Home
News

இந்த மூன்று Jio பிளான்களுக்கு 40GB டேட்டா இலவசம்.. IPL திட்டமாம் பாஸ்.. மிஸ் பண்ணாதீங்க!

ஐபிஎல் (IPL) போட்டிகளை முன்னிட்டு மூன்று அசத்தலான ப்ரீபெய்டு பிளன்களை (Prepaid Plans) ஜியோ (Jio) நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மூன்று பிளான்களில் ஏதாவது ஒன்றை ரீசார்ஜ் செய்தாலும், உங்களுக்கு 40 ஜிபிக்கும் மேலாக இலவச டேட்டா கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், பிளானிலும் பல்வேறு சலுகைகள் உள்ளன. இதுகுறித்து விரிவாக காண்போம்.

டாடா ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து நாட்டின் முன்னணி டெலிகாம் (Telecom) நிறுவனமான ஜியோ பல்வேறு அசத்தலான ப்ரீபெய்டு (Prepaid) மற்றும் போஸ்ட்பெய்ட் (Postpaid) ரீசார்ஜ் பிளான்களை (Recharge Plans) அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த பிளான்கள் மலிவான விலையில் பல்வேறு சலுகைகள் உடன் வருகின்றன.

இந்த மூன்று Jio பிளான்களுக்கு 40 GB டேட்டா இலவசம்.. IPL திட்டமாம் பாஸ்

அந்த வரிசையில், மூன்று 3ஜிபி தினசரி டேட்டா பிளான்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிளான்களுக்கு 40 ஜிபிக்கும் மேல் இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இதோடு 5ஜி சலுகையும் வழங்கப்படுவதால், ஜியோ யூசர்களுக்கு ஐபிஎல் போட்டிகளை காண்பதில் எந்த டேட்டா சிக்கலும் இருக்காது. இந்த திட்டங்கள் குறித்து காண்போம்.

ஜியோ ரூ.219 பிளான் (Jio Rs 219 plan): இதுவொரு 14 நாட்கள் திட்டமாகும். இதில் நாளொன்றுக்கு 3ஜிபி டேட்டா (3GB Data) வீதம்
40ஜிபிக்கும் மேல் டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்ஸ் (Local, STD and Roaming), நாளொன்றுக்கு 100 எம்எம்எஸ் ஆகிய சலுகைகள் உள்ளன.

அதோடு ஜியோ (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ செக்யூரிட்டி (JioSecurity), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த பிளானை ரீசார்ஜ் செய்த பின்பு, ரூ. 25 மதிப்புள்ள 2ஜிபி டேட்டாவுக்கான ஆட்-ஆன் வவுச்சர் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஜியோ வெல்கம் ( Jio Welcome ) ஆஃபர் மூலம் கூடுதல் கட்டணமின்றி 5ஜி சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோ ரூ.399 பிளான் (Jio Rs 399 plan): இதுவொரு 28 நாட்கள் திட்டமாகும். இதில் நாளொன்றுக்கு 3ஜிபி டேட்டா , அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்ஸ் (Local, STD and Roaming), நாளொன்றுக்கு 100 எம்எம்எஸ் ஆகிய சலுகைகள் உள்ளன.

அதேபோல ஜியோ (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ செக்யூரிட்டி (JioSecurity), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்ற பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த பிளானை ரீசார்ஜ் செய்த பின்பு, ரூ. 61 மதிப்புள்ள 6ஜிபி டேட்டாவுக்கான ஆட்-ஆன் வவுச்சர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 90 ஜிபிக்கும் மேல் டேட்டாவை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோ ரூ. 999 பிளான் (Jio Rs 999 plan): இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதிலும் நாளொன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்ஸ் (Local, STD and Roaming), நாளொன்றுக்கு 100 எம்எம்எஸ் ஆகிய சலுகைகள் உள்ளன.

அதேபோல ஜியோ (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ செக்யூரிட்டி (JioSecurity), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்ற பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக ரூ.241 மதிப்பிலான 40GB இலவச டேட்டாவுக்கான ஆட்-ஆன் வவுச்சர் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio is gives up to 40GB free data three selected recharge plans here is full details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X