Home
News

அம்பானி போட்ட ஆர்டர்.. Jio-க்கு மட்டுமில்லை.. Airtel-க்கும் JioHotstar நன்மை உண்டு.. அதுவும் ரூ.300 ரேஞ்சில்..

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் சமீபத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) OTT சேவையை ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சேவை என்று பெயர் மாற்றம் செய்தது. இதனால், பல வாடிக்கையாளர்கள் இனி ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) சேவை ஜியோ (Jio) பயனர்களுக்கு மட்டும் தான் இலவசமாக கிடைக்குமென்று தவறான புரிதலுக்கு வந்துவிட்டனர். ஜியோ ஹாட்ஸ்டார் சேவையை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சேவையை இலவசமாக பயன்படுத்த விரும்புவோர் ஏர்டெல் (Airtel) அல்லது ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களை (Jio Hotstar with prepaid plans) தேர்வு செய்து பயன்பெறலாம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) தளத்தின் பெயரை ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) என்று அண்மையில் பெயர் மாற்றம் செய்துள்ளது. இதன் விளைவாக Disney+ Hotstar என்று காண்பிக்கப்பட்ட மொபைல் ஆப்ஸ் ஐகான்கள் இப்போது ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தின் புதிய மொபைல் ஆப்ஸ் லோகோவுடன் (Jio Hotstar mobile apps) காட்சியளிக்க துவங்கியுள்ளன.

அம்பானி போட்ட ஆர்டர்.. Jio-க்கு மட்டுமில்லை.. Airtel-க்கு JioHotstar..

அம்பானி போட்ட ஆர்டர்.. Jio-க்கு மட்டுமில்லை.. Airtel-க்கும் JioHotstar நன்மை உண்டு மக்களே:

ஜியோ ஹாட்ஸ்டார் சேவையை வழக்கம் போல மக்கள் தனிப்பட்ட சந்தா (Jio Hotstar subscription) தேர்வுகளாக தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். Jio Hotstar சந்தா இப்போது மொபைல் (Jio Hotstar Mobile), சூப்பர் (Jio Hotstar Super) மற்றும் பிரீமியம் (Jio Hotstar Premium) ஆகிய மூன்று சந்தா விருப்பங்களுடன் பயன்படுத்த கிடைக்கிறது.

- ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் (Jio Hotstar Mobile subscription) ரூ. 499
- ஜியோ ஹாட்ஸ்டார் சூப்பர் (Jio Hotstar Super subscription) ரூ. 899
- ஜியோ ஹாட்ஸ்டார் பிரீமியம் (Jio Hotstar Premium subscription) ரூ. 1499
இந்த அனைத்து 3 திட்டங்களும் 1 வருடம் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. பார்வையிடும் டிவைஸ் எண்ணிக்கை, வீடியோ குவாலிட்டி தரம் மற்றும் விளம்பரங்களில் மட்டும் வேறுபாடுகளை பயனர்கள் தேர்வு செய்யும் திட்டங்களில் சந்திக்க நேரிடும்.

ஜியோவை பயனர் தவிர மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் பயன்படுத்த முடியுமா?

ஜியோ ஹாட்ஸ்டார் OTT சேவையை தனியாக கட்டணம் செலுத்தி சந்தா சேவையை பெற்ற பிறகு தான் பயன்படுத்த முடியுமா? இது ஜியோ பயனர்களுக்கு இலவசமாக கிடைக்குமா? மற்ற நெட்வொர்க் பயனர்களும் இந்த் Jio Hotstar சேவையை பயன்படுத்த முடியுமா? என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சில குறிப்பிட்ட திட்டங்களுடன் ஜியோ பயனர்களுக்கு Jio Hotstar சேவை இலவசமாக (how to use JioHotstar for free) அணுக கிடைக்கிறது.

ஜியோ பயனர்கள் மட்டுமின்றி ஏர்டெல் (Airtel), பிஎஸ்என்எல் (BSNL), வோடபோன் ஐடியா (Vodafone Idea) சிம் கார்டு வைத்துள்ள அனைத்து நெட்வொர்க் பயனர்களும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஜியோ மட்டுமின்றி, இப்போது ஏர்டெல் நிறுவனமும் கூட, இப்போது அதன் சில பிரத்தியேகமான திட்டங்களுடன் Jio Hotstar சந்தாவை இலவசமாக வழங்குகிறது. இதில் மலிவு விலை விருப்பமாக ஏர்டெல் ரூ. 398 திட்டம் (Airtel Rs 398 Plan) செயல்படுகிறது.

ஏர்டெல் ரூ. 398 திட்டம் (Airtel Rs 398 Plan):

இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (28 days validity) உடன் வருகிறது. இது 28 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை (unlimited voice calls), 2GB தினசரி டேட்டா (2GB data per day daily) நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மை ஆகியவற்றை இந்த திட்டம் வழங்குகிறது.

இத்துடன் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் மொபைல் Jio Hotstar சந்தாவை இந்த Airtel திட்டம் இலவசமாக வழங்குகிறது (FREE Jio Hotstar subscription). மலிவு விலையில் OTT தேடும் வாடிக்கையாளர்களுக்கு இத்திட்டம் சிறந்தது. இது தவிர ஏர்டெல் ரூ. 1029 திட்டம் (Airtel Rs 1029 Plan) மற்றும் ஏர்டெல் ரூ. 3999 திட்டம் (Airtel Rs 3999 Plan) ஆகிய திட்டங்களுடனும் இலவச JioHotstar நன்மையை வாடிக்கையாளர்கள் முறையே 84 நாள் மற்றும் 365 நாட்களுக்கு அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio Launched FREE JioHotstar Subscription With Airtel Prepaid Plans Starting From Rs 398 Plan Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X