Home
News

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. மலிவு விலையில் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்.. பட்டியல் இதோ..

TRAI-யின் புதிய விதிமுறைகளின்படி, குறைந்த வேலிடிட்டி கொண்ட வாய்ஸ் மற்றும் SMS மட்டும் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அறிமுகம் செய்ததை தொடர்ந்து தற்போது ஜியோ நிறுவனமும் அறிமுகம் செய்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு தான் குறைந்த விலையில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என டிராய் அமைப்பு டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் தற்போது ரூ.147, ரூ.177, 196, ரூ.197, ரூ.448 மற்றும் ரூ.1748 திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது இந்த திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்..

ஜியோ ரூ.147 திட்டம் (Jio Rs 147 Plan) அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் மொத்தமாக 300 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 22 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை கிடையாது.

ஜியோ ரூ.177 திட்டம் (Jio Rs 177 Plan) அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் மொத்தமாக 300 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் ஓடிடி மற்றும் டேட்டா நன்மை கிடையாது.

ஜியோ ரூ.196 திட்டம் (Jio Rs 196 Plan) அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் மொத்தமாக 300 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் ஓடிடி மற்றும் டேட்டா நன்மை கிடையாது.

ஜியோ ரூ.197 திட்டம் (Jio Rs 197 Plan) அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் மொத்தமாக 300 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். இந்த திட்டத்தில் ஓடிடி மற்றும் டேட்டா நன்மை கிடையாது.

ஜியோ ரூ.448 திட்டம் (Jio Rs 448 Plan) அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் மொத்தமாக 1000 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஜியோஏஐகிளவுட் (JioAICloud) சந்தா மற்றும் ஜியோடிவி (JioTV) சந்தா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ.1748 திட்டம் (Jio Rs 1748 Plan) அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் மொத்தமாக 1000 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் ஜியோஏஐகிளவுட் (JioAICloud) சந்தா மற்றும் ஜியோடிவி (JioTV) சந்தா வழங்கப்படுகிறது.

அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் தேவைப்படும் ஜியோ பயனர்கள் மேலே உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. ஒருவேளை பட்ஜெட் விலையில் அன்லிமிடெட் சலுகைகள் எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யலாம்.

ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி தருகிறது இந்த ஜியோ திட்டம். 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்..

ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம்.

கேன்வா ப்ரோ லைட் சந்தா, ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Jio Introduces Voice-Only Prepaid Plans Starting at Rs 147: Check Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X