விசுவாசத்தை காட்டிய Jio யூசர்கள்.. Airtel, Vodafone, BSNL-ஐ வரிசையா நிக்க வச்சி வெளுத்துவிட்ட அம்பானி!
நியூ இயர் ஆஃபர் ரீசார்ஜ், சாட்ஜிபிடி-க்கு போட்டியாக பாரத்ஜிபிடி, சொந்தமாக டிவி ஆப்ரேட்டிங் சிஸ்டம், செயற்கைகோள் வழியிலான இண்டர்நெட் சேவை என.. 2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் படு பிஸியாக உள்ளது!
இதற்கிடையில் டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது ஜியோ நிறுவனத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளது. அதென்ன குட் நியூஸ்? இதற்கும் ஜியோ யூசர்களின் விசுவாசத்திற்கும் என்ன தொடர்பு? இதெப்படி ஏர்டெல், வோடாபோன், பிஎஸ்என்எல்-க்கான தலைவலியாக மாறியது? இதோ விவரங்கள்:

அதென்ன குட் நியூஸ்? டிராய் வெளியிட்டுள்ள மாதாந்திர பெர்ஃபார்மென்ஸ் இன்டிகேட்டர் ரிப்போர்ட்டின்படி (Monthly performance indicator report), ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே கடந்த அக்டோபர் 2023 இல் ஆக்டிவ் வயர்லெஸ் யூசர்களை (Active Wireless Users) சேர்த்துள்ள ஒரே டெலிகாம் ஆப்ரேட்டராகும்.
அதாவது ரிலையன்ஸ் ஜியோவை தவிர்த்து, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய மூன்று டெலிகாம் நிறுவனங்களுமே தத்தம் சேவையின்கீழ் இருந்த வயர்லெஸ் யூசர்களை இழந்துள்ளன. ஆச்சரிப்படத்தக்க வைகையில் வோடபோன் ஐடியா நிறுவனமானது கடந்த செப்டம்பரில் ஆக்டிவ் யூசர்களை சேர்த்தது, ஆனால் அடுத்த மாதமே வழக்கமான நிலைக்கு திரும்பிவிட்டது.

டிராயின் சமீபத்திய அறிக்கையின்படி, அக்டோபர் 2023-இல் ஜியோ நிறுவனம் 1.84 மில்லியன் ஆக்டிவ் வயர்லெஸ் பயனர்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் ஜியோவின் மொத்த ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை 420.27 மில்லியனில் இருந்து 422.11 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஜியோவின் ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 452.37 மில்லியனாக உள்ளது.
அதே அக்டோபர் 2023-இல் பார்தி ஏர்டெல் நிறுவனமானது 1.19 மில்லியன் ஆக்டிவ் பயனர்களை இழந்துள்ளது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை 376.15 மில்லியனில் இருந்து 374.96 மில்லியன் ஆக குறைந்துள்ளது. தற்போது ஏர்டெல்லின் ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 378.13 மில்லியனாக உள்ளது.

ஏற்கனவே படுமோசமான நிலையில் உள்ள வோடபோன் ஐடியா நிறுவனமானது அக்டோபர் 2023-இல் பார்தி ஏர்டெல் நிறுவனமானது 1.14 மில்லியன் ஆக்டிவ் பயனர்களை இழந்துள்ளது. இதன் மூலம் வோடபோன் ஐடியாவின் மொத்த ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை 198.38 மில்லியன் ஆக குறைந்துள்ளது. தற்போது ஏவோடபோன் ஐடியாவின் ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 225.49 மில்லியனாக உள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை பொறுத்தவரை, அக்டோபர் 2023 இல் இது 0.5 மில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் பயனர்களை இழந்துள்ளது. பிஎஸ்என்எல்-ன் மொத்த ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை 49.49 மில்லியன் ஆகவும், ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 93.04 மில்லியன் ஆகவும் உள்ளது.
மேற்கண்ட எண்கள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மீது இந்திய வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்துவதோடு சேர்த்து, பார்தி ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களின் மீது இந்திய மக்களுக்கு இருக்கும் சந்தேக பார்வையையும், நம்பிக்கை இல்லாத தன்மையையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
நாட்டின் பல பகுதிகளில், மிகவும் வேகமாக தனது 5ஜி சேவையை கொண்டு சென்றது கூட, ஜியோவின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்துவிட்டது என்றாலும் கூட, ஜியோவின் காந்த சக்தியில் இருந்து தன் சந்தாதாரர்களை காப்பாற்ற முடியாமல் திணறுகிறது என்பதே நிதர்சனம்.
மறுகையில் உள்ள வோடாபோன் ஐடியா நிறுவனம் 5ஜி அறிமுகம் குறித்து இன்னும் வாயே திறக்கவில்லை. இந்நிறுவனம் பெரும் நிதி சிக்கலில் உள்ளது. கடைசியாக உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் பரந்த அளவிலான 4ஜி நெட்வொர்க்கே இல்லை.இருந்தாலும் இந்தியாவில் மொத்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் (வயர்லெஸ் + வயர்லைன்) எண்ணிக்கை செப்டம்பர் 2023-இல் 885 மில்லியனாக இருந்தது. அது அக்டோபர் 2023-இல் 888.27 மில்லியனாக அதிகரித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








