Home
News

அய்யா அங்குசாமி நீ நல்லா இருக்கணும்.. மகிழ்ச்சியின் உச்சியில் அம்பானி.. எல்லாம் Vodafone பார்த்த வேலை!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானியை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டு செல்லும் வேலை ஒன்றை பார்த்துள்ளது வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம். மும்பையை தொடர்ந்து குஜராத்திலும் வோடபோன் ஐடியாவின் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் "மறைமுகமான" உயர்த்தப்பட்டுள்ன.

மும்பை மற்றும் குஜராத்தில் உள்ள பிராந்தியங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் வோடபோன் ஐடியாவின் மலிவு விலை திட்டங்களின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு திட்டத்தின் விலையை அதிகரித்தால் அது நேரடியான விலை உயர்வாகும்; அதுவே அதன் நன்மைகளை மட்டும் குறைத்தால் அது மறைமுகமான விலை உயர்வாகும்.

மகிழ்ச்சியின் உச்சியில் அம்பானி.. எல்லாம் Vodafone பார்த்த வேலை!

வோடபோன் ஐடியா ரூ.99 திட்டத்தின் வேலிடிட்டி ஆனது 28 நாட்களில் இருந்து 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.128 திட்டமானது இப்போது 28 நாட்களுக்கு பதிலாக 18 நாட்கள் என்கிற வேலிடிட்டியை மட்டுமே வழங்குகிறது. செல்லுபடியாகும் காலம் குறைக்கப்பட்டாலும், இந்த திட்டங்களின் நன்மைகளில் எந்த மாற்றமும் இல்லை.

வோடபோன் ஐடியாவின் இந்த நடவடிக்கை முகேஷ் அம்பானிக்கு எப்படி மகிழ்ச்சியை தரும்? இந்த கேள்விக்கு 2 பதில்கள் உள்ளன. வோடாபோனின் இந்த நடவடிக்கை, ஏற்கனவே செம்ம கடுப்பில் உள்ள அதன் பயனர்களை மென்மேலும் எரிச்சல் அடைய செய்யலாம்; அவர்கள் வோடாபோனின் சேவையை விட்டு வெளியேறவும் செய்யலாம்.

அப்படியாக வெளியேறும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டே விருப்பங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று ரிலையன்ஸ் ஜியோ, மற்றொன்று பார்தி ஏர்டெல். பெரும்பாலான இடங்களில் ஜியோ 5ஜி சேவைகள் அறிமுகமாகி விட்டதால், ஜியோவிற்கு நல்ல எண்ணிக்கையிலான புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பிரகாசமான வாய்ப்புள்ளது. இது அம்பானிக்கு குட் நியூஸ் தானே!

முகேஷ் அம்பானிக்கு இன்னொரு குட் நியூஸும் உள்ளது. இந்திய டெலிகாம் சந்தையை பொறுத்தவரை, யார் முதலில் விலை உயர்வை அறிவிக்கிறார்கள் என்பதே போட்டி. அதை வோடாபோன் நிறுவனம் செய்யத்தொடங்கி விட்டதால், ரிலையன்ஸ் ஜியோவும் அதன் அடுத்தக்கட்ட விலை உயர்வை தயக்கமின்றி திட்டமிடலாம்.

ரூ.99 மற்றும் ரூ.128-ன் வேலிடிட்டியை குறைத்ததோடு நில்லாமல், குஜராத்தில் நான்கு புதிய வோடபோன் ஐடியா திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவைகள் ரூ.198, ரூ.204, ரூ.224 மற்றும் ரூ.232 ஆகும். நன்மைகளை பொறுத்தவரை ரூ.198 திட்டமானது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் ரூ.198 மதிப்புள்ள டாக்டைம் மற்றும் 500எம்பி டேட்டாவை வழங்குகிறது.

ரூ.204 திட்டமானது 30 நாட்களுக்கு ரூ.204 டால்க்டைம் மற்றும் 500எம்பி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பிட்ட டால்க்டைம் தீர்ந்ததும் அழைப்புகளுக்கு வினாடிக்கு 2.5 பைசா என்கிற கட்டணம் வசூலிக்கப்படும். அடுத்ததாக உள்ள ரூ.224 திட்டமானது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 4ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்குகிறது; இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள் இல்லை.

கடைசியாக உள்ள ரூ.232 திட்டமானது ரூ.224 வழங்கும் அதே நன்மைகளைத்தான் வழங்குகிறது. அதாவது ஒரு மாதத்திற்கு 4ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. மேலும் இதிலும் கூட எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் இல்லை, இருப்பினும் இதன் விலை ஏன் சற்றே அதிகமாக உள்ளது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio is Happy After Vodafone Idea Announced Indirect Tariff Hike in Mumbai and Gujarat Here is Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X