ஜியோவில் இவர்கள் மட்டும் இலவசமாக வாய்ஸ் கால்ஸ் பேசிக்கொள்ளலாம்!
ஜியோ நிறுவனம் தனது பயனர்களைத் தவிர மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்குக் கட்டணம் வசூலிக்கப் போவதாக அறிவித்தது. இதற்கான சில புதிய டாப் அப் திட்டங்களையும் ஜியோ அறிமுகம் செய்திருந்தது. இருப்பினும் சில பயனர்களுக்கு மட்டும் வாய்ஸ் கால் சேவையை இலவசமாக வழங்கி வருகிறது.

ஜியோ ரீசார்ஜ்
ஜியோ எண்ணிலிருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஜியோ தெரிவித்திருந்தது. ஆனால் அக்டோபர் 9 ஆம் தேதி மற்றும் அதற்கு முன் ரீசார்ஜ் ஜியோ பயனர்களுக்குத் தொடர்ந்து வாய்ஸ் கால் சேவை இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது.

ஐ.யு.சி. டாப் அப்
ஜியோவின் இந்த இலவச வாய்ஸ் கால் சேவை, ரீசார்ஜ் வேலிடிட்டி இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும். முன்பு ரீசார்ஜ் செய்த சலுகைக்கான வேலிடிட்டி காலம் முடிந்ததும், தற்பொழுது ஜியோ அறிமுகம் செய்துள்ள வழக்கமான ரீசார்ஜ் மற்றும் ஐ.யு.சி. டாப் அப் வவுச்சர்களை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிமிடத்திற்கு 0.06 பைசா
ஜியோ பயனர்கள் அழைப்பு சேவையைப் பயன்படுத்தினால் நிமிடத்திற்கு 0.06 பைசா வசூலிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கட்டணத்தை முற்றிலும் இலவசமாக வழங்காமல் சலுகையுடன், சில புதிய டாப் அப் திட்டங்களைக் கொண்டு சமாளிக்கும் விதத்தில் ஜியோ தற்பொழுது அறிவித்துள்ளது.

டாப் அப் திட்டங்கள்
ரூ.10 திட்டம் உங்களுக்கு 124 ஐ.யூ.சி நிமிடங்கள் மற்றும் 1 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது.
ரூ.20 திட்டம் உங்களுக்கு 249 ஐ.யூ.சி நிமிடங்கள் மற்றும் 2 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது.
ரூ.50 திட்டம் உங்களுக்கு 656 ஐ.யூ.சி நிமிடங்கள் மற்றும் 5 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது.
ரூ.100 திட்டம் உங்களுக்கு 1,362 ஐ.யூ.சி நிமிடங்கள் மற்றும் 10 ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது.

முதல் முறையாக 30 நிமிடம் இலவச வாய்ஸ் கால்
அதேபோல் ஜியோவில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு முதல் முறையாக 30 நிமிடம் இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுமென்று ஜியோ அறிவித்துள்ளது. இந்த சலுகையை மனமுடைந்த தனது ஜியோ பயனர்களுக்காக ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையை ஜியோ பயனர்கள் ரீசார்ஜ் செய்த முதல் 7 நாட்களுக்கு மட்டுமே பெற முடியுமென்றும் ஜியோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








