Home
News

40 நாள் வேலிடிட்டி உடன் புது Jio திட்டம் அறிமுகம்.. 40GB டேட்டா உடன் இலவச OTT.. எந்த ரீச்சர்ஜ்?

இந்தியாவின் டெலிகாம் துறையில், மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஆக உள்ள ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), தனது ஜியோஃபைபர் (JioFiber) அல்லது ஜியோஹோம் (JioHome) வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய பிராட்பேண்ட் திட்டத்தை (New Broadband Plan) அறிமுகப்படுத்தி உள்ளது. நடைபெற்று வரும் பிஃபா உலகக் கோப்பை 2026-ஐ கருத்தில் கொண்டு இந்த புதிய ரூ.798 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இது ஒரு வழக்கமான பிராட்பேண்ட் திட்டம் அல்ல, மாறாக ஒரு 'டேட்டா சேஷெட்' (data sachet) அல்லது கூடுதல் டேட்டா பூஸ்டர் (data booster) பேக் ஆகும். அதாவது ஏற்கனவே ஒரு திட்டத்தின் கீழ் உள்ள பயனரின், அவருக்கு கிடைக்கும் எப்யுபி டேட்டா லிமிட் (FUP Data Limit) தீரும் நிலையில் இருந்தால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து தொடர்ந்து அதிவேக இண்டர்நெட்டை பயன்படுத்தலாம்.

40 நாள் வேலிடிட்டி உடன் புது Jio திட்டம் அறிமுகம்!

பிஃபா உலகக் கோப்பை 2026-க்கான ஜியோவின் ரூ.798 டேட்டா சேஷெட் திட்டத்தின் நன்மைகள்: உங்களிடம் ஏற்கனவே ஜியோஃபைபர் அல்லது ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பு இருந்தால், இந்த ரூ.798 திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்து கூடுதல் பலன்களை பெறலாம். இத்திட்டத்தில், பயனர்களுக்கு 40ஜிபி டேட்டாவுடன், அந்த டேட்டாவை பயன்படுத்துவதற்கான 40 நாட்கள் செல்லுபடியாகும் காலமும் (validity) கிடைக்கும்.

மேலும், இதில் ஜீ5 (ZEE5) சந்தாவும் கிடைக்கிறது, இதன் மூலம் நீங்கள் பிஃபா உலக கோப்பை 2026 போட்டிகளை ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம். இதில் இண்டர்நெட் ஸ்பீட் 100 எம்பிபிஎஸ் ஆக இருக்கும். இத்திட்டம் தற்போது ஜியோ இணையதளத்தின் 'டேட்டா சேஷெட்' பிரிவில் கிடைக்கிறது.

ஜீ5 சந்தாவை பெற, நீங்கள் மைஜியோ (MyJio) ஆப்பில் உள்ள 'கூப்பன்' (coupon) பகுதிக்கு சென்று, பின்னர் மை வின்னிங்ஸ் (My Winnings) பகுதிக்கு செல்ல வேண்டும். மாற்றாக, ஏற்கனவே ஜீ5 தளத்திற்கான அணுகலை உள்ளடக்கிய ஜியோ பிராட்பேண்ட் திட்டங்களையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

ஜியோ நிறுவனம் பல ஓடிடி பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. ஒருவேளை உங்கள் தற்போதைய திட்டத்தில் ஓடிடி பலன்களோ அல்லது ஜீ5 சந்தாவோ இல்லையென்றால், பிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து போட்டிகளை தவறவிடாமல் இருக்க இந்த ரூ.798 திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

ஜியோ 3 மாத சந்தா: அது ரூ.2222 திட்டமாகும். இந்த திட்டம் ஒரு சுவாரஸ்யமான கட்டண பிரிவின் கீழ் உள்ளது. சராசரியாக பார்த்தால், இந்த திட்டம் மாதத்திற்கு சுமார் ரூ.740 செலவாகும் ஒரு சந்தாவாக உள்ளது. ஆனாலும் கூட இதன் இண்டர்நெட் ஸ்பீட் வெறும் 30எம்பிபிஎஸ் மட்டுமே ஆகும்.

ஜியோவின் இந்த ரூ. 2,222 திட்டம் ஏன் இவ்வளவு விலை உயர்ந்ததாக உள்ளது? இதற்கு காரணம், இத்திட்டத்துடன் வழங்கப்படும் ஓடிடி (OTT) என்கிற ஓவர்-தி-டாப் (Over-the-top) சேவைகளுக்கான சலுகைகள் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களும் (TV Channels) தான்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.2,222 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 2,222 திட்டத்தில் பின்வரும் ஓடிடி சேவைகளுக்கான சந்தாக்கள் அடங்கியுள்ளன: JioHotstar, SonyLIV, ZEE5, SunNXT, Hoichoi, Discovery+, TimesPlay, TarangPlus, ErosNow, Lionsgate Play, ShemarooMe மற்றும் ETV Win. ஆக மொத்தம் 16 ஓடிடி சேவைகள் இதில் கிடைக்கின்றன.

இத்திட்டத்துடன் வழங்கப்படும் இண்டர்நெட் ஸ்பீட் 30 எம்பிபிஎஸ் ஆகும். நீண்ட கால திட்டத்தை தேர்ந்தெடுப்பதால், ஜியோ இதில் கூடுதலாக ஏழு நாட்களுக்கான இலவச சேவையையும் வழங்குகிறது. மேலும் பயனர்களுக்கு 1000 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களும் இத்திட்டத்தில் கிடைக்கின்றன. இதில் வழங்கப்படும் 30 எம்பிபிஎஸ் வேகம் என்பது பதிவிறக்கம் (download) மற்றும் பதிவேற்றம் (upload) ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.

ஃபைபர் (Fiber) திட்டத்தில் வணிக ரீதியான டேட்டா பயன்பாட்டு லிமிட் 3.3டிபி ஆகவும், ஏர்ஃபைபர் (AirFiber) திட்டத்தில் 1டிபி ஆகவும் உள்ளது. உ-ங்கள் பகுதியில் ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் ஆகிய இரண்டு சேவைகளும் கிடைத்தால், ஃபைபர் இணைப்பையே தேர்ந்தெடுக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்; ஏர்டெல் நிறுவனமும் கூட இதே பரிந்துரையை தான் வழங்குகிறது

Best Mobiles in India

English summary
Jio Introduced New Rs 798 Data Sachet for Broadband Users Offers 40 Days Validity 40GB Data ZEE5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X