Home
News

ஐபிஎல் 2020: அட்டகாசமான இரண்டு பீரிபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.!

ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஜியோ நிறுவனமும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

 ஜியோ நிறுவனம் டிஸ்னி

அதன்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஜபி சந்தாவை இலவசமாக வழங்கும் அட்டகாசமான புதிய இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டங்களின் விலை ரூ.499 மற்றும் ரூ.777 -ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ய்யப்பட்ட ரூ.499

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ரூ.499 திட்டமானது ஒரு டேட்டா பேக் என்றாலும், ரூ.777 என்பது ஒரு காம்போ திட்டமாகும், இது வாய்ஸ் கால் நன்மையையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வேண்டும் என்றால் ஜியோ நிறுவனம் அதன் பிரபலமான கிரிக்கெட் தன் தன

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஜியோ நிறுவனம் அதன் பிரபலமான கிரிக்கெட் தன் தன தன் சலுகையையும் திரும்பக் கொண்டு வந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

திய ரீசார்ஜ் திட்டங்களை

அதன்படி இந்த புதிய ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்தும் பயனர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) வரவிருக்கும் கிரிக்கெட் சீசனை ஹாட்ஸ்டாரில் வழியாக லைவ் ஸ்ட்ரீம் செய்யலாம். வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் 2020போட்டிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜியோ ரூ.499-திட்டம்

ஜியோ ரூ.499-திட்டம்

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.499-திட்டம் ஆனது ஒரு டேட்டா பேக் ஆகும். ஏனெனில் இது எந்த குரல் அழைப்புமற்றும் எஸ்எமஎஎஸ் நன்மைகளையும் வழங்காது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூ.399 மதிப்புள்ள டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஜபியின் ஓராண்டு சந்தாவை இலவசமாக பெறுவார்கள். மேலும் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மைகளுடன் 56நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த ரூ.499-திட்டம்.

ஜியோவின் ரூ.777-திட்டம்

ஜியோவின் ரூ.777-திட்டம்

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.777-திட்டம் ஆனது ஒரு காலாண்டு திட்டமாகும். இது 84நாட்கள் என்கிற வேலிடிட்டி-ஐ அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.399மதிப்புள்ள டிஸ்னி+ஹாட்ஸ்டார் வி.ஜ.பியின் ஒரு வருட சந்தாவை இலவசமாக பெறுவார்கள்.

ஜியோவின் ரூ.777-திட்டம்

மேலும் ஜியோவின் ரூ.777-திட்டத்தில் மொத்தம் 131 ஜிபி அளவிலான டேட்டாவையும் (ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா தரவு + 5 ஜிபி டேட்டா), வரம்பற்ற குரல் அழைப்பு (வரம்பற்ற ஜியோ டூ ஜியோ மற்றும் ஜியோ அல்லாத ஜியோ 3000 FUP நிமிடங்கள்) மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை 84நாட்களுக்கு பெறமுடியும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் விதிமுறைகள் மற்று

குறிப்பாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி இது பிரத்யேக ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்கள், வரம்பற்ற நேரடி விளையாட்டுகள்,சமீபத்திய பாலிவுட் மற்றும் சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு இலவச அணுகலை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஜபி

சுருக்கமாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஜபி சந்தாவுடன் வரும் பிற ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களும் உள்ளன, அது ரூ.401(20நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது) மற்றும் ரூ.2599(ஒரு வருடம் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது) இவை அனைத்துமே ஐபிஎல் 2020 சீசனைக் குறிவைத்தே களமிறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio Launches New Rs. 499, Rs. 777 Prepaid Plans With 1-Year Disney+ Hotstar VIP Subscription: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X