Home
News

Jio அம்பானி ருத்ர தாண்டவம்.. இனி மொபைலில் கேபிள் TV.. மாதம் ரூ.55 போதும்.. 1000 சேனல்கள், OTT, டேட்டா!

தங்கள் ஸ்மார்ட்போன்களிலேயே டிவி சேனல்களை (TV Channels) பார்க்க விரும்பும் பயனர்களுக்காக, ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் ஒரு புதிய மற்றும் மலிவு விலை பொழுதுபோக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அது ஜியோடிவி ப்ரோ (JioTV Pro) திட்டம் ஆகும்.

30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை கொண்டுள்ள இந்த திட்டத்தின் விலை வெறும் ரூ.55 மட்டுமே ஆகும். இது ஜியோடிவி ஆப் (JioTV app) மூலம் 16-க்கும் மேற்பட்ட மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை பார்க்கும் வசதியை வழங்குகிறது. சுவாரசியமாக இத்திட்டம் ஜியோவின் ப்ரீபெய்ட் (prepaid) மற்றும் போஸ்ட்பெய்ட் (postpaid) வாடிக்கையாளர்கள் இருவருக்கும் கிடைக்கிறது.

Jio: இனி மொபைலில் கேபிள் TV.. மாதம் ரூ.55 போதும்!

ரூ.55 ஜியோடிவி ப்ரோ திட்டத்தின் விவரங்கள்: மேலே குறிப்பிட்டபடி, இத்திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை கொண்டுள்ளது மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட சேனல்களை பார்க்கும் வசதியை வழங்குகிறது. இத்திட்டத்தை வாங்கிய பிறகு, பயனர்கள் ஜியோடிவி ஆப்பிற்கு சென்று அனைத்து நேரலை டிவி சேனல்களையும் அணுகலாம்.

முன்பு லாக்இன் (login) செய்யாமலேயே ஜியோடிவி ஆப்பில் லைவ் சேனல்களை பார்க்க முடிந்தாலும், இத்திட்டம் ஆக்டிவ் ஆக உள்ள அனைத்து பிரீமியம் சேனல்களையும் அணுகும் வசதியை வழங்குகிறது; இதில் ஜியோஸ்டார் (JioStar), சோனி எண்டர்டெயின்மெண்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network) மற்றும் வார்னர் ப்ரோஸ். டிஸ்கவரி (Warner Bros. Discovery) ஆகிய எச்டி சேனல்களும் அடங்கும்.

இருப்பினும், ஜியோஸ்டார் மற்றும் சோனியின் லைவ் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். டிவி சேனல்களை தவிர, ஜியோடிவி ப்ரோ திட்டத்தில் மொத்தம் 10எம்பி டேட்டாவும் வழங்கப்படுகிறது; இது மிக குறைந்த அளவாக இருந்தாலும், உங்கள் முதன்மை ரீசார்ஜ் திட்டம் காலாவதியாகும் சூழலில் பயனுள்ளதாக அமையலாம். பயணத்தின்போதோ அல்லது டிவிக்கு அருகில் இல்லாத நேரத்திலோ உங்களுக்கு பிடித்த டிவி சேனலை பார்க்க விரும்பினால், ஏராளமான சேனல்கள் மற்றும் மலிவு விலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை நீங்கள் பரிசீலிக்கலாம்.

லைவ் டிவி சேனல்கள் மட்டுமின்றி, சோனி லைவ் (Sony LIV), ஜீ5 (ZEE5) மற்றும் எம்எக்ஸ் பிளேயர் (MX Player) போன்ற ஓடிடி ஆப்களின் கன்டென்ட்களையும் இந்த ஆப் வழங்குகிறது. அந்த வகையில், ஜியோவின் (Jio) சேவைகளில் இந்த திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க வரவாகும். இதில் பிரீமியம் விளையாட்டு சேனல்கள் இல்லையென்றாலும், ரீசார்ஜ் திட்டத்திற்காக அதிக பணம் செலவழிக்காமல் முழுமையான டிவி பொழுதுபோக்கை விரும்பும் பார்வையாளர்களுக்கு இது ஏற்றதாக அமைகிறது.

ஏர்டெல் (Airtel) போன்ற நிறுவனங்களும் தங்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் (Airtel Xstream) ஆப் மூலம் நேரலை டிவி சேனல்களை வழங்கினாலும், ஜியோ மலிவு விலையில் எச்டி தரத்திலான சேனல்களை வழங்குவதன் மூலம் முன்னிலை வகிக்கிறது; இது பணத்திற்கு ஏற்ற சிறந்த மதிப்பை அளிக்கும் ஒரு சேவையாகவும் திகழ்கிறது.

ரூ.55 ஜியோடிவி ப்ரோ திட்டத்தை ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவது எப்படி?
- உங்கள் ஸ்மார்ட்போனில் மைஜியோ ஆப்பை திறக்கவும்.
- பாட்டம் டேப்பில் இருந்து ரீசார்ஜ் (Recharge) என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர் எண்டர்டெயின்மெண்ட் பிளான்ஸ் (Entertainment Plans) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
- அங்கே ரூ.55 திட்டத்தைக் காணலாம்.
- கடைசியாக பை (Buy) என்பதை தேர்ந்தெடுத்து, உங்களுக்கு விருப்பமான கட்டண முறையை பயன்படுத்தி பணம் செலுத்தவும்.

Best Mobiles in India

English summary
Jio introduced new Rs 55 JioTV Pro Plan With 1000 live TV channels OTT 15MB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X