Home
News

Jio கஸ்டமர்கள் வயிற்றில் பாலை வார்த்த அம்பானி.. 3 மாத வேலிடிட்டி உடன் பேஸிக் ரீசார்ஜ் நீக்கப்படவில்லை!

28 நாட்களுக்கு ஜியோ சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள உதவும் பேஸிக் ரீசார்ஜ் ஆன ரூ.249 பிளான் ஆனது ஜியோவின் ப்ரீபெய்ட் சேவையின் கீழ் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு ஜியோ (3 மாத) திட்டமும் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

அது ஜியோவின் ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். இது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் ஆகிய முக்கிய நன்மைகளை 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ரூ.799-ன் கீழ் ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் அணுகல்களும் கிடைக்கும்.

Jio: 3 மாத வேலிடிட்டி உடன் பேஸிக் ரீசார்ஜ் நீக்கப்படவில்லை!

நேற்று (ஆகஸ்ட் 21 ஆம் தேதி) வெளியான சில அறிக்கைகள் ஆனது ரூ.799 மதிப்புள்ள ஜியோ திட்டமும் நீக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தன. ஆனால் அது உண்மை இல்லை. இந்த திட்டம் இன்னமும் ஜியோ ப்ரீபெய்ட் சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (Reliance Jio Official Website), மைஜியோ ஆப் (MyJio App) வழியாக ரீசார்ஜ் செய்ய முயற்சிக்கவும்; அங்கே கிடைக்கவில்லை என்றால் கிரெட் (CRED), போன்பே (PhonePe) வழியாக முயற்சி செய்ய சொல்லி டெலிகாம்டால்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரூ.799 என்பது ரூ.270 என்கிற மாதாந்திர செலவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டம் என்பதால், இது பட்ஜெட் வாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமான 3 மாத கால பேஸிக் ரீசார்ஜ் ஆக உள்ளது. இதுவும் நீக்கப்பட்டுவிட்டது என்கிற தகவல் பல ஜியோ பயனர்களை கவலையில் ஆழ்த்தியது; தற்போது அந்த கவலை / குழப்பம் சரி செய்யப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனம் தனது வலைதளத்தில் சில மாற்றங்களையும் செய்துள்ளது. ஜியோவின் மலிவு விலை பிரிவின் கீழ் உள்ள ரீசார்ஜ்கள் பழைய திட்டங்கள் கொண்டு அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அதாவது ரூ.249 நீக்கப்பட்ட பின்னர், புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள விவரங்களின்படி, இப்போதைக்கு ரிலையன்ஸ் ஜியோவின் கீழ் ரூ.200-ஐ சுற்றி 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கள் மட்டுமே அணுக கிடைக்கின்றன.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.189 திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.189 திட்டம் ஆனது 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டம் மொத்தம் 300 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 2 ஜிபி மொத்த டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் ஒரு ஜியோ பயனரின் சிம் கார்டு ஆனது 28 நாட்கள் முழுவதும் ஆக்டிவ் ஆக இருப்பதை உறுதி செய்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.209 திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.209 திட்டம் ஆனது 22 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டம் டெய்லி 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது. இந்த திட்டம் ஒரு ஜியோ பயனரின் சிம் கார்டு ஆனது 22 நாட்கள் முழுவதும் ஆக்டிவ் ஆக இருப்பதை உறுதி செய்கிறது.

ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் அதன் ரூ.249 திட்டத்தை நீக்கியுள்ளது. இனி பார்தி ஏர்டெல்லின் பேஸிக் ரீசார்ஜ் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டமாக இருக்கும். இது டெய்லி 1.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. ஜியோவை போலவே இனி ஏர்டெல்லின் கீழும் டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கும் எந்த திட்டமும் இருக்காது. இதற்கு அடுத்தபடியாக ரூ.361 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இது மொத்தம் 50ஜிபி டேட்டாவை 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio is Not Removed Rs 799 Plan With 84 Days Validity Still Available For Jio Customers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X