Home
News

வெறும் ரூ.2999-க்கு Jio-வின் புதிய 5G போன்? 108MP கேமரா, 6000mAh பேட்டரி, 8GB ரேம்? இது அம்பானிக்கு தெரியுமா?

கடந்த சில நாட்களாக.. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ரூ.3000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு புதிய 5ஜி போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், அது 108எம்பி மெயின் கேமரா, 6000mAh பேட்டரி உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும் என்கிற செய்திகளை பார்க்க முடிந்தது. இது உண்மைதானா?

ஜியோ போன் 3 5ஜி (Jio Phone 3 5G) என்கிற பெயரின் கீழ் பரவும் இந்த தகவல் முற்றிலும் நம்பத்தகாத ஒன்றாகும். கான்செப்ட் போன்களை உருவாக்குபவர்களின் கனவில் கூட, இப்படி ஒரு 5ஜி போன் வராது.அந்த அளவிற்கு - ஜியோ போன் 3 5ஜி போனின் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் ஆனது கேட்பவர்களை சிரிப்பு மூட்டும்படி உள்ளது!

வெறும் ரூ.2999-க்கு Jio-வின் புதிய 5G போன்? இது அம்பானிக்கு  தெரியுமா?

ஜியோ போன் 3 5ஜி அப்படி என்னென்ன அம்சங்களை பேக் செய்யுமாம்? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 5.4-இன்ச் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவை கொண்டுருக்குமாம். கேமராக்களை பொறுத்தவரை இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்குமாம். அதில் 108எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி போர்ட்ரெய்ட் கேமரா இடம்பெறுமாம்; முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா பேக் செய்யப்படுமாம்.

பேட்டரியை பொறுத்தவரை கூறப்படும் ஜியோ போன் 3 5ஜி மாடல் ஆனது 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6000mAh பேட்டரியை கொண்டிருக்குமாம். இது 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் (4 ஜிபி ரேம் + 64 ஜிபி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி) வெளியாகுமாம்.

மேற்கண்ட அம்சங்களை படிக்கும் போதே சிரித்து இருந்தாலோ அல்லது "அடேய் கனவா இருந்தாலும் ஒரு நியாயம் தர்மம் வேணாமா டா!" என்று நினைத்து இருந்தாலோ.. கொஞ்சம் பொறுங்கள் - இனிமேல் தான் நாம் ஜியோ போன் 3 5ஜி மாடலின் விலை விவரங்களை பற்றி பார்க்க போகிறோம். இனிமேல் தான் உண்மையான காமெடியே இருக்கிறது!

நாம் மேற்கண்ட எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு ஸ்மார்ட்போனை (வருங்காலத்தில்) ஜியோ உருவாக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதெல்லாமே வெறும் ரூ.3000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்பது தான் உச்சகட்ட காமெடி. "கூறப்படும்" ஜியோ போன் 3 5ஜி மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.2,999 - ரூ.3,999 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று அடித்து விட்டு இருக்கிறார்கள்.

இதைக்கூட மன்னித்து விடலாம்; ஜியோ போன் 3 5ஜி மாடல் ஆனது அறிமுக சலுகையின் கீழ் வெறும் ரூ.999 க்கு வாங்க கிடைக்கும் என்றும் கூறி இருக்கிறார்கள். இதற்கெல்லாம் எந்த வாய்ப்புமே இல்லை. ஏனென்றால் ஜியோவின் லேட்டஸ்ட் 4ஜி பீச்சர் போன்களான ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி (JioBharat K1 Karbonn 4G) மற்றும் ஜியோபாரத் வி2 4ஜி (JioBharat V2 4G) ஆகிய 2 மாடல்களின் விலைகளுமே ரூ.999 ஆகும்,

மொபைல் போன் மார்க்கெட்டின் நிலைமை இப்படி இருக்கும் போது, முகேஷ் அம்பானியால் மட்டுமல்ல, எந்தவொரு மொபைல் போன் நிறுவனத்தாலும் வெறும் ரூ.999 க்கு இப்படி ஒரு 5ஜி போனை அறிமுகம் செய்யவோ, விற்பனை செய்யவோ முடியாது. எனவே இதுபோன்ற போலியான தகவல்களை நம்ப வேண்டாம்.

பின்குறிப்பு: ஜியோபாரத் கே1 கார்பன் 4ஜி மற்றும் ஜியோபாரத் வி2 4ஜி போன்களின் அசல் விலை ரூ.999 ஆக இருந்தாலும், 2024 தீபாவால் ஆபரின் கீழ் இவ்விரு போன்கள் மீதும் ரூ.300 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு,வெறும் ரூ.699 க்கு வாங்க கிடைக்கிறது.ஆர்வமுள்ள வடிக்கையானார்கள் (அடுத்த சில நாட்களில், எப்போது வேண்டுமானலும் முடியவடையும்) இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio is not working on new 5G Phone with 108MP Camera 6000mAh battery Under Rs 3000 It is Fake
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X