அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் 5 வருடத்திற்கு இலவசம்.! ஜியோவின் புதிய திட்டம்.!
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஸ்டார் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஐந்து வருட ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஸ்டார் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஐந்து வருட ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டணியின் துவக்கமாக ஜியோ மற்றும் ஸ்டார் இந்தியா நிறுவனம், இந்தியாவில் நடக்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஜியோ டிவி மற்றும் ஹாட்ஸ்டாரர் மூலம் பயனர்களுக்கு நேரடியாக வழங்கப் போகிறதாம்.

அனைத்து கிரிக்கெட் போட்டி
இந்த புதிய கூட்டணி சேவையில் கீழ் அனைத்து டி 20, ஒரு நாள் (ஒருநாள் சர்வதேசப் போட்டி), சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மற்றும் பி.சி.சி.ஐயின் பிரீமியர் உள்நாட்டுப் போட்டிகள் என அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒளிபரப்பப் படுமென்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிவேக டேட்டா
ரிலையன்ஸ் ஜியோ இந்தச் சேவையை பயனர்களுக்கு வழங்க, முதல் முறையாக கிரிக்கெட் தயாரிப்பு, ஸ்ட்ரீமிங் மேடை மற்றும் அதிவேக டேட்டா நெட்வொர்க்கிங் போன்ற தொழில்நுட்ப வசதியுடன் இந்திய வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த முறையில் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.

ஜியோ மற்றும் ஸ்டார் இந்தியா
ஜியோ மற்றும் ஸ்டார் இந்தியாவிற்கு இடையேயான கூட்டணி ஐந்து ஆண்டு என்றும், இந்தக் காலகட்டத்தில் நாடாகும் அனைத்து இந்திய அணியின் கிரிக்கெட் போட்டிகளும் ஜியோ டிவியின் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரித்துள்ளது.

ஜியோ டிவி
இந்த ஆண்டில் நடையற்ற ஐபிஎல் போட்டிகளை, ஜியோ நிறுவனம் ஹாட்ஸ்டருடன் கூட்டு சேர்ந்து, ஜியோ டிவி மூலம் அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் இலவச ஸ்ட்ரீமிங் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த ஒப்பந்தம் இந்திய பிரீமியர் லீக்கிற்கு மட்டுமே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லைவ் ஸ்ட்ரீம்ங்
தற்பொழுது ஜியோ ஐந்து ஆண்டு கால ஒப்பந்தத்தை ஸ்டார் இந்தியாவுடன் உருவாக்கியுள்ளது. அதாவது இனிமேல் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஜியோ டிவியில் ஜியோ நிறுவனம் லைவ் ஸ்ட்ரீம்ங் செய்யுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications