Jio கஸ்டமர்களை இனி கையில் பிடிக்க முடியாதே.. ரூ.200 க்கு 90 நாட்கள்.. புதிய கிரிக்கெட் பிளான் அறிமுகம்!
ஜியோ (Jio) கஸ்டமர்களை இனி கையில் பிடிக்க முடியாதே என்று கூறும் அளவிலான விலை மற்றும் நன்மைகளுடன்.. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.200 க்குள் ஒரு புதிய கிரிக்கெட் பிளானை (Jio New Cricket Plan) அறிமுகம் செய்து உள்ளது.
பெயர் குறிப்பிடுவது போலவே ஜியோவின் இந்த புதிய கிரிக்கெட் பிளான் ஆனது வரவிருக்கும் ஐபிஎல் 2025 போட்டிகள் மற்றும் நடைபெற்று கொண்டிருக்கும் டபுள்யூபிஎல் 2025 போட்டிகள் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் ஆகியவைகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உதவும் திடமாகவும் ஒரு டேட்டா-ஒன்லி ரீசார்ஜ் ஆகும்.

இதன்கீழ் உங்களுக்கு மூன்று மாத காலத்திற்கான (90 நாட்களுக்கான) ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கும். இதோடு சேர்த்து 90 நாட்களுக்கு 15ஜிபி அளவிலான 4ஜி/5ஜி டேட்டாவும் கிடைக்கும். இதன்கீழ் கிடைக்கும் இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவானது விளம்பர ஆதரவு உடன் வரும் மொபைல் சந்தா என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
இந்த சாந்தாவின் கீழ் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்கள் வழியாக ஒரு நேரத்தில் டிவைஸ் வழியாக 720பி என்கிற ரெசல்யூஷனின் கீழ் ஜியோ ஹாட்ஸ்டார் கன்டென்ட்களை ஸ்ட்ரீமிங் செய்யலாம். நினைவூட்டும் வண்ணம் ஜியோ ஹாட்ஸ்டார் சேவையின் கீழ் கிடைக்கும் 3 மாத கால மொபைல் சந்தாவின் விலை ரூ.149 ஆகும்
அதாவது ரூ.195 கிரிக்கெட் பிளான் ஆனது கூடுதலாக வெறும் ரூ.46 க்கு 15ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது என்று அர்த்தம். இந்த டேட்டா கிரிக்கெட் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக 4ஜி ஸ்மார்ட்போன் அல்லது அன்லிமிடெட் 5ஜி டேட்டா இல்லாத டேட்டா பேக்கை பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஜியோவின் புதிய ரூ.195 கிரிக்கெட் பிளான் ஆனது ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை உள்ளடக்கிய இரண்டாவது ஜியோ ரீசார்ஜ் திட்டமாகும். இதற்கு முன்பாகவே ரூ.949 திட்டம், 90 நாட்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை தொகுத்து வழங்குகிறது. இது 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் டெய்லி 2ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட்வாய்ஸ் கால்கள், 5ஜி டேட்டா நன்மை மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.
வேறு எந்தெந்த திட்டங்களின் கீழ் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கும்? ஜியோஃபைபர் ரூ.999 திட்டத்தின் கீழ் கிடைக்கும். இது 150 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை வழங்கும் இந்த திட்டத்துடன் அமேசான் பிரைம் லைட் மற்றும் 8 மற்ற ஓடிடி சந்தாக்களுடன் சேர்த்து இனிமேல் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக கிடைக்கும்.
அடுத்ததாக ஜியோஃபைபர் ரூ.1,499 திட்டம் உள்ளது. இது 300 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை வழங்கும் இந்த திட்டத்துடன் அமேசான் பிரைம் லைட் மற்றும் 8 மற்ற ஓடிடி சந்தாக்களுடன் சேர்த்து இனிமேல் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக கிடைக்கும்.
மேலும் ஜியோஃபைபர் ரூ.2,499 திட்டமும் இந்த பட்டியலில் உள்ளது. இது 500 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை வழங்கும் இந்த திட்டத்துடன் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் லைட் மற்றும் 8 மற்ற ஓடிடி சந்தாக்களுடன் சேர்த்து இனிமேல் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக கிடைக்கும்.
அடுத்ததாக ஜியோஃபைபர் ரூ.3,999 திட்டம் உள்ளது. இது 1 ஜிபிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை வழங்கும் இந்த திட்டத்துடன் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் லைட் மற்றும் 8 மற்ற ஓடிடி சந்தாக்களுடன் சேர்த்து இனிமேல் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக கிடைக்கும்.
கடைசியாக ஜியோஃபைபர் ரூ.8,499 திட்டம் உள்ளது. இது 1 ஜிபிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் 6600 ஜிபி டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை வழங்கும் இந்த திட்டத்துடன் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் லைட் மற்றும் 8 மற்ற ஓடிடி சந்தாக்களுடன் சேர்த்து இனிமேல் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக கிடைக்கும். ஜியோஃபைபர் சேவையின் கீழ் கிடைப்பதை போலவே ஜியோ ஏர்ஃபைபர் ரூ.599, ஜியோ ஏர்ஃபைபர் ரூ.899 திட்டம் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் ரூ.1199 திட்டங்களின் கீழும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications