பெரிய கும்பிடு.. ரூ.91-க்கு கொடுத்த அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 3 ஜிபி டேட்டா.. இது Jio ரீசார்ஜ்!
பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே ரூ.100-க்கும் கம்மியான விலைக்கு திட்டங்களை கொடுத்து வருகிறது என்று டெலிகாம் கஸ்டமர்கள் நினைக்கின்றனர். ஆனால், அந்த நிறுவனத்தையே தூக்கி சாப்பிடும்படி அடிமட்ட விலைக்கு ஜியோ (Jio) நிறுவனம் திட்டங்களை கொடுக்கிறது. ரூ.91 விலைக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ.91 விலை கொண்ட திட்டம் ஜியோபோன் (JioPhone) கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் பிஎஸ்என்எல் கொடுக்கும் விலைக்கு நிகரான இருக்கிறது. அதே நேரத்தில் இதில் 4ஜி வேகத்தில் டே்டடா சேவையை பெற்று கொள்ளலாம். இது ஒட்டுமொத்த டெலிகாம் சர்க்கிள்களிலும் கிடைக்கும் டேட்டா வேகமாக இருக்கிறது.

ஆனால், பிஎஸ்என்எல்லில் குறிப்பிட்ட சர்க்கிள்களை தவிர மற்ற சர்க்கிள்களில் 4ஜி வேகத்தில் டேட்டாவை பயன்படுத்த முடியாது. இதனாலேயே பிஎஸ்என்எல் நிறுவனம், அதனுடைய இடத்தை பிடிக்க போராடி வருகிறது. சரி இப்போது, ஜியோ ரூ.91 திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 91 திட்ட விவரங்கள் (Jio Rs 91 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை அடிமட்டத்தில் இருந்தாலும், அதில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்களில் நாளொன்றுக்கு 200 எம்பி டேட்டா + 200 எம்பி கூடுதல் டேட்டா கிடைக்கிறது.
ஆகவே, மொத்தமாக 3 ஜிபி டேட்டாவை இதில் பெற்று கொள்ளலாம். அதேபோல மொத்தமாகவே 50 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இதுபோக 28 நாட்கள் முழுவதும் ஜியோபோன் கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaiming Voice Calls) செய்து கொள்ளலாம்.
மேலும், ஜியோ டிவி (Jio TV) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 4ஜி வேகத்தில் டேட்டா சலுகைகளை கொடுக்கும் வவுச்சர்களும் (Data Voucher) கிடைக்கின்றன. ஆகவே, இதை கிட்டத்தட்ட ஸ்மார்ட்போன் போலவே பயன்படுத்த முடியும். டேட்டா வவுச்சர்களின் விலையும் அடிமட்ட விலைக்கே கிடைக்கின்றன.
இந்த திட்டத்தை ஜியோபோன் மட்டுமல்லாமல், ஜியோபோன் பிரைமா மாடல்களிலும் பெற்று கொள்ளலாம். சொல்லப்போனால், இதைவிட மலிவான விலைக்கும் ஜியோபோன் திட்டங்கள் கிடைக்கின்றன. அதாவது, ரூ.75 விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் திட்டம் இருக்கிறது. இது பிஎஸ்என்எல்லில் கூட கிடைக்காத சலுகையாகும்.
ஜியோ ரூ 75 திட்ட விவரங்கள் (Jio Rs 75 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 23 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை கொடுத்து இருக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எம்பி டேட்டா மற்றும் 200 எம்பி கூடுதல் டேட்டா சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது.
ஆகவே, மொத்தமாக 2.5 ஜிபி டேட்டாவை இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக மற்ற திட்டங்களின் கிடைப்பதை போலவே இதிலும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. மேலும், 50 எஸ்எம்எஸ் சலுகையையும் கொடுக்கிறது. எப்படி பார்த்தாலும், இந்த ஜியோ திட்டம் அடிமட்ட விலையில் சலுகைகளை கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








