Home
News

Jio-வின் 26GHz பேண்ட் 5ஜி தமிழ்நாட்டில் அறிமுகம்.. முன்பு கிடைத்த 5ஜி-க்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

முகேஷ் அம்பானி தலைமையிலான, இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), இந்தியாவின் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட்-ஐ (26 GHz Band) அறிமுகம் செய்துள்ளது. இது எம்எம்வேவ் பிரெக்வன்சி 5ஜி (mmWave frequency 5G) என்றும் அழைக்கப்படுகிறது.

26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் 5ஜி-யில் அப்படி என்ன ஸ்பெஷல்? அப்போது இவ்வளவு நாட்களாக ஜியோ சேவையின் கீழ் நாடு முழுவதும் கிடைத்த 5ஜி - எவ்வளவு ஜிகாஹெர்ட்ஸ்? இந்த இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்? தமிழ்நாடு தவிர்த்து ஜியோவின் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் 5ஜி வேறு எங்கெல்லாம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:

Jio-வின் 26GHz பேண்ட் 5ஜி தமிழ்நாட்டில் அறிமுகம்!

முன்னதாக ஜியோ சேவையின் கீழ் நாடு முழுவதும் அணுக கிடைத்தது - 3.3 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் 5ஜி (3.3 GHz band 5G) ஆகும். இது ஜியோவின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டத்திலும் (All Telecom Circles) கிடைக்கிறது. இது "வழக்கமான" 5ஜி ஆகும் . ஆனால் எம்எம்வேவ் அலைவரிசையை பயன்படுத்தவது - மிகவும் விலை உயர்ந்த வேலையாகும் மற்றும் இதன் கவரேஜுக்கு மிகவும் அடர்த்தியான நெட்வொர்க் உள்கட்டமைப்பும் (Denser network infrastructure) தேவைப்படும்.

எனவே தான் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசை அல்லது எம்எம்வேவ் அலைவரிசை ஆனது சிறப்பு பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு (Specialised use cases) நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இது நிறுவனங்களுக்கான (Enterprises) 5ஜி சேவை ஆகும் . ஏனென்றால் நுகர்வோர் பயன்பாட்டு நிகழ்விற்கு ( consumer use case - அதாவது சாதாரண வாடிக்கையாளர்களுக்கு) 3.3 ஜிகாஹெர்ட்ஸ்அலைவரிசை அல்லது சி-பேண்ட் 5ஜி நெட்வொர்க்குகளே (C-band 5G networks) போதுமானதாக / திருப்திகரமானதாக இருக்கும்.

ஜியோவின் எம்எம்வேவ் பேண்ட் அல்லது 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் 5ஜி ஆனது எந்தெந்த மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது (Jio mmWave Band or 26 GHz 5G band States List)? தமிழ்நாடு, மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், ஒரிசா, திரிபுரா, நாகாலாந்து மற்றும் டெல்லி.

ஜியோ நிறுவனம் ஆனது கோரிக்கை அடிப்படையில் ( Request basis) தேவைப்படும் நிறுவனங்களுக்கு 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் 5ஜி சேவைகளை வழங்கும். முன்னதாக - தொலைத்தொடர்புத் துறை (DoT - Department of Telecommunications) நிர்ணயித்த குறைந்தபட்ச வெளியீட்டு கடமைகளை (MRO - minimum rollout obligations) பூர்த்தி செய்ய அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் எம்எம்வேவ் 5ஜி-ஐ ஐ அறிமுகப்படுத்தியதாக ரிலையன்ஸ் ஜியோ உறுதிப்படுத்தி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான நிறுவனத்தின் தரவுகளின்படி - ரிலையன்ஸ் ஜியோவில் 170 மில்லியனுக்கும் அதிகமான 5ஜி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த டெலிகாம் நிறுவனத்தின் 5ஜி பயனர் தளம் நிதியாண்டு 2026 இறுதிக்குள் 230 - 250 மில்லியனை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்குவதற்காக ரிலையன்ஸ் ஜியோ மூன்று வெவ்வேறு பேண்டுகளை பயன்படுத்தி உள்ளது - 700 மெகாஹெர்ட்ஸ் பேண்ட், 3300 மெகாஹெட்ஸ் பேண்ட் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட். ஓப்பன்சிக்னல் (OpenSignal) அறிக்கையின்படி, ஜியோவின் 5ஜி கிடைக்கும் தன்மை இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவை தவிர, பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மட்டுமே இந்தியா முழுவதும் 5ஜி சேவைகளை வழங்குகிறது. வோடபோன் ஐடியா (Vodafone Idea) இன்னும் 5ஜி வெளியீட்டின் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது, அதே நேரத்தில் பிஎஸ்என்எல் (BSNL) ஆனது இன்னும் 5ஜி சேவையை அறிமுகம் செய்யவே இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Launched 26 GHz band or mmWave frequency in Tamil nadu How it Differs From 3.3 GHz Band
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X