சாரே கொல மாஸ் சாரே.. புது வகையான இலவச நன்மையுடன் 5 புதிய Jio திட்டங்கள் அறிமுகம்.. அம்பானியா கொக்கா!
"கண்ணா.. நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா!" என்று மற்ற டெலிகாம் நிறுவனங்களை பார்த்து கூறும்படியாக, முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, புது வகையான இலவச நன்மையுடன் 5 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ நிறுவனமானது, டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற வழக்கமான நன்மைகளுன் சேர்த்து ஜியோசாவ்ன் ப்ரோ சந்தாவை (JioSaavn Pro Subscription) இலவசமாக வழங்கும் ஐந்து புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அறியாதோர்களுக்கு ஜியோசாவ்ன் என்பது ஜியோவிற்கு சொந்தமான ம்யூசிக் ஸ்ட்ரீமிங் ஆப் (Music Streaming app) ஆகும்.

அதிலும் குறிப்பாக ஜியோசாவ்ன் ப்ரோ என்பது ஜியோசாவ்ன் ஆப்பில் அணுக கிடைக்கும் விளம்பரமில்லா பதிப்பாகும். இது விளம்பரமில்லாத இசை அனுபவத்தை மட்டுமின்றி, வரம்பற்ற பதிவிறக்கங்கள் (Unlimited Downloads), வரம்பற்ற ஜியோட்யூன்ஸ் (Unlimited JioTunes) மற்றும் உயர்தர ஆஃப்லைன் இசைக்கான அணுகல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் வழங்கும்.
புதிதாக அறிமுகமான 5 ஜியோ திட்டங்களின் விலை மற்றும் நன்மைகள்: முதல் திட்டத்தின் விலை ரூ.269 ஆகும். இது 28 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவையுடன் சேர்த்து தினமும் 1.5ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. அடுத்ததாக உள்ள ரூ.529 ப்ரீபெய்ட் திட்டமானது ரூ.269 திட்டத்தில் உள்ள அதே பலன்களுடன் வருகிறது, ஆனால் 56 நாட்கள் செல்லுபடியாகும்.
மூன்றாவதாக உள்ள திட்டத்தின் விலை ரூ.739 ஆகும். இதுவும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவையுடன் சேர்த்து தினமும் 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். நான்காவதாக ரூ.589 திட்டம் உள்ளது, இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களுடன் வருகிறது.
ரூ.589 திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இந்த பட்டியலில் கிடையாக உள்ளது .789 திட்டமாகும். இதுவும் இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஜியோசாவ்ன் ப்ரோ சந்தாவை பெறுவது எப்படி? மேற்கண்ட 5 புதிய ஜியோ ரீசார்ஜ்களுமே கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm) மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஆப்பை தவிர்த்து அனைத்து ரீசார்ஜ் தளங்களிலும் அணுக கிடைக்கின்றன.
இந்த 5 திட்டங்களில் ஏதேனும் ஒன்றை ரீசார்ஜ் செய்த பிறகு, உங்கள் ஸ்மார்ட்போனில் ஜியோசாவ்ன் ஆப்பை பதிவிறக்கம் செய்யவும். பின்னர் உங்கள் ஜியோ மொபைல் எண்ணை பயன்படுத்தி ஜியோசாவ்ன் ஆப்பிற்குள் லாக்-இன் செய்யவும். அவ்வளவு தான் ஜியோசாவ்ன் ப்ரோவின் கீழ் கிடைக்கும் நன்மைகளை அனுப்பிவைக்க தொடங்குங்கள்.


Click it and Unblock the Notifications