குருநாதா.. இதுலயும் கை வச்சிடீங்களா.. சைலன்ட் ஆக ரூ.48, ரூ.98 க்கு அறிமுகமான புது Jio திட்டங்கள்!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் ஆனது "வித்தியாசமான" ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இவைகள் மொபைல் கேமிங் ஆர்வலர்களுக்கான ஜியோ கேம்ஸ் கிளவுட் (Jio Games Cloud) அணுகலை வழங்குகின்றன
ரூ.48 முதல் தொடங்கும் இந்த திட்டங்கள் - குறுகிய கால கிளவுட் கேமிங் பாஸ்கள் முதல் டேட்டா, வாய்ஸ் மற்றும் ஃபேன்கோட் மற்றும் ஜியோடிவி போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான அணுகல் உட்பட பல நன்மைகளை வழங்குகின்றன. இந்தியர்கள் மத்தியில் கிளவுட் அடிப்படையிலான மொபைல் கேமிங் மீதான ஆற்வம் அதிகரித்து வருவதை "பணமாக்கும்" நோக்கத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5 திட்டங்களின் விலைகள் மற்றும் நன்மைகள் குறித்த விவரங்கள் இதோ:

1. ஜியோ ரூ.48 கேமிங் ஆட்-ஆன் திட்டம்: இந்த தொகுப்பில் மிகவும் மலிவு விலை நிர்ணயம் கொண்ட திட்டம் ரூ.48 கேமிங் ஆட்-ஆன் பிளான் தான். இது ஜியோ கேம்ஸ் கிளவுட்டுக்கு 3 நாள் சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டம் எந்த டேட்டா அல்லது குரல் / எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்காது; இது ஜியோ கேம்ஸை அணுகுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள திட்டமாகும்.
2. ஜியோ ரூ.98 கேமிங் ஆட்-ஆன் திட்டம்: ரூ.98 மதிப்புள்ள இந்த கேமிங் ஆட்-ஆன் ஜியோ கேம்ஸ் கிளவுட் சந்தாவை 7 நாட்களுக்கு வழங்குகிறது இதுவும் எந்த டேட்டா அல்லது குரல் / எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்காது; இது ஜியோ கேம்ஸை அணுகுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள திட்டமாகும்.
3. ஜியோ ரூ.298 கேமிங் ஆட்-ஆன் திட்டம்: ரூ.298 இன் கீழ் பயனர்கள் 28 நாட்கள் ஜியோ கேம்ஸ் கிளவுட் அணுகலையும் 3ஜிபி அதிவேக டேட்டாவையும் பெறுவார்கள். டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வாய்ஸ் அல்லது எஸ்எம்எஸ் சநன்மைகள் இருக்காது.
4. ஜியோ ரூ.495 சந்தா திட்டம்: இந்த திட்டம் கேமிங்கை விட அதிகமாக வழங்குகிறது. ஜியோ கேம்ஸ் கிளவுட், ஃபேன்கோட், ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் ஆகியவற்றிற்கான 28 நாள் சந்தாவை வழங்குகிறது. மேலும் பயனர்கள் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி மற்றும் 5 ஜிபி கூடுதல் அதிவேக டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெறுவார்கள். கூடவே 90 நாள் ஜியோசினிமா சந்தா மற்றும் 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜும் கிடைக்கும்.
5. ஜியோ ரூ.545 கேமிங் திட்டம்: இந்த திட்டத்தில் 2 ஜிபி தினசரி டேட்டா + 5 ஜிபி போனஸ், ஜியோ கேம்ஸ் கிளவுட், ஃபேன்கோட், ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் ஆகிய நன்மைகள் 28 நாட்களுக்கு கிடைக்கும். மேலும் இது ரூ.495 திட்டத்தை போலவே வாய்ஸ்மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை தக்கவைத்து கொள்கிறது. கூடுதலாக, பயனர்கள் 90 நாட்களுக்கு ஜியோசினிமா மொபைல்/டிவி சந்தா மற்றும் 50 ஜிபி ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜையும் பெறுவார்கள்
ஜியோ கேம்ஸ் கிளவுட்டில் மிஸ் பண்ணவே கூடாத 10 பெஸ்ட் கேம்ஸ்:
டிஸ்னி இன்ஃபினிட்டி 3.0 கோல்ட் எடிஷன்
லார்ட்ஸ் ஆஃப் தி ஃபாலன் - கேம் ஆஃப் தி இயர் எடிஷன்
ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அன்லீஷ்ட் - அல்டிமேட் சித் எடிஷன்
கோஸ்ட்ரன்னர்
லெகோ ஸ்டார் வார்ஸ்: தி கம்ப்ளீட் சாகா
செயிண்ட்ஸ் ரோ: கேட் அவுட் ஆஃப் ஹெல்
ரைடு 4
மோட்டோ ரேசர் 4
டிஸ்னி பிக்சர் வால்-இ
ஆஸ்டரிக்ஸ் & ஒபெலிக்ஸ் எக்ஸ்எக்ஸ்எல் 3 - தி கிரிஸ்டல் மென்ஹிர்


Click it and Unblock the Notifications








