TRAI-யிடம் அடிபணிந்த அம்பானி! டேட்டா இல்லாமல் 2 புதிய வாய்ஸ் & SMS ஒன்லி பிளான் அறிமுகம்! Jio யூசர்கள் ஹேப்பி!
டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டளையின்படி, டேட்டா நன்மை எதுவும் இல்லாமால், வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை (Voice and SMS Only) மட்டுமே வழங்கும் 2 புதிய ஜியோ (Jio) ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
டெலிகாம் நிறுவனங்கள் ஆனது எஸ்டிவி (STV) என்று அழைக்கப்படும் வாய்ஸ் மற்றும் மெசேஜ்களுக்கென ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்களை (Special Tariff Vouchers) அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற டிராய்-ன் சமீபத்திய உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக இவ்விரு புதிய திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

பெயர் குறிப்பிடுவது போலவே இவ்விரு திட்டங்களும் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை மட்டுமே வழங்கும் .அதாவது பயனர்கள் தங்களுக்கு தேவையான சேவைகளுக்கு மட்டுமே பணம் செலுத்துவர். குறிப்பிட்ட நுகர்வோர் பிரிவுகள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் பயனடைவதே இந்த திட்டங்களின் முக்கிய நோக்கமாகும். அந்த திட்டங்களின் விலை மற்றும் வேலிடிட்டி என்ன? இதோ விவரங்கள்:
01. ஜியோ ரூ.458 வாய்ஸ்-எஸ்எம்எஸ் ஒன்லி பிளான் (Jio Rs 458 Voice SMS Only Plan Details): ஜியோவின் என்ட்ரி லெவல் வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் திட்டம் ரூ.458 முதல் தொடங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோடிவி, ஜியோசினிமா (பிரீமியம் சந்தா அல்ல) மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஆப்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும்
முன்னதாக, இந்த திட்டத்தின் விலை ரூ.479 ஆக இருந்தது. இதன் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ், 6ஜிபி டேட்டா (டேட்டா வரம்பிற்குப் பிறகு 64 கேபிபிஎஸ் என்கிற ஸ்பீடில் இண்டர்நெட்), மற்றும் 1000 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைத்தது. தற்போது டேட்டா நன்மை இல்லாமல் வரும் புதுப்பிக்கப்பட்ட திட்டம் ரூ. 21 மலிவான உள்ளது.
02. ஜியோ ரூ.1,958 வாய்ஸ்-எஸ்எம்எஸ் ஒன்லி பிளான் (Jio Rs 1958 Voice SMS Only Plan Details): இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 ஆண்டு அல்லது 365 நாட்கள் நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோடிவி, ஜியோசினிமா (பிரீமியம் சந்தா அல்ல) மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஆப்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும்
முன்னதாக, இந்த திட்டத்தின் விலை ரூ.1,899 ஆக இருந்தது. இதன் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ், 24ஜிபி டேட்டா (டேட்டா வரம்பிற்குப் பிறகு 64 கேபிபிஎஸ் என்கிற ஸ்பீடில் இண்டர்நெட்), மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் 336 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் கிடைத்தது. தற்போது டேட்டா நன்மை இல்லாமல் வரும் புதுப்பிக்கப்பட்ட திட்டம் ரூ. 59 விலை அதிகமானதாக உள்ளது மற்றும் வேலிடிட்டியை 29 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் போஸ்ட்பெய்ட் சேவையிலும் ஒரு முக்கிய மாற்றம் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஜியோ போஸ்ட்பெய்ட் சேவையின் கீழ் ரூ.199 -ஐ பயன்படுத்தும் பயனர்கள் தானாகவே ரூ.299 திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ரூ.199 திட்டமானது 30 நாட்கள் வேலிடிட்டியின் கீழ், வாய்ஸ் கால்கள் மற்றும் 4ஜி டேட்டா பலன்களை வழங்கும் மலிவான போஸ்ட்பெய்ட் பேக் ஆகும்.
இதற்கு மாற்றாக வரும் ரூ.299 போஸ்ட்பெய்ட் திட்டமானது பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒவ்வொரு நாளும் 100 இலவ எஸ்எம்எஸ்கள் மற்றும் மாதத்திற்கு 25ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது. டேட்டா லிமிட்டை மீறிய பின்னர், கூடுதல் டேட்டாவிற்கு, ஒரு ஜிபிக்கு ரூ.10 வசூலிக்கப்படும். ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் பயனர்களை அதிக விலையுள்ள ரூ.299 பேக்கிற்கு மேம்படுத்துவதற்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, இது அதன் சந்தாதாரர்களை அதிக மதிப்புள்ள பேக்குகளுக்கு இடம்பெயர வைக்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கலாம்


Click it and Unblock the Notifications








