Home
News

Jio IUC Top Up வேலிடிட்டி இல்லாமல் 100ஜிபி வரை இலவச டேட்டா வேண்டுமா? அப்போ இதை உடனே படிங்க!

ஜியோ நிறுவனம், ப்ரீபெய்ட் பயனர்களுக்கான 6 புதிய ஜியோ ஐ.யூ.சி டாப்-அப்களை ரூ .10 இல் தொடங்கி, 14,074 ஆஃப்-நெட் நிமிடங்களுடன் 100 ஜிபி வரையிலான இலவச டேட்டாவை வழங்குகின்றது. ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து கிடைக்கும் இந்த ஐ.யூ.சி டாப்-அப்களின் சிறந்த பகுதி இவற்றிற்கு எந்தவொரு செல்லுபடியாகும் காலமும் கிடையாது என்பது தான். இந்த திட்டங்களின் விபரங்களை மேலும் படித்து அறிந்துகொள்ளுங்கள்.

ஜியோவின் ஐ.யூ.சி டாப்-அப்ஸ்

ஜியோவின் ஐ.யூ.சி டாப்-அப்ஸ்

கடந்த ஆண்டு அக்டோபரில், ரிலையன்ஸ் ஜியோ தனது வழக்கமான டாக் டைம் திட்டங்களை ஐ.யூ.சி டாப்- அப் திட்டங்களாக மாற்றியது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, ஐ.யூ.சி டாப்-அப்ஸ் ஆஃப்-நெட் குரல் அழைப்புகளைச் செய்ய விரும்பும் ப்ரீபெய்ட் பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளது, அதாவது பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் போன்ற பிற நெட்வொர்க்கு குரல் அழைப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

உண்மையிலேயே வேலிடிட்டி காலம் கிடையாதா?

உண்மையிலேயே வேலிடிட்டி காலம் கிடையாதா?

ரிலையன்ஸ் ஜியோ, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.1,000 என்ற ஆறு ஐ.யூ.சி டாப்-அப் வவுச்சர்களை வழங்கி வருகிறது. ஐ.யூ.சி டாப்-அப் வவுச்சர்கள் எதுவும் முழு டாக் டைம் பயனுடன் வழங்கப்படுவதில்லை, ஆனால் இவை டேட்டா நன்மைகளுடன் பயனர்களுக்குக் கிடைக்கிறது. இந்த ஐ.யூ.சி டாப்-அப்களின் சிறந்த பகுதி, இவை அனைத்தும் எந்த ஒரு செல்லுபடியாகும் வேலிடிட்டி காலத்துடன் வருவதில்லை என்பது தான்.

செலவழிக்கும் ஒவ்வொரு ரூ.10-க்கும் 1 ஜிபி டேட்டா இலவசமா?

செலவழிக்கும் ஒவ்வொரு ரூ.10-க்கும் 1 ஜிபி டேட்டா இலவசமா?

ஐ.யூ.சி டாப்-அப் வவுச்சர்களை அறிமுகப்படுத்திய நேரத்தில், பயனர்கள் ஆஃப்-நெட் குரல் அழைப்புகளுக்குச் செலவழிக்கும் ஒவ்வொரு ரூ.10-க்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டா இலவசமாகக் கிடைக்கும் என்று ஜியோ அறிவித்திருந்தது. உதாரணத்திற்கு, ரூ.1,000 ஐ.யூ.சி டாப்-அப் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 100 ஜிபி டேட்டாவுடன், டாக் டைம் நிமிடங்களுடன் எந்தவொரு காலாவதி தேதியும் இல்லாமல் வழங்கப்பட்டும்.

ஜியோ ஐ.யூ.சி டாப்-அப்கள் ரூ.10

ஜியோ ஐ.யூ.சி டாப்-அப்கள் ரூ.10

ரிலையன்ஸ் ஜியோ ஐ.யூ.சி டாப்-அப்கள் ரூ.10 என்ற விலையில் துவங்குகிறது. இந்த ரூ.10 IUC டாப் அப் திட்டத்தின் கீழ் ரூ.7.47 மதிப்புடைய டாக் டைம் நேரத்தை, 1 ஜிபி டேட்டா நன்மையுடன் வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு 124 IUC நிமிடங்கள் கிடைக்கிறது, இந்த ஐ.யூ.சி நிமிடங்களை வைத்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு ஆஃப்-நெட் அழைப்புகளை மேற்கொள்ளப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஜியோவின் ஐ.யூ.சி டாப்-அப் ரூ.20

ஜியோவின் ஐ.யூ.சி டாப்-அப் ரூ.20

ரிலையன்ஸ் ஜியோவின் ஐ.யூ.சி டாப்-அப்களில் இரண்டாவதாகக் கிடைக்கும் திட்டம் ரூ.20 என்ற திட்டம் தான். இந்த ஐ.யூ.சி டாப்-அப் திட்டத்தைப் பொறுத்தவரை, இந்த திட்டம் உங்களுக்கு ரூ.14.95 டாக் டைம் பயன் அல்லது 249 ஐ.யூ.சி நிமிடங்களை வழங்குகிறது. இத்துடன் உங்களுக்கு 2 ஜிபி 4 ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது. ரூ.10 திட்டத்தை விட 1ஜிபி கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் டேட்டா நன்மை கிடைக்கிறது.

ஜியோவின் ஐ.யூ.சி டாப்-அப் திட்டம் ரூ.50

ஜியோவின் ஐ.யூ.சி டாப்-அப் திட்டம் ரூ.50

ரிலையன்ஸ் ஜியோவின் ஐ.யூ.சி டாப்-அப்களில் மூன்றாவதாகக் கிடைக்கும் திட்டம் ரூ.50 என்ற இந்த திட்டம் தான்.இந்த ஐ.யூ.சி டாப்-அப் திட்டத்தைப் பொறுத்தவரை, இந்த திட்டம் உங்களுக்கு 5ஜிபி டேட்டாவுடன், 656 ஆஃப்-நெட் நிமிடங்கள் அதாவது, ரூ. 39.37 மதிப்புடைய டாக் டைம் நேரம் வழங்கப்படுகிறது. நீங்கள் செலவிடும் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1ஜிபி டேட்டா என்ற விதத்தில் இத்திட்டத்தின் கீழ் உங்களுக்கு 5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது.

ஜியோவின் ஐ.யூ.சி டாப்-அப் திட்டம் ரூ.100

ஜியோவின் ஐ.யூ.சி டாப்-அப் திட்டம் ரூ.100

ரிலையன்ஸ் ஜியோவின் ஐ.யூ.சி டாப்-அப்களில் நான்காவதாகக் கிடைக்கும் திட்டம் ரூ.100 என்ற இந்த திட்டம் தான். இந்த ஐ.யூ.சி டாப்-அப் திட்டத்தைப் பொறுத்தவரை, இந்த திட்டம் உங்களுக்கு 10 ஜிபி டேட்டாவுடன், பிற நெட்வொர்க்குகளுக்கான 1,362 ஆஃப்-நெட் நிமிடங்கள் அதாவது, ரூ. 81.75 மதிப்புடைய டாக் டைம் நேரத்தை வழங்குகின்றது.

ஜியோவின் ஐ.யூ.சி டாப்-அப் ரூ.500

ஜியோவின் ஐ.யூ.சி டாப்-அப் ரூ.500

அதேபோல் ரிலையன்ஸ் ஜியோவின் ஐ.யூ.சி டாப்-அப் பட்டியலில் ஐந்தாவதாக இருக்கும் ரூ.500 திட்டத்தின் கீழ், பயனர்களுக்கு 7,012 ஆஃப்-நெட் நிமிடங்கள் அல்லது ரூ.420.73 மதிப்பிலான டாக் டைம் நேர பயன் கிடைக்கிறது. இந்த ஐ.யூ.சி டாப்-அப் திட்டத்தின் கீழ் உங்களுக்கு 50 ஜிபி இலவச டேட்டா எந்தவொரு வேலிடிட்டி காலமும் இல்லாமல் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் இறுதியான ஐ.யூ.சி டாப்-அப் ரூ.1000

ஜியோவின் இறுதியான ஐ.யூ.சி டாப்-அப் ரூ.1000

இறுதியாக, ரிலையன்ஸ் ஜியோவின் ஐ.யூ.சி டாப்-அப் பட்டியலில் கிடைக்கும் அதிக விலை திட்டமான ரூ.1000 ஐ.யூ.சி டாப்-அப்பின் கீழ் பயனர்களுக்கு 14,074 ஆஃப்-நெட் நிமிடங்கள் கிடைக்கிறது. அதாவது, ரூ.844.46 மதிப்பிலான டாக் டைம் நேர பயன் உங்களுக்குக் கிடைக்கிறது. இத்துடன் பயனர்களுக்கு 100 ஜிபி இலவச டேட்டாவையும் எந்தவொரு வேலிடிட்டி காலமும் இல்லாமல் ஜியோ வழங்குகிறது.

ஜியோவில் கிடைக்கும் 4 ஜி டேட்டா வவுச்சர்கள்

ஜியோவில் கிடைக்கும் 4 ஜி டேட்டா வவுச்சர்கள்

ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு ரூ.11, ரூ.21, ரூ.51, ரூ.101 மற்றும் ரூ.251 என்று மொத்தம் இந்து 4 ஜி டேட்டா வவுச்சர் திட்டங்களையும் வழங்கி வருகிறது. ஆனால், இவற்றின் செல்லும்படி காலம் உங்களின் நடப்பு திட்டத்தின் வேலிடிட்டியுடன் ஒன்றாகச் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் ஐ.யூ.சி டாப்-அப் போன்று வரம்பற்ற வேலிடிட்டியுடன் இவை வருவதில்லை என்பதை கவனத்தில் கொள்க.

ஐ.யூ.சி டாப்-அப்களின் சிறந்த பகுதி

ஐ.யூ.சி டாப்-அப்களின் சிறந்த பகுதி

இந்த ஐ.யூ.சி டாப்-அப்களின் சிறந்த பகுதியாக அவை எந்த செல்லுபடியாகும் காலத்துடனும் வருவதில்லை. எடுத்துக்காட்டாக, ஜியோ நெட்வொர்க்கில் உள்ள அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களும் ஒரு கட்டத்தில் காலாவதியாகின்றன, ஆனால் ஐ.யூ.சி டாப்-அப்கள் அப்படி இல்லைவரம்பற்ற செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறதுஎன்று ஜியோ கூறியுள்ளது.

சந்தேகம் இல்லாத சிறந்த திட்டம் இவை தான்

சந்தேகம் இல்லாத சிறந்த திட்டம் இவை தான்

இந்த டாப்-அப்கள் வழங்கும் இலவச பாராட்டு டேட்டா நன்மை கூட எந்தவொருசெல்லுபடியாகும் வரம்பு காலத்துடன் வருவதில்லை. ஜியோவிலிருந்து கிடைக்கும் 4 ஜி டேட்டா வவுச்சர்களை விட, ஐ.யூ.சி டாப்-அப் வவுச்சர்கள் ஜியோ பயனர்களுக்குஅதிக நன்மையை வழங்குகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Best Mobiles in India

English summary
Jio IUC Top-Ups for Prepaid Users Start From Rs 10 Provides Upto 100 GB Of Free Data Without Validity : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X