Home
News

Jio யூசர்கள் இதை கவனிங்க.. 1 ரூபாய் 50 பைசா அதிகரிப்பு.. இன்னும் பல கோடிகளை அள்ளப்போகும் அம்பானி!

ஜியோ (Jio) சேவைகளை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் பகிர்ந்துள்ளது. அறியாதோர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் என்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் டிஜிட்டல் சேவைகளை இயக்கும் ஜியோ பிளாட்ஃபார்ம்களின் டெலிகாம் யூனிட் ஆகும்.

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம், 2024 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை (First Quarter Results Fiscal year 2024) அறிவித்துள்ளது. ஜியோவின் கூற்றுப்படி, நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் 12.2% ஆக உயர்ந்துள்ளது. உண்மை என்னவென்றால் இதுவெறும் ஆரம்பம் தான்!

Jio யூசர்கள் இதை கவனிங்க.. 1 ரூபாய் 50 பைசா அதிகரிப்பு!

கடந்த மார்ச் 31, 2023 இல் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் ரூ.23,394 கோடியாகவும், முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.21, 873 கோடியாகவும் இருந்தது. அதுவே மார்ச் காலாண்டு வருவாய் ரூ.24,042 கோடியாக உயர்ந்துள்ளரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் அறிவித்துள்ளது.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4863 கோடியாக இருந்தது, முந்தைய காலாண்டில் இது ரூ.4716 கோடியாகவும், அதற்கு முந்தைய ஆண்டு ரூ.4335 கோடியாகவும் இருந்தது. ஒரு ஜியோ வாடிக்கையாளராக நீங்கள் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் - இந்த லாபத்திற்கு பின்னால் உள்ள காரணங்களைத்தான்!

ஜியோவின் இந்த லாபத்திற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன - குறைந்த உரிமக் கட்டணம், ஸ்பெக்ட்ரம் மற்றும் நிதிச் செலவுகள் தேய்மானம், கடன்தொகை மற்றும் நெட்வொர்க் இயக்கச் செலவுகள் போன்றவைகளை கூறலாம். ஆனால் மிக முக்கியமான காரணம் என்னவென்றால் ஜியோ சேவையின் கீழ் புதிதாக சேர்ந்த 92 லட்சம் பயனர்கள் தான்!

ஆம்! ஜியோ பிளாட்ஃபார்ம்களின் டெலிகாம் யூனிட் ஆனது, ஜூன் காலாண்டில் அதன் நெட்வொர்க்கில் 9.2 மில்லியன் பயனர்களை (அதாவது 92 லட்சம் பயனர்களை) சேர்த்துள்ளது. இப்படியாக கடந்த ஜூன் 30 அன்று ஜியோவின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 448.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.

சிறந்த சந்தாதாரர்கள் கலவை (Better Subscriber Mix) மற்றும் வயர்லைன் சேவைகளின் (Wireline Services) அதிகரிப்பு காரணமாக, காலாண்டுக்கான ஏஆர்பியூ (ARPU), அதாவது ஒரு சராசரி பயனருக்கான வருவாய் (Average Revenue Per User), ஆனது ரூ.179 இல் இருந்து ரூ.180.5 ஆக மேம்பட்டுள்ளது; அதாவது 1 ரூபாய் 50 பைசா அதிகரித்துள்ளது.

ஜியோவின் இந்த அறிவிப்பில் இருந்து, ஜியோவிற்கு கிடைத்துள்ள லாபத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் ஒரு மறைமுகமான நற்செய்தி என்னவென்றால்.. ஜியோ நிறுவனமானது தனது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தாமலேயே லாபாபத்தை சந்தித்துள்ளது.ஆக இப்போதைக்கு கட்டண உயர்வை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அதுமட்டுமின்றி - அடுத்த சில மாதங்களுக்கு ஜியோ தான் ராஜா; வேறு சேவைகளுக்கு மாறவும் வேண்டாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Is On Right Track Added 92 Lakhs New Users and Improved ARPU So No Tarrif Hike As of Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X