஜி சேவைகளை இலவசமாக பெறுவது எப்படி?

ஜியோவின் 5ஜி சேவைகளை இலவசமாக பெறுவது எப்படி?

ரிலைஐன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகளை இலவசமாக பெறுவதற்கு நீங்கள் முதலில் ஒரு இன்வைட்-ஐ பெற வேண்டும்.

ஒரு இன்வைட்-ஐ பெற, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள MyJio ஆப்பை பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் மை ஜியோ ஆப்பை திறக்கும்போது, ஒரு இன்வைட்-ஐ காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும். பின்னர் "ஜியோ வெல்கம் ஆஃபர்" எனப்படும் ஜியோவின் இலவச 5ஜி சேவைக்காக நீங்கள் பதிவு செய்யப்படுவீர்கள்!

பெரும்பாலும் கிடைக்கவில்லை!

பெரும்பாலும் கிடைக்கவில்லை!

இலவச 5ஜி-க்காக பதிவு செய்பவர்களுக்கு ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைகள் கிடைக்கும் என்று கூற்றுகள் இருந்தாலும் கூட - ஜியோவின் 5G சேவைகள் இன்னும் பெரும்பாலும் கிடைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை!

ஜியோ நிறுவனம் முதன்முதலில் 5G-ஐ அறிமுகப்படுத்திய நகரங்களில் கூட, அதாவது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, வாரணாசி மற்றும் நாத்வாரா ஆகிய நகரங்களில் கூட 5ஜி சேவைகளின் இருப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

இதை நெட்வொர்க் இன்டெலிஜென்ஸ் மற்றும் கனெக்டிவிட்டி இன்சைட்ஸ் நிறுவனமான Ookla கூட உறுதி செய்துள்ளது!

விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!

அதுமட்டுமின்றி..!

அதுமட்டுமின்றி..!

முழுமையான 5G உள்கட்டமைப்பை பயன்படுத்தும் ஒரே டெலிகாம் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே என்பதால், ஜியோவின் 5ஜி சேவைகளை பயன்படுத்த உங்கள் 5G போனுக்கு "சரியான" சாஃப்ட்வேர் அப்டேட்டும் தேவைப்படும்.

பல முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகள், ஜியோவின் 5ஜி நெட்வொர்க்கை ஆக்டிவேட் செய்யும் அப்டேட்-ஐ
ஏற்கனவே வெளியிட்டுவிட்டன.

நினைவூட்டும் வண்ணம், ஆப்பிள் ஜியோ 5ஜி-க்கான ஆதரவைச் சோதித்து வருகிறது. அதே சமயம் Samsung, Google, LG மற்றும் Asus போன்ற நிறுவனங்கள் Jio True 5G-க்கான ஆதரவை வழங்கும் மென்பொருளை சாஃப்ட்வேரை இன்னும் வெளியிடவில்லை!

Best Mobiles in India

English summary
Jio launched its true 5G services in 2 more cities now Bengaluru and Hyderabad users can get free 5G

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X