உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்!

|

உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலான மக்கள் இணையத்தில் ஈடுபாட்டுடன் இருக்கும் நிலையில் , அதில் 12 சதவிகிதத்துடன் இந்தியா இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளதாக இணைய போக்குகளின் வருடாந்திர அறிக்கை கடந்த செவ்வாயன்று தெரிவித்துள்ளது. உலகளவில் அனைத்து இணைய பயனர்களில் 21 சதவீதத்துடன் சீனா மிகப்பெரிய பயனர் அடிதளத்தை கொண்டுள்ளது மற்றும் அமெரிக்கா 8 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலக மக்கள்தொகையில் 49% ஆகும்

உலக மக்கள்தொகையில் 49% ஆகும்

2018ஆம் ஆண்டில் ஆன்லைனில் ஆக்டிவாக உள்ளவர்களின் எண்ணிக்கை 3.8 பில்லியன் ஆகும். இது உலக மக்கள்தொகையில் 51% ஆகும். முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 3.6 பில்லியன் ஆக இருந்தது மற்றும் அது உலக மக்கள்தொகையில் 49% ஆகும்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

இந்தியாவில் இணைய பயனர்களின் வளர்ச்சியில், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனம் அறிமுகப்படுத்திய மலிவுவிலை தரவு திட்டங்கள் மற்றும் மலிவான ஸ்மார்ட்போன்கள் போன்றவை முக்கிய பங்காற்றுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

ஆன்லைன்-ஆஃப்லைன்

ஆன்லைன்-ஆஃப்லைன்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளுடன் ரிலையன்ஸ் ரீடைஸ்-ன் சில்லறை விற்பனை கடைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு கலப்பின, ஆன்லைன்-ஆஃப்லைன் வர்த்தக தளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஒரே ஆண்டில் மொத்தம் 307 மில்லியன் சந்தாதாரர்களுடன் அதன் வளர்ச்சி இரட்டிப்பானது.

350 மில்லியன் வாடிக்கையாளர்கள்

350 மில்லியன் வாடிக்கையாளர்கள்

"இந்த தளமானது ரிலையன்ஸ் ரீடைல் கடைகளின் 350 மில்லியன் வாடிக்கையாளர்கள், 307 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள 30 மில்லியன் சிறு வணிகர்கள் என அனைவரையும் ஒருங்கிணைக்கும்" என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி என்று கூறியாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மலிவான தரவு

மலிவான தரவு

ஜியோவின் இலவச குரல் அழைப்பு மற்றும் மலிவான தரவு திட்டங்கள், ஒரே வருடத்தில் இணைய தரவுப் பயன்பாட்டை இருமடங்காக்க உதவியுள்ளது என அறிக்கை கூறுகிறது.

அதிரடியாக பிளிப்கார்ட்டில் விலை குறைப்பு: ரூ10000 முதல் ஸ்மார்ட் டிவிகள்.!அதிரடியாக பிளிப்கார்ட்டில் விலை குறைப்பு: ரூ10000 முதல் ஸ்மார்ட் டிவிகள்.!

 சுமார் 2 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்

சுமார் 2 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்

ஆன்லைன் கல்வி மற்றும் கற்றல் தளங்கள் பிரிவில், இந்தியாவின் பைஜூ 9-17 வயதிலுள்ள மாணவர்களுக்கு வீடியோ அடிப்படையிலான வகுப்புகளை வழங்குகிறது மற்றும் இதற்கு சுமார் 2 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர் என இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இ காமர்ஸ் பிரிவில்

இ காமர்ஸ் பிரிவில்

சர்வதேச அளவில் இ காமர்ஸ் பிரிவில் கடந்த ஆண்டின் 12.1%ஐ காட்டிலும் 2018 ஆம் ஆண்டு 12.4% வரை வளர்ச்சியடைந்தது. அமெரிக்க சில்லறை விற்பனையின் 15 சதவீதமும் இகாமர்ஸ் ல் அடக்கம். இணையம் விளம்பர செலவினங்கள் முந்தைய ஆண்டின் 21 சதவிகிதத்தை காட்டிலும் 2018ல் 22% வளர்ச்சி உள்ளது.இதில் கூகுள் மற்றும் பேஸ்புக்கின் பங்கு மிகமுக்கியமானது. கூகுளின் விளம்பர வருவாய் கடந்த ஒன்பது காலாண்டுகளை காட்டிலும் 1.4 மடங்கு அதிகரித்துள்ளது மற்றும் பேஸ்புக் வளர்ச்சி 1.9 மடங்காக உள்ளது. அதே நேரத்தில் அமேசான் மற்றும் ஸ்னாப்சாட் ஆதிய புதிய நிறுவனங்களை சேர்த்தால் ஒருங்கிணைந்த வளர்ச்சி 2.6 மடங்காக அதிகரித்துள்ளது. இதேபோல் டிஜிட்டல் மீடியா பயன்பாடு 2018 ல் 7% வளர்ச்சியுடன் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பயன்பாட்டு இயக்கிகள் உலகளாவிய இணைய மற்றும் தொழில்நுட்ப தொழில்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்குவகிப்பதுடன் அங்கு முதலீடும் வலுவாக உள்ளது.

பிளிப்கார்ட்: மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!பிளிப்கார்ட்: மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

 பேஸ்புக், யூடியூப், ஸ்னாப்சாட் மற்றும் டிக்டாக்

பேஸ்புக், யூடியூப், ஸ்னாப்சாட் மற்றும் டிக்டாக்

உலகளாவிய அளவில் வீடியோ பார்ப்பதற்காக செலவழிக்கப்படும் நேரம் கடந்த ஆண்டை காட்டிலும் இரட்டிப்பாகியுள்ளது. பேஸ்புக், யூடியூப், ஸ்னாப்சாட் மற்றும் டிக்டாக் போன்ற வீடியோ தளங்களில் 1.5 பில்லியன் மாதாந்திர ஆக்டிவ் பயனர்கள் உள்ளனர். உலகளாவிய இண்டர்ஆக்டிவ் கேமர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 6% அதிகரித்து 2.4 பில்லியனாக உள்ளது., போர்ட்நைட் போன்ற மேக்ஸ் கடந்த ஆண்டு ஹிட் ஆகி 250 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது.

காணாமல் போன அப்போலோ கேப்யூல் : 50 ஆண்டுகளுக்கு பின் காணும் வாய்ப்பு!காணாமல் போன அப்போலோ கேப்யூல் : 50 ஆண்டுகளுக்கு பின் காணும் வாய்ப்பு!

Best Mobiles in India

English summary
jio India is home to worlds 2nd largest internet user base : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X