Jio அம்பானி இப்படி செய்வாருனு யாருமே எதிர்பார்க்கல.. BSNL உடன் சேர்ந்து 2 புதிய ICR திட்டங்கள் அறிமுகம்!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது இந்தியாவின் 2 முக்கிய மாநிலங்களில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்காக, அரசு நடத்தும் டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) உடன் இணைந்து இரண்டு புதிய இன்ட்ரா-சர்க்கிள் ரோமிங் (Intra-Circle Roaming Recharge plans - ICR Plans) ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்கீழ் - கவரேஜ் குறைவாக உள்ள கிராமப்புற அல்லது தொலைதூரப் பகுதிகளில் உள்ள ஜியோ பயனர்கள், பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை அணுகுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு நிலையான நெட்வொர்க் இணைப்பு கிடைக்கும். இந்த நோக்கத்திற்காகவே ஜியோ மற்றும் பிஎஸ்என்எஸ் "கூட்டணியின்" கீழ் ஐசிஆர் ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பிஎஸ்என்எல் உடனான ஜியோ ஐசிஆர் திட்டங்கள் எந்தெந்த மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? என்ன விலை? என்னென்ன நன்மைகள்? எத்தனை நாட்கள் வேலிடிட்டி? இது மத்தியப் பிரதேசம் (Madhya Pradesh) மற்றும் சத்தீஸ்கரில் (Chhattisgarh) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய திட்டங்களின் விலைகள் - ரூ.196 மற்றும் ரூ.396 ஆகும்
இவ்விரு திட்டங்களும்மே 28 நாட்கள் செல்லுபடியாகும். ரூ.196 திட்டத்தின் கீழ் 2ஜிபி டேட்டா, 1000 நிமிட வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும். சற்றே விலை அதிகமான ரூ.396 திட்டத்தின் கீழ் 10ஜிபி டேட்டா, அதே 1000 நிமிட வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும்
ஜியோவின் கூற்றுப்படி, இந்த திட்டங்கள் பிஎஸ்என்எல் ஐசிஆர் நெட்வொர்க்கில் பயன்படுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ரீசார்ஜ் திட்டங்களின் கீழ் ஜியோ நெட்வொர்க் அல்லது வேறு எந்த நெட்வொர்க்கிலும் (ஏர்டெல் அல்லது வி போன்றவை) பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. ஆக்டிவ் ஆக உள்ள ஐசிஆர் பேக் உள்ள வாடிக்கையாளர்கள் மட்டுமே பிஎஸ்என்எல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்த முடியும்.
ஜியோ தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை, இந்நிறுவனம் தனது பயனர்களுக்கு 18 மாத இலவச கூகுள் ஏஐ ப்ரோ சந்தாவை (Google Gemini AI Pro subscription) வழங்க தொடங்கி உள்ளது. முன்னதாக இது 18 முதல் 25 வயதுக்குட்பட்ட பயனர்கள் மட்டுமே இந்த இலவச சந்தாவிற்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. பின்னர் இது அனைத்து பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று ஜியோ அறிவித்து இருந்தது.
அதைதொடர்ந்து தற்போது ஜியோ நிறுவனம் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூகுள் ஏஐ ப்ரோ இலவச சந்தாவை செயல்படுத்த அனுமதிக்கிறது. ஜியோ வழங்கும் இந்த இலவச கூகுள் ஏஐ ப்ரோ சந்தா உங்கள் ஜியோ மொபைல் நம்பரில் ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி திட்டத்தால் ரீசார்ஜ் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் தொடர்பான சமீபத்திய அப்டேட்டை பொறுத்தவரை இந்நிறுவனம் அதன் 25 ஆம் ஆண்டு (சில்வர் ஜூப்லி) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக.. 2500ஜிபி டேட்டா, 600 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை வழங்கும் சில்வர் ஜூப்லி எப்டிடிஎச் பிளானை அறிவித்த கையோடு ரூ.225 க்கு இன்னொரு சில்வர் ஜூப்லி ப்ரீபெய்ட் பிளானையும் அறிவித்துள்ளது
ரூ.225 மதிப்புள்ள சில்வர் ஜூப்லி ஸ்பெஷல் பிளானின் (BSNL Rs 225 Silver Jubilee Special Plan) வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த காலகட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) டெய்லி 2.5ஜிபி டேட்டா ( Daily 2.5GB Data), தினமும் 100 இலவசஎஸ்எம்எஸ்கள் (SMS) ஆகிய நன்மைகள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








