Home
News

வெறும் ரூ.39 முதல் ஐஎஸ்டி ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்த Jio.. என்னென்ன நன்மைகள்? வேலிடிட்டி?

ஜியோ (jio) நிறுவனம் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் புதிதாக சர்வதேச (ISD) ரீசார்ஜ் பேக்குகளை அறிவித்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய சர்வதேச (ISD) ரீசார்ஜ் பேக்குகளின் விலை ரூ.39 முதல் துவங்கி அதிகபட்சம் ரூ.99 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஐஎஸ்டி மினிட் பேக் என்று அழைக்கப்படும் இந்த புதிய திட்டங்கள் பயனர்களுக்கு எவ்வித கூடுதல் பலன்களும் இன்றி குறிப்பிட்ட நிமிடங்களுக்கு மட்டும் சர்வதேச அழைப்புகளை பேச அனுமதிக்கிறது. சரி இப்போது இந்த திட்டங்களின் விவரங்களைப் பார்க்கலாம்.

வெறும் ரூ.39 முதல் ஐஎஸ்டி ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்த Jio..

ஜியோ ரூ.39 ஐஎஸ்டி பேக் (Jio Rs 39 ISD Pack) மூலம் 30 நிமிடங்கள் வரை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் உள்ள எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளலாம். அதேபோல் ஜியோவின் ரூ.49 ஐஎஸ்டி பேக் (Jio Rs 49 ISD Pack) மூலம் வங்கதேசத்திற்கு 20 நிமிடங்கள் வரை பேசலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.59 ஐஎஸ்டி பேக் ( Jio Rs 59 ISD Pack) மூலம் 15 நிமிடங்கள் வரை சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங் காங் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அடுத்து ஜியோ நிறுவனத்தின் ரூ.69 ஐஎஸ்டி பேக் (Jio Rs 69 ISD Pack)மூலம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு 15 நிமிடங்களுக்குப் பேசலாம்.

ஜியோவின் ரூ.79 ஐஎஸ்டி பேக் (Jio Rs 79 ISD Pack) மூலம் 10 நிமிடங்கள் வரை பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ளலாம். அதன்பின்பு ஜியோ நிறுவனத்தின் ரூ.89 ஐஎஸ்டி பேக் (Jio Rs 89 ISD Pack) மூலம் சீனா, ஜப்பான் மற்றும் பூடானுக்கு 15 நிமிடங்கள் வரை அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் ரூ.99 ஐஎஸ்டி பேக் (Jio Rs 99 ISD Pack) மூலம் அரபு அமீரகம், சவுதி அரேபியா, துருக்கி, குவைத் மற்றும் பஹ்ரைனுக்கு பத்து நிமிடங்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக இந்த சர்வதேச (ISD) ரீசார்ஜ் பேக்குகள் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இந்த திட்டங்களின் வேலிடிட்டி ஏழு நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோ ஒரு வருடம் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை இப்போது பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio rs 3999 prepaid plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும் கிடைக்கும். இதுதவிர ஃஃபேன் கோட் (Fan Code) என்கிற தளத்திற்கான இலவச அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

வெறும் ரூ.39 முதல் ஐஎஸ்டி ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்த Jio..

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.3999 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகளை இந்த திட்டத்தில் பெறமுடியும்.

மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.3999 திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.

photo credit: tv9marathi

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio introduced new ISD packs for international calling to its users: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X