Home
News

அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!

நேற்று வரையிலாக.. வெறும் 1 ரூபாய் 96 பைசாவுக்கு 1ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா கிடைக்குமென்று கூறியிருந்தால் நாங்களே நம்பி இருக்க மாட்டோம். ஆனால் இன்று நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் 1ஜிபி டேட்டாவை 1 ரூபாய் 96 பைசாவிற்கு வழங்கும் ஒரு புதிய ஜியோ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் அதன் கிரிக்கெட் பிளான் (Cricket Plan) தொகுப்பின் கீழ் புதிய ரூ.49 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஜியோவின் புதிய ரூ.49 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதன் வேலிடிட்டி என்ன? இதோ விவரங்கள்:

ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம

ஜியோ ரூ.49 கிரிக்கெட் பிளானின் (Jio Rs.49 Cricket Plan) நன்மைகள்: ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் உங்களுக்கு 25ஜிபி ஹைஸ்பீட் டேட்டா (25GB High Speed Data) கிடைக்கும். அதாவது 1 ரூபாய் 91 பைசா என்கிற விகிதத்தில் 1ஜிபி டேட்டா கிடைக்கும் அல்லது சுமார் ரூ.4 க்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும்.

டேட்டா நன்மையை தவிர்த்து இந்த திட்டத்தின் கீழ் வேறு எந்த நன்மைகளும்.. அதாவது அன்லிமிட்ட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) போன்ற வழக்கமான நன்மைகள், ஜியோ ஆப்ஸ் (Jio Apps) நன்மைகள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) நன்மைகள் என எதுவும் கிடைக்காது. இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் இதுவொரு டேட்டா வவுச்சர் (Data Voucher) ஆகும்.

ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம

ஜியோ ரூ.49 கிரிக்கெட் பிளானின் வேலிடிட்டி: இந்த திட்டம் 1 நாள் என்கிற வேலிடிட்டி (1 Day Validity) உடன் வருகிறது. அதாவது இதுவொரு டேட்டா வவுச்சராக இருந்தாலும் கூட, இதற்கு வேலிடிட்டி உள்ளது. இருந்தாலும் கூட இதை வெறுமனே ரீசார்ஜ் செய்ய முடியாது. உங்கள் ஜியோ நம்பரில் ஆக்டிவ் ஆக ஒரு பேஸிக் ரீசார்ஜ் (Active Basic Recharge) இருந்தால் மட்டுமே ரூ.49-ஐ ரீசார்ஜ் செய்ய முடியும்.

மேலும் ரூ.49 திட்டமானது ஜியோ நிறுவனத்தின் கிரிக்கெட் சலுகையின் கீழ், "அன்லிமிடெட் டேட்டா" என்று குறிக்கப்பட்டிருந்தாலும், இது உண்மையில் ஒரு அன்லிமிடெட் பிளான் அல்ல. உங்களுக்கு கிடைக்கும் 25ஜிபி ஹை ஸ்பீட் டேட்டாவை தீர்த்த பின்னர், அன்லிமிட்ட் 5ஜி டேட்டா சலுகை எதுவும் கிடைக்காது. மாறாக 64கேபிபிஎஸ் ஸ்பீடின் கீழ் மட்டுமே டேட்டாவை பயன்படுத்த முடியும்.

ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம

இதே போன்ற ஒரு திட்டத்தை பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்திடமும் உள்ளது. ஏர்டெல் ரூ.49 திட்டமானது 1 நாள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 20ஜிபி டேட்டாவை (20GB Data with 1 Day Validity) வழங்குகிறது. எப்படி பார்த்தாலும் ஜியோவின் ரூ.49 ஆனது ஏர்டெல்லின் ரூ.49-ஐ விட 5ஜிபி அதிக டேட்டாவை வழங்குகிறது.

ஒருவேளை உங்களுக்கு 25ஜிபி டேட்டாவை விட அதிகமான டேட்டா தேவை என்றால், ஜியோவின் கிரிக்கெட் பிளான் தொகுப்பின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.222 திட்டத்தை (Jio Rs.222 Plan) தேர்வு செய்யலாம். இந்த திட்டமானது 50ஜிபி டேட்டாவுடன் வருகிறது மற்றும் இதன் வேலிடிட்டியானது, ஆக்டிவ் ஆக உள்ள உங்களுடைய பேஸிக் ரீசார்ஜ் உடன் பொருந்தும்.

இதுதவிர்த்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் ரூ.444 மற்றும் ரூ.667 மதிப்பிலான டேட்டா வவுச்சர்களும் உள்ளன. இவ்விரு திட்டங்களும் 60 நாட்கள் மற்றும் 90 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் முறையே 100ஜிபி மற்றும் 150ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. இவ்விரு திட்டங்களும் 2024 ஆம் ஆண்டுக்கான முழு ஐபிஎல் சீசனையுமே (2024 IPL Season) பார்க்க உதவலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Introduced New Cricket Offer Plan gives 25GB High Speed Data with 1 Validity For Just Rs 49
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X